Chillzee KiMo Books - உனக்காக மட்டும் நான் - சசிரேகா : Unakkaga mattum naan - Sasirekha

(Reading time: 1.5 - 3 hours)
உனக்காக மட்டும் நான் - சசிரேகா : Unakkaga mattum naan - Sasirekha
 

உனக்காக மட்டும் நான் - சசிரேகா

சசிரேகாவின் புதிய குறுநாவல்.
 

காலை மணி 6.

பிரபலமான முருகன் கோயில்.

அன்று சஷ்டி வேறு, முருகனுக்கு உகந்த நாள், அந்த நாளில் மக்கள் முருகனை மனமுருகி வேண்டிக் கொண்டால் போதும் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. அதற்காகவே அன்றைய நாளில் முருகருக்கு விசேஷ அபிஷேகம் ஆராதனை நடக்கும் அதைக் காணவே மக்களும் வருவார்கள், அதில் பெரும்பாலும் பெண்களே இருப்பார்கள் தங்கள் குடும்ப நலனுக்காக வேண்டிக் கொள்வார்கள், சிலர் வேண்டிக் கொண்டு அந்த வேண்டுதல் நிறைவேறினால் அதற்காக பூஜை செய்வார்கள், சிலர் அந்நாளில் ஏழைகளுக்கு பல தானங்களை செய்வார்கள். வஸ்திரதானம், அன்னதானம் செய்வது என இது போல தானங்களை செய்வதால் செய்பவருடைய குடும்பத்திற்கு நன்மையே நடக்கும், அதே போல பாவங்கள் கழிந்து புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அதற்காகவே விடிகாலையில் கோயிலை நன்றாக சுத்தம் செய்து பக்தி பாடல்களை ஸ்பீக்கர் மூலம் ஒலிபரப்புவார்கள், காலை வேளையில் முருகனின் பக்தி பாடலை கேட்டுக் கொண்டே எழுந்தால் நன்மை, கோயிலுக்கு அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் மக்களுக்கு இம்மாதிரி பக்திப்பாடல்களை கேட்டு எழுவது பழக்கமாகிவிட்டது. அதே போல அன்னதானம் செய்யும் குடும்பத்திற்கு வாழ்க்கையில் எந்த பஞ்சமும் வராமல் நோய் நொடியில்லாமல் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை, அந்த நம்பிக்கையின் பேரில் பலர் அன்னதானம் செய்வார்கள்.

இன்று கோயிலில் ஏற்கனவே ஒரு குடும்பம் அன்னதானம் உபயம் செய்யப் போகிறார்கள் என அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருந்தது. அந்தச் சமயம் இன்னொரு குடும்பம் கோயிலுக்கு திடீரென வந்து தாங்களும் அன்னதானம் செய்வதாக கூறினார்கள். இதற்குரிய அனுமதியை ஏற்கனவே வாங்கவில்லை.

ஒரே நாளில் ஒரே வேளையில் இரு குடும்பங்கள் அன்னதானம் செய்வது தவறு ஒன்றும் இல்லை ஆனால் யார் முதலில் செய்வது என்பதுதான் பிரச்சனையே, கோயில் வளாகத்துக்குள் இரு குடும்பங்களும் கோயில் தர்மகர்த்தாவுடன் பேச்சு வார்த்தையில் இறங்கினார்கள்.

”வழக்கமா நீங்களே நல்ல நாள்ல அன்னதானம் செய்றீங்க, இந்த முறை வெளியாளுங்களுக்கு விட்டுக் கொடுக்கலாமே, வெளியூரிலிருந்து வந்திருக்காங்க இன்னிக்கி இங்கதான் அன்னதானம் செய்யனும்னு வேண்டியிருக்காங்க, அவங்க வேண்டுதலை ஏன் கெடுக்கனும் நம்ம ஊர்க்காரரு நீங்க இந்த முறை மட்டும் வெளியூர்க்காரங்களுக்கு விட்டுக் கொடுத்தா” என தர்மகர்த்தா சொல்லும் போதே கோபத்தில் வெகுண்டார் உள்ளுர்காரரான கதிர்வேலன்.

”என்ன விளையாடறீங்களா நான் பிறக்கறதுக்கு முன்னாடியே இருந்து இந்தக் கோயில்ல எங்க குடும்பம்தான் விசேஷ நாட்கள்ல வழக்கமா அன்னதானம் செய்வாங்க, காலம் காலமா நடக்கற விசயத்தை இவங்களுக்காக மாத்திக்கனுமா, நாங்க இந்த ஊர்க்காரங்க அதை மறந்துடாதீங்க வெளியூர்க்காரங்களை வேற ஒரு நாள் வந்து அன்னதானம் செய்யச் சொல்லுங்க இல்லையா நாங்க முடிச்சிட்டு போன பின்னாடி செய்துக்க சொல்லுங்க, நாங்க தடுக்கலை” என பொங்க அதற்கு வெளியூரில் இருந்து வந்தவர்களில் பெரியவர் நீலகண்டன் என்பவர்.

”நீங்க சொல்றது வாஸ்தவம்தான் ஆனாலும் இது வேண்டுதல்ங்க, பல வருஷங்கள் முன்னாடி இதே கோயில்ல ஒரு விசயத்துக்காக வேண்டிக்கிட்டேன், அது நடந்துடுச்சி உடனே என்னால வந்து அன்னதானம் செய்ய முடியலை, இப்பதான் அதுக்கு நாள் கூடி வந்திருக்கு, நீங்க வழக்கமா செய்றவங்க, நாங்க எப்பவோதான் வரோம், இதுக்கப்புறம் இந்த பக்கம் கூட நாங்க வரமாட்டோம், வேண்டிக்கிட்ட வேண்டுதல் நிறைவேத்தாம போனா தப்பாயிடும்ங்க, என் காலத்துக்குள்ள செஞ்சிட்டா என் வாரிசுகளுக்கு எந்தப் பிரச்சனையும் வராம இருக்கும், அதுக்குதான் சொல்றோம், நாங்க இந்த முறை அன்னதானம் செய்துட்டு போறோம்ங்க, அப்புறம் நீங்க செய்ங்க ஒண்ணும் தப்பில்லைங்களே”.

என அமைதியாகச் சொல்ல அதை கதிர்வேலன் ஏற்றுக் கொள்ளவில்லை.

”ஆஆ அதெல்லாம் முடியாது வழக்கத்தை மாத்தறது தப்பு, சரி நீங்க வேண்டுதல் அது இதுன்னு சொல்றீங்க செஞ்சிட்டு போங்க ஆனா முதல்ல நாங்க பூஜையை முடிச்சி அன்னதானம் செஞ்சிட்டு போயிடறோம், அதுக்குப்புறம் நீங்க செய்ங்க, இன்னிக்கு நாள் முழுக்க சஷ்டிதான், கோயில் இங்கதான் இருக்கும், நீங்க உங்க வேண்டுதலை முடிச்சிட்டு கிளம்புங்க” என சொல்ல நீலகண்டனோ.

”அது சரியா வராதுங்க முதல் பூஜை நாங்க செஞ்சி வேண்டுதலை நிறைவேத்தனும்னு வந்திருக்கோம், என் குடும்பத்தாளுங்களுக்கு வேலைகள் இருக்கு, படிக்கறவங்க இருக்காங்க இப்பதான் அதுவும் வேண்டுதல்னு சொன்னதுக்காக லீவு போட்டு வந்திருக்காங்க, திரும்பவும் அவங்க இப்படி ஒண்ணு சேர்றது கஷ்டம், ரொம்ப நாளா முயற்சி செஞ்சி அவங்களை ஒண்ணு சேர்த்து கூட்டிட்டு.