கதையைப் பற்றி:
'கண்ணால் காண்பது பொய்' என்பது எப்போதும் உண்மையா?
ஊர் முழுதும் தவறாக பேசும் அஹல்யாவை நல்லவள் என்று நம்புகிறான் அபினவ். அவளை திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான். எதனால் அஹல்யாவை பற்றி தவறான செய்தி பரவியது என்று அவன் கண்டுப்பிடிக்க உதவுகிறாள் சத்யா. அவளுடைய புதிய தோழி சக்தியும் அவளுக்கு உதவுகிறாள். அஹல்யா உண்மையில் நல்லவள் தானா?
நம் கதாநாயகிகளுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்.
இது ஒரு குடும்பம் - காதல் - மர்மம் நிறைந்த கதை!
அனைவருக்கும் வணக்கம். நம் Chillzee மதியூர் மிஸ்ட்டரீஸ் சீரிஸின் அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம்.
இதுவும் ஒரு காதல் + மிஸ்டரி கதை.
ப்ரியம்வதா வினாயக்கை மனமார விரும்புகிறாள். சையன்டிஸ்ட் ஆன வினாயக் அவளின் மனதை புரிந்துக் கொள்ளாமலே இருக்கிறான்.
இக்கட்டான நிலையில் இருக்கும் வினாயக் ப்ரியம்வதாவின் உதவியை ஏற்று மதியூரில் இருக்கும் அவளின் குடும்ப எஸ்டேட்டிற்கு செல்கிறான். அங்கே அவனை சுற்றி சில மர்ம நிகழ்வுகள் ஏற்படுகிறது.
என்ன என்று புரியாமல் தவிப்பவர்களுக்கு உதவ நம் S&S ப்ரைவேட் டிடக்டீவ்ஸ் சத்யா – சக்தி வருகிறார்கள்.
வினாயக்கிற்கு எதிராக சதி செய்வது யார்? எதற்கு?
ப்ரியம்வதாவின் காதல் நிறைவேறியதா? வினாயக் அவளின் அன்பை புரிந்து ஏற்றுக் கொண்டானா?கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!
நன்றி.
1. Melody begins...
பூர்வி தன்னுடைய கணவன் திவேஷ் மற்றும் பிள்ளைகள் நிரவி, ஈஷானுடன் லண்டனில் வாழ்கிறாள்.
தன் குடும்பம் தவிர வேறு எந்த பிணைப்பும் இல்லாமல் இருக்கும் பூர்விக்கு தன்னை சுற்றி நடக்கும் சம்பவங்கள் சந்தேகங்களை கொடுக்கிறது.அவள் ஆனந்த பூந்தோட்டம் என்று நினைத்து கொண்டிருக்கும் வாழ்க்கை உண்மையிலேயே ஆனந்தமானது தானா என்ற கேள்விகள் வருகிறது.
துணைக்கு நட்பு, உறவு என்று ஒருவரும் இல்லாத நிலையில், தனி ஆளாக பூர்வி தன் ஆபத்துகளில் இருந்து தப்பிக்க முடியுமா?
அவள் தன் சந்தேகங்களை தெளிந்துக் கொண்டாளா? அதில் இருந்து தப்பினாளா?