Sasirekha

Sasirekha

தாபங்களே… ரூபங்களாய்… - சசிரேகா

முன்னுரை
முற்பிறவியில் முக்தியடையாமல் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்துப் போன பெண் ஆன்மா ஒன்று மறுபிறவியில் பிறந்த நாயகியின் மூலம் தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் தனது ஆன்மாவிற்கு முக்தி கிடைக்கவும் செய்யும் போராட்டங்களால் நாயகிக்கு ஏற்பட்ட சோதனைகளும் நாயகன் அடைந்த பிரச்சனைகளும் அதோடு அந்த ஆன்மாவின் நிலைமை என்னவானது மற்றும் நாயகனும் நாயகியும் இறுதியில் என்னவானார்கள் என்பதை சொல்லும் கதையாகும். இக்கதை ஒரு பேய் கதை போன்று இருந்தாலும் இது ஒரு நல்ல ஆன்மாவின் காதல் கதையாகும் முற்பிறவியில் பிரிந்த காதலர்கள் இப்பிறவியில் சேர்ந்தார்களா சேர்ந்த போது ஏற்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பை கதையாக வடித்துள்ளேன் நன்றி 

உறவென்று வந்த காதல் - சசிரேகா

முன்னுரை
தன் தாயின் காதல் திருமணத்தால் பிரிந்து தனித்தனியாக விலகிச் சென்ற தாய் வழி உறவுகளின் குடும்பங்களை ஒன்று சேர்க்க கதாநாயகி எடுத்த சபதத்தால் அவள் நாயகனுடன் சேர்ந்து அவளுக்கு நடக்கும் பிரச்சனைகளையும் அவற்றை எவ்வாறு கடந்து போராடி பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்க்கிறாள் என்பதுமே இக்கதையின் கருவாகும்.

இதற்கு  பெயர்தான் காதலா!!!??? - சசிரேகா

அன்பான வாசகர்களே….
முதலில் உங்களிடம் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தொடர்ந்து எனது கதைகளை படித்து ஆதரவு தந்து என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நன்றிகள்.
பெரும்பாலும் எனது கதைகளில் நிறைய கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருக்கும் கூட்டுக்குடும்பம் சொந்தம் பந்தம் என ஏகப்பட்டவர்கள் அவர்களுக்கு ஏற்ப கதையில் கூடுதல் வசனங்கள் கூடுதல் கிளை கதைகள் என கதம்பமாக கதையை எழுதியிருப்பேன் ஆனால் இப்போது நான் எழுதியுள்ள இதற்கு பெயர்தான் காதலா!!!??? கதை உண்மையில் மாறுபட்டது.
இக்கதையில் பெரும்பாலும் வரும் கதாபாத்திரங்கள் வெறும் 5 நபர்கள்தான். இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் கதாநாயகன் சூர்யா அவனது தந்தை ரத்தினம் தாய் சரஸ்வதி மற்றும் கதாநாயகி ஹர்ஷவர்தினி அவளது தந்தை மகேஸ்வரன் ஆகும். இவர்கள் ஐவரை சுற்றியே கதை நகரும் முக்கியமாக நாயகன் நாயகிக்கு பெருமளவு கதையில் இடம் கொடுத்துள்ளேன் இதற்கு முன் எழுதிய கதைகளை விட இது சற்று வித்தியாசமான காதல் கதையாகும். கண்டிப்பாக இக்கதை தங்கள் அனைவரையும் கவரும் என எதிர்பார்க்கிறேன்
நன்றி
சசிரேகா
கதை முன்னுரை
அன்பிற்காக ஏங்கும் கதாநாயகி ஹர்ஷவர்தினிக்கு நாயகன் சூர்யாவிடமும் அவனது குடும்பத்தாரிடமும் கொட்டிக் கிடக்கும் அன்பை பெற அவள் போராடும் போராட்டத்தில் அவள் வெற்றி பெற்றாளா? உண்மையான காதலும் தாய்அன்பும் அவளுக்கு கிடைத்ததா? அல்லது கிடைக்காமல் போன தருணங்களில் அவளது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? அதிலிருந்து அவள் மீண்டாளா அவளது நிலைமை என்னவானது? என்பதை பற்றி சொல்வதே இக்கதையாகும்.

மாசில்லா உண்மைக் காதலே - சசிரேகா

முன்னுரை:

உறவுகளுக்குள் உள்ள பலம் பலவீனம் பற்றியும் என்னதான் சொந்தபந்தம் மேல் கோபம் வெறுப்பு இருந்தாலும் ரத்தபந்தம் என்றுமே உறவுகளை பிரியவிடாது என்பதை சொல்லும் கதையாகும்.

என் இதயம் கவர்ந்த தாமரையே - சசிரேகா

முன்னுரை:

பிறக்கும் போது ஏழையாக இருக்கலாம் ஆனால் இறக்கும் போதும் ஏழையாக இருந்தால் நீ ஒரு முட்டாள் என்ற வாசகத்தை மனதில் வைத்துக் கொண்டு வாழ்வில் முன்னேற துடிக்கும் கதாநாயகன் எதிர்பாராத விதமாக கதாநாயகியுடன் திருமணம் நடைபெறுகிறது.

நாயகனின் லட்சியத்திற்கும் உதவி புரிந்தும் அவனது மனதிலும் இடம் பிடிக்கவும் அவனது குடும்பத்திடம் நற்பெயர் எடுக்க கதாநாயகி எதிர்நோக்கும் பிரச்சனைகளும் இறுதியில் அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைத்ததா கதாநாயகனின் லட்சியமும் நிறைவேறியதா இல்லையா என்பதே இக்கதையாகும்.