Chillzee KiMo Books - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - சசிரேகா : Itharku peyar than kadhala!!!??? - Sasirekha

இதற்கு  பெயர்தான் காதலா!!!??? - சசிரேகா : Itharku peyar than kadhala!!!??? - Sasirekha
 

இதற்கு பெயர்தான் காதலா!!!??? - சசிரேகா

அன்பான வாசகர்களே….
முதலில் உங்களிடம் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தொடர்ந்து எனது கதைகளை படித்து ஆதரவு தந்து என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நன்றிகள்.
பெரும்பாலும் எனது கதைகளில் நிறைய கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருக்கும் கூட்டுக்குடும்பம் சொந்தம் பந்தம் என ஏகப்பட்டவர்கள் அவர்களுக்கு ஏற்ப கதையில் கூடுதல் வசனங்கள் கூடுதல் கிளை கதைகள் என கதம்பமாக கதையை எழுதியிருப்பேன் ஆனால் இப்போது நான் எழுதியுள்ள இதற்கு பெயர்தான் காதலா!!!??? கதை உண்மையில் மாறுபட்டது.
இக்கதையில் பெரும்பாலும் வரும் கதாபாத்திரங்கள் வெறும் 5 நபர்கள்தான். இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் கதாநாயகன் சூர்யா அவனது தந்தை ரத்தினம் தாய் சரஸ்வதி மற்றும் கதாநாயகி ஹர்ஷவர்தினி அவளது தந்தை மகேஸ்வரன் ஆகும். இவர்கள் ஐவரை சுற்றியே கதை நகரும் முக்கியமாக நாயகன் நாயகிக்கு பெருமளவு கதையில் இடம் கொடுத்துள்ளேன் இதற்கு முன் எழுதிய கதைகளை விட இது சற்று வித்தியாசமான காதல் கதையாகும். கண்டிப்பாக இக்கதை தங்கள் அனைவரையும் கவரும் என எதிர்பார்க்கிறேன்
நன்றி
சசிரேகா
கதை முன்னுரை
அன்பிற்காக ஏங்கும் கதாநாயகி ஹர்ஷவர்தினிக்கு நாயகன் சூர்யாவிடமும் அவனது குடும்பத்தாரிடமும் கொட்டிக் கிடக்கும் அன்பை பெற அவள் போராடும் போராட்டத்தில் அவள் வெற்றி பெற்றாளா? உண்மையான காதலும் தாய்அன்பும் அவளுக்கு கிடைத்ததா? அல்லது கிடைக்காமல் போன தருணங்களில் அவளது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? அதிலிருந்து அவள் மீண்டாளா அவளது நிலைமை என்னவானது? என்பதை பற்றி சொல்வதே இக்கதையாகும்.

 

 

டில்லி

காலை 9.00 மணியளவில்

புயல் போல தனது ஆபிசுக்குள் நுழைந்தாள் ஹர்ஷவர்தினி. அழகுக்கே பொறாமை வந்துவிடும் அளவு பேரழகியாய் இருந்தாள், ஜீன்ஸ் பேன்ட் சிவப்பு நிற குர்தாவில் அழகி போட்டியில் பங்குபெறும் அழகிகளுக்கு கூட சவால் விடும் அளவு வனப்பாக இருந்தாள்

காலில் அணிந்திருந்த கட் ஷுவும் ஸ்டைலாக நடக்கும் போது அவள் உடல் அசைவுகளால் ஏற்பட்ட கவர்ச்சியும் பார்ப்பவர்களை வாவ்வ்… என சொல்ல வைத்துவிடும் ஐந்தரை அடி உயரத்திற்கு குறையாமல் பனிக்கட்டியால் ஆன சிலை போல இருந்தாள்.

பனி போன்ற வெண்மை நிறம், டில்லி என்பதாலா அல்லது அவளது இயற்கை நிறமே அதுவோ ஆனாலும் வெண்மை நிறத்தில் பாலிஷ் செய்த நகை போல ஜொலித்தாள். செதுக்கி வைத்த சிலையாக இருந்தவளின் முகத்தில் சிறு டென்ஷன் சற்று கடுமையாகவும் இருந்தாள்.

அவள் நடக்கும் போது அவளது போனிடையில் காற்றில் அப்படியும் இப்படியும் அலைபாய்ந்தது. அந்த ஆபிஸில் வேலை செய்யும் ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் அவளை பார்க்க தவறவில்லை.

பெண்களே பேராசையும் பொறாமையும் படும் அளவு அவள் இருந்தாள் ஆண்கள் நிலைமை சொல்லவா வேண்டும் அவளை தங்கள் மனதில் கனவுக்கன்னியாகவே நினைத்திருந்தார்கள் ஆனால் அந்த கனவு கன்னியோ யார் வலையிலும் விழாமல் தன் வழி தனி வழி என்பது போல் இருந்தாள்.

வேலைக்கு சேர்ந்து 2 வருடங்கள் ஆன நிலையில் அந்த ஃபேஷன் டிசைனிங் நிறுவனத்தின் முதலாளி போலவே தன்னை பாவித்துக் கொண்டிருந்தாள். அவளது அம்மா மாலினி ஹர்ஷாவின் 10 வயது வரை உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்பட்டு உயிரை கையில் பிடித்து வைத்துக் கொண்டிருந்து கடைசியில் ஆண்டவனது கட்டளையை மீற முடியாமல் சொர்க்க பதவியை அடைந்தார்

அவளது தந்தை மகேஸ்வரன் ஒரு டாக்டராக இருந்தும் தனது மனைவியை காப்பாற்ற முடியாமல் போன துக்கத்திலும் மகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற கடமையிலும் மறுமணம் செய்துக் கொள்ளாமல் மகளுக்காகவும் மக்களுக்காகவும் தனது டாக்டர் வேலையை சிறப்பாக செய்துக் கொண்டும் மகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் வாழ்ந்து வருகிறார்.

அவள் வாய் திறந்து கேட்பதற்கு முன்பே அவரே அனைத்தும் செய்து விடுவார். அதனால் அவள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போனாள்.

ஒரே பெண் அதிலும் தாயில்லாத பெண் என்பதால் அவளை செல்லம் கொடுத்துக் கெடுக்காமல் தைரியமாக வளர்க்க ஆரம்பித்தார். தாயின் உடல்நிலையை பார்த்து வளர்ந்த ஹர்ஷாவிற்கும் உயிர் பயம் அதிகம், நோய் நொடி வந்தாலும் பயப்படுவாள், ஊசி என்றால் அலர்ஜி, மாத்திரைகள் என்றால் வெறுப்பு, அதற்காகவே எந்த நோயும் வராமல் கட்டுப்பாடாக இருந்தாள் உணவிலும் சரி மற்ற விசயங்களிலும் சரி கவனமாக நடந்துக் கொண்டாள். இதுவரை அவளுக்கு சிறு காய்ச்சல் கூட வராமல் பார்த்துக் கொண்டாள்.

அவளது தந்தையோ தன்னை போல மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்யச் சொல்லி கேட்க அவளோ தாய் பட்ட கஷ்டத்தை பார்த்து வளர்ந்தால் மருத்துவத்திற்கு படிக்காமல் வேறு படிப்பை தேர்ந்தெடுத்தாள்.

இப்போது ஃபேஷன் உலகத்தில் பிரபல டிசைனர்களில் அவளின் பெயரும் இடம்பெற்றுவிட்டது. சுதந்திரமாக வளர்ந்த காரணத்தினாலும், சமூகத்தில் அவளுக்கு நற்பெயரும் இருந்த காரணத்தினாலும், அவளது தந்தை அவளை தைரியசாலியாக வளர்த்த காரணத்தினாலும், ஹர்ஷா சற்று திமிராக நடந்துக் கொண்டாள்.

அனைத்து விசயங்களிலும் யாரையும் நம்பாமல் தனக்கு என்ன தோணுமோ அதையே சரியென செய்து வைத்தாள், அவளை சரி தவறு என தீர்மானம் செய்யக்கூடிய தகுதி கூட யாருக்குமில்லை என்பது அவள் எண்ணம்

அனைத்துமே சரியாக செய்வதால் யாருடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் இன்றுவரை பலியாகாமல் மிடுக்காக இருந்தாள். அவளது உலகில் அவள்தான் மகுடம் அணியாத ராணி அந்த எண்ணம் அவள் மனதில் நன்றாகவே ஊறிவிட்டது.

பொன்னெழுத்துக்களால் அவளது பெயரை அச்சடித்த பலகை ஒட்டியிருந்த வாசற்கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்த ஹர்ஷா தனது இருக்கையில் அமர்ந்தாள். டேபிள் மீது வைத்திருந்த லேப்டாப்பை திறந்து இன்றைய பேஷன் ஷோக்காக ஏற்கனவே தயார் செய்திருந்த டிசைன்களை ஒரு முறை சரிபார்த்துக் கொண்டிருந்தாள். அந்நேரம் அவளது தந்தை மகேஸ்வரன் அவளுக்கு போன் செய்தார்.

அவளும் வேலை பளு எவ்வளவு இருந்தாலும் தன்னை மதித்து யார் போன் செய்தாலும் எடுத்து பேசுவது வழக்கம், அதிலும் தந்தையே ஃபோன் செய்தால் அவளுக்கு மகிழ்ச்சி. காரணம் அவள் வளர வளர மகேஸ்வரனுக்கு பொறுப்புகள் அதிகமானதாலும் மகளுக்கு நல்ல எதிர்காலம் தர வேண்டும் என்ற எண்ணத்தாலும் மருத்துவமைனையில் இரவு பகல் பாராமல் உழைத்தார்.

தனியார் மருத்துவமனை என்பதால் அவரை நன்றாக கசக்கி எடுத்தது, அவரும் மகளுக்காக சிரமத்துடனே பணிபுரிந்து சம்பாத்தியம் அதிகப்படுத்தினார். ஆனால் இப்போது அவருக்கு