Online Books / Novels Tagged : Novel - Chillzee KiMo

வா.. வா.. என் தேவதையே..! - பிரேமா சுப்பையா

பிரேமா சுப்பையாவின் கை வண்ணத்தில் புது குறுநாவல்.

Published in Books

நீ தானா...! - பிந்து வினோத்

ஆனந்தி - அரவிந்த் - அஞ்சனா உடன் பிறந்தவர்கள். அவர்களுடைய குடும்ப கம்பெனியில் இருந்து பல கோடி ரூபாய் மர்மமான முறையில் களவு போகிறது.

பணம் காணாமல் போனதற்கான பழி அரவிந்தின் மனைவி சாந்தியின் மீது விழுகிறது. இதனால் அரவிந்த் சாந்தி இடையே மட்டும் அல்லாமல் மொத்த குடும்பத்திலும் பிளவு ஏற்படுகிறது.

சாந்தி தான் நிரபராதி என்று சொன்னாலும், இருக்கும் சாட்சிகள் அவளுக்கு எதிராக இருக்கின்றன.

உண்மையை கண்டுப்பிடித்து குடும்பத்திற்குள் ஏற்பட்டிருக்கும் சச்சரவை துடைத்தெரிய இவர்கள் செய்யும் முயற்சி வெற்றி பெறுமா? பிரிந்த கணவன் மனைவி இணைவார்களா???

சாந்தி தவறு செய்யவில்லை என்றால் பணத்தை திருடியது யார்?

கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

இது குடும்பம் - காதல் - மர்மம் என அனைத்தும் நிறைந்த ஒரு ஜனரஞ்சக படைப்பு! 

Published in Books

மாற்றம் தந்தவள் நீ தானே - அமுதினி

மாற்றம் தந்தவள் நீ தானே...இது ஒரு மகிழ்ச்சி நிறைந்த ஜாலியான காதல் கதை. ஒருவரோடு ஒருவர் மனம் விட்டு பேசினாலே பாதி பிரச்சனைகளும் குழப்பங்களும் தீர்ந்து விடும் என்பது புரியாத இரண்டு காதல் உள்ளங்கள் அவர்களின் வாழ்க்கையில் சந்திக்கும் குழப்பங்களே இந்த கதை.

Published in Books

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - பிந்து வினோத்

ஆகாஷ் - அக்ஷ்ராவின் குடும்பங்கள் சொந்தம் போல நெருங்கிய நட்புடன் பழகும் குடும்பங்கள். இரண்டு குடும்பங்களின் பெரியவர்களும் ஆகாஷ், அக்ஷராவின் சம்மதத்துடன் அவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு சினேகாவை சந்திக்கிறான் ஆகாஷ். அவள் மீது ஈர்க்கவும் படுகிறான். ஒரு பக்கம் வீட்டில் மும்முரமாக திருமண ஏற்பாடுகள் நடக்க, ஆகாஷின் மனம் சினேகாவை மறக்க முடியாமல் தவிக்கிறது. பெரியவர்களின் மனதை வருத்தவும் முடியாமல், மனதிற்கு பிடித்தவளை மறக்கவும் முடியாமல் இருக் கொல்லி எறும்பாக தவிக்கிறான் ஆகாஷ்.

பெரியவர்களின் மனம் நோகாமல் ஆகாஷின் காதல் நிறைவேற முடியுமா? அக்ஷரா நிலைமை என்ன? சினேகா ஆகாஷின் காதலை ஏற்றுக் கொள்வாளா?

தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள்!

Published in Books

மலர்களே! மலர்களே!! - ஸ்ரீஜா வெங்கடேஷ்

மலர்களே! மலர்களே!! என்ற இந்த நாவல் வித்தியாசமான கதைக்களம் கொண்டது.

சேதுலட்சுமி அம்மாள் ஆதரவற்ற சில குழந்தைகளை வளர்க்கிறார். அவர் அப்படிச் செய்ய என்ன காரணம்? அவரது வளர்ப்பு மகள் அமுதாவின் காதலால் அவருக்கு ஏற்பட்ட கடும் அவமானத்துக்குக் காரணம் என்ன? அவரது கடந்த காலம் அமுதா மற்றும் இதர குழந்தைகளை பாதிக்குமா?

நற்பண்புகளே உருவான சேதுலட்சுமி அம்மாளின் வாழ்வில் மறைந்திருக்கும் ரகசியம் என்ன? அடிக்கடி வந்து போகும் ராஜு அண்ணனுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? அமுதாவின் காதலால் தாய், குழந்தைகள் என்று அவர்கள் இது வரை வாழ்ந்து வந்த வாழ்வு குலைந்து விடுமா?

சேதுலட்சுமி அம்மாள் உண்மையிலேயே நல்லவர் தானா? அமுதாவின் காதல் என்ன ஆனது?

இவற்றைத் தெரிந்து கொள்ளப் படியுங்கள் மலர்களே! மலர்களே!! நாவலை.

Srija Venkatesh
Srija Venkatesh

Published in Books