உன்னைப் பார்த்திருந்தேன்... - பிந்து வினோத்
உன்னைப் பார்த்திருந்தேன்... – 01.
“இங்கேயே உட்கார்ந்து விளையாடு அம்மா தோ வரேன்”
மூன்று வயது ராஜாவிற்கு அம்மா சொல்வது புரிந்தது. தன் கையில் இருந்த சிறு கொட்டாங்குச்சிகளை வைத்து விளையாடியவன், அதை வைத்து மண்ணில் தோண்ட துவங்கினான். அவன் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த இடத்திற்கு வெகு அருகே சில நாட்களுக்கு முன் விழுந்திருந்த ஒரு மரம் இருந்தது. அதன் வேர் இருந்த இடத்தில் மண்ணை தோண்டி விளையாடியவன்,
‘டங்ங்க்க்.....”
என கேட்ட ஓசை கேட்டு அந்த இடத்தை ஆர்வத்துடன் பார்த்தான். உள்ளே ஏதோ இருப்பதாக தோன்றவும், கொட்டங்குச்சிகளை கொண்டு மேலும் தோண்டி அதை வெளியே எடுத்தான்!
அவன் வெளியே எடுத்தது ஒரு பானை... மண் பானை!
சென்னையில் கோடம்பாக்கத்தில் இருந்த அந்த பெண்கள் விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்த அறையில் கதை புத்தகம் படித்துக் கொண்டிருந்த கீர்த்தனாவிற்கு இடது கையில் சட்டென எரிச்சல் ஏற்பட்டது.
புத்தகத்தை வைத்து விட்டு இடது கையை பார்த்தாள். அங்கே இருக்கும் சிறு தழும்பு சிவந்து இருந்தது. அது தான் எரிச்சலுக்கு காரணம் என்பது புரிந்ததால் அதை மெல்ல தடவி பார்த்தாள்.
அவளுக்கு நினைவு தெரிந்த நாள் முதலே, அந்த ஒரு ரூபாய் நாணயம் அளவிலான தழும்பு கையில் இருக்கிறது! ஆனால் இன்று வரை இது போன்ற எரிச்சல் ஏற்பட்டதில்லை!
சரி ஏதேனும் அதில் பட்டிருக்கும் என முடிவு செய்து மீண்டும் கதையில் மூழ்கினாள் நம் கதாநாயகி.
கீர்த்தனா கதை படிக்கும் நேரத்தில் நாம் அவளை பற்றி பார்ப்போம். வெகு சிலருக்கே இருப்பது போல் பார்த்த உடன் சட்டென்று மனதில் பதிந்துக் கொள்ளும் அழகிய வட்டமான முகம். பக்கத்து வீட்டு பெண் போன்ற எளிமையான தோற்றம். நல்ல துடிப்பான இளம் பெண். சில மாதங்களுக்கு முன் தான் கல்லூரி படிப்பை முடித்திருந்தாள். ஆனால் முகத்தில் இருபத்தி ஒரு வயதையும் மீறிய ஒரு வித பக்குவம் இருந்தது.
மூன்று வயதிலேயே அவளுடைய பெற்றோர் இருவரும் ஒரு விபத்தில் இறந்து போனார்கள். அதன் பின் பெற்றோர் சமயோசிதமாக அவளுக்கென வைத்திருந்த காப்பிடுகள் மற்றும் தொடர் வைப்பு நிதியில் இருந்த பணம் அவளின் படிப்பிற்கு உதவியது. கல்விக்காக அவளின் உறவினர் அவளை சேர்த்து விட்ட ரெஸிடன்ஷியல் பள்ளியே அவளுக்கு வீடாக மாறி போனது... புத்தகங்கள் மட்டுமே உறவுகளாகி போனது!
கல்லூரி தோழியும், தற்போதைய விடுதி தோழியுமான அபூர்வா மட்டுமே இன்றைய நாளளவில் அந்த புத்தகங்கள் அளவிற்கு அவளுடன் நெருங்கி உறவாடும் ஒரே ஒரு ஜீவன்.
வாழ்க்கையில் எப்போதும் ஒரு த்ரில் வேண்டும் என கருதும் கீர்த்தனா, படித்து முடித்த பின் நல்ல மதிப்பெண்கள் இருந்த போதும், விரும்பி தின செய்தி பத்திரிகையில் ரிப்போர்டராக வேலைக்கு சேர்ந்தாள். அவள் எதிர்பார்த்தபடி பெரிதாக ஆர்வத்தை தூண்டும்
- பிந்து வினோத்
- பிந்து
- வினோத்
- Bindu Vinod
- Bindu
- Vinod
- Family
- Romance
- Novel
- Tamil
- Drama
- Books
- from_Chillzee
- mysteries
- Historical
- Thriller