Chillzee KiMo Books - ஒரு கிளி உருகுது...! - Chillzee Originals - Oru kili uruguthu - Chillzee Originals

(Reading time: 5 - 9.75 hours)
ஒரு கிளி உருகுது...! - Chillzee Originals - Oru kili uruguthu - Chillzee Originals
 

ஒரு கிளி உருகுது...! - Chillzee Originals

Other editions available!!!

கதையைப் பற்றி:

'கண்ணால் காண்பது பொய்' என்பது எப்போதும் உண்மையா?

ஊர் முழுதும் தவறாக பேசும் அஹல்யாவை நல்லவள் என்று நம்புகிறான் அபினவ். அவளை திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான். எதனால் அஹல்யாவை பற்றி தவறான செய்தி பரவியது என்று அவன் கண்டுப்பிடிக்க உதவுகிறாள் சத்யா. அவளுடைய புதிய தோழி சக்தியும் அவளுக்கு உதவுகிறாள். அஹல்யா உண்மையில் நல்லவள் தானா?

நம் கதாநாயகிகளுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்.

இது ஒரு குடும்பம் - காதல் - மர்மம் நிறைந்த கதை!

 

அத்தியாயம் – 01.

Flash News:

துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சக்தி ராஜினாமா!!!

டிவியில் பெரிய எழுத்துக்களில் மின்னிய செய்தியைப் படித்து அதிர்ந்துப் போன தென்றல்வாணன், டிவி சத்தத்தை அதிகமாக்கினான்.

“... சற்று முன் கிடைத்த செய்தி.

சென்னை மாநகரத்தின் சிறப்பு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவியில் இருந்த பெண் ஐ.பி.எஸ் ஆபிசர் சக்தி தன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஸ்டார் போலீஸ் என்று பொதுமக்களால் அன்புடன் அழைக்கப்படும் சக்தி 2010ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல் துறையில் இணைந்தார்.

பல பிரசித்தி பெற்ற ரவுடிகளை சிறைக்கு அனுப்பிய பெருமை பெற்ற சக்தியின் மீது சமீப காலமாக பல விதமான துறை சம்மந்தப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வந்தது.

சில மாதங்களுக்கு முன் அரசியல் தலைவர் ஒருவரின் கைதுக்கு சக்தி காரணமாக இருந்ததால் இந்த பழி வாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப் படுவதாக வதந்திகள் இருந்த நிலையில் சக்தியின் இந்த திடீர் முடிவு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.”

ரொம்ப சத்தமாக ஒலித்த செய்தி சமைத்துக் கொண்டிருந்த சத்யாவிற்கு எரிச்சலைக் கொடுத்தது.

“எதுக்கு இப்படி டி.வியை அலற விட்ருக்கீங்க??? வால்யூமை கம்மி பண்ணுங்க” என்று கத்தியபடி டிவி இருந்த அறைக்கு வந்தவள் கணவன் தென்றல்வாணனின் முகத்தைப் பார்த்து அமைதியானாள்.

“யாருக்கு என்னாச்சு?” கேள்வி கேட்டபடி கணவன் பார்த்துக் கொண்டிருந்த செய்தியைப் பார்த்தாள்.

சென்னை காவல் துறை கட்டிடத்தில் இருந்து வெளியே வந்த சக்தியை அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துக் கொண்டார்கள்.

அவர்களை விலக்கி விட்டு, யாருக்கும் பதில் சொல்லாமல் காரில் ஏறி கிளப்பிச் சென்றாள் சக்தி.

“யாருங்க இவங்க? உங்களுக்கு தெரிஞ்சவங்களா?”

“தெரியும். ஒன்னா வொர்க் செய்திருக்கோம்”

தென்றல்வாணன் குரல் என்னவோ போல இருந்தது.

“ஏன் என்னவோ மாதிரி இருக்கீங்க?”

“வேற எப்படி இருக்க சத்யா? சக்தி மாதிரி ஒரு ஹானஸ்ட் ஆபிசரை பார்க்கவே முடியாது. ஹன்ட்ரட் பர்சன்ட் சின்சியர் ஆபிசர். அவங்களை டீமோட் செய்து, அசிங்கப் படுத்தி, வெறுத்துப் போய் ரிசைன் செய்ய வச்சுட்டாங்க. இது போலீஸ் டிபார்ட்மென்ட்க்கு மட்டுமில்லை, எல்லா மக்களுக்குமே பெரிய இழப்பு”

“சரி, அதுக்கு நாம என்ன செய்ய முடியும்?”

“ஒன்னும் செய்ய முடியாது. கடைசியா சக்தியை டீமோட் செய்து மதியூருக்கு ட்ரான்ஸ்பர் செய்திருந்தாங்க”

“நம்ம ஊருக்கா?”

“ஆமா! அவங்களுக்கு ஆர்டர் கொடுக்குறதுக்கு முன்னாடியே எங்களுக்கு அன்அபிஷியல் மெமோல அவங்க இங்க ஜாயின் செய்தப்புறம் யாரும் அவங்களுக்கு சப்போர்ட் செய்யக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க”

“நீங்க ஒன்னும் செய்யலையா???”

“ஒன்னும் செய்ய முடியாது சத்யா! சக்திக்கு கல்யாணம் ஆகலை, அவங்க தனி ஆள், வேலை வேண்டாம்னு விட்டுட்டு போயிட்டாங்க. நான் அப்படி யோசிக்கக் கூட முடியாது. நேர்மையா இருப்பேன், லஞ்சம் வாங்காம இருப்பேன், ஆனால் சில இடத்துல வளைஞ்சு கொடுத்து தான் போயாகனும். நமக்கு ஒரு பொண்ணு இருக்காளே. வேற என்ன செய்ய?”

“சரி விடுங்க! நீங்க டென்ஷன் ஆகாம வேற சேனல் பாருங்க.”

தென்றல்வானனிடம் சொல்லி விட்டு சமைக்க திரும்பிய போது, டிவியில் பார்த்த சக்தியே இப்போதும் சத்யாவின் கண் முன் வந்து நின்றாள்.

என்ன ஒரு கெத்தாக அவ்வளவு கூட்டத்தைத் தாண்டி சென்று காரில் ஏறிச் சென்றாள்.

ஐ லைக் யூ சக்தி!

ப் இன்ஸ்பெக்டர் அபினவ் போலீஸ் காரில் இருந்து இறங்கி வெளியே வந்தான்.

மதியூர் மலை வாசஸ்தலமாக இருந்தாலும், சூரியன் சுள்ளென்று அவன் மீது