முன்னுரை
வழிதவறி வந்த நாயகிக்கு அடைக்கலம் தரும் நாயகன் அவளின் அன்பை சம்பாதிக்க போராடுகிறான்.
இதில் நாயகிக்காக அவளின் குடும்பத்தார் வைக்கும் போட்டியில் கலந்துக் கொள்கிறான்.
பல பிரச்சனைகளை கடந்து அவன் போட்டியில் ஜெயித்தானா நாயகியின் கரத்தை பிடித்தானா இல்லையா என்பதே இக்கதையாகும்.
நிலவே நீ சாட்சி...என்னும் இந்த நாவல் அருணா என்னும் இளம்பெண்ணின் கதையைப் பேசுகிறது.
அவளது வாழ்வில் எல்லாமே இருந்தும் தாய் இல்லை என்ற குறை அவளை வாட்டுகிறது. அத்தையும் மாமாவும் ஏன் அவளது தகப்பனுமே அவளது தாயைப் பற்றிப் பேச மறுக்கிறார்கள். உயிரோடு இருக்கிறாளா? இல்லையா? என எதுவுமே தெரியவில்லை அருணாவுக்கும் அவளது தம்பி விஜய்க்கும். அருணாவுக்குக் காதலும் வர அதனைக் கொண்டாடுகிறாள். ஆனால்?
காதலன் சிவா வீட்டில் தாயறியாத பெண்ணை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். தந்தையிடமிருந்து எப்படியாவது தாயைப் பற்றிய செய்திகளைக் கண்டறிந்து கொள்ள வேண்டும் என பெரும் முயற்சி செய்கிறார்கள் தமக்கையும் தம்பியும். மாமனும் அத்தையும் வில்லங்களாக மாற அவர்களைக் கூட தூக்கியெறியத் துணிகிறார்கள்.
அவர்களது தாய் யாரெனத் தெரிந்ததா? தாயன்பு அவர்களுக்குக் கிடைத்ததா? காதல் கை கூடியதா?
அருணாவின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ளப் படியுங்கள்.."நிலவே நீ சாட்சி...".
காதல் கலந்து சொல்லப்பட்ட நாவல் இது.
இரு இளம் மருத்துவர்கள் விக்னேஷும், சுமதியும். இருவரது கண்ணோட்டங்கள், லட்சியங்கள் எல்லாமே முற்றிலும் மாறானவை. விதி இவர்கள் இருவரையும் திருமணம் என்ற பந்தத்தில் இணைக்கிறது.
இருவரது ஈகோவும் முட்டிக்கொள்கிறது. அவற்றை ரகு என்னும் கயவன் விசிறி விடுகிறான். தனது திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள சுமதியை தன்னுடையவளாக்கிக் கொள்ள என்னென்ன உண்டோ அத்தனையும் செய்கிறான். ஒரு கட்டத்தில் சுமதி அவன் விரித்த வலையில் நன்றாகவே சிக்கிக் கொள்கிறாள்.
அவள் மீண்டாளா? விக்னேஷ் சுமதி திருமணம் நிலைத்ததா? இருவரில் யார் நல்ல மருத்துவர் என்ற கேள்விக்கு விடை கிடைத்ததா?
படித்துப் பாருங்கள் "என் மேல் விழுந்த மழைத்துளியே!" நாவல்!