நாயகன் பார்த்திபன். கிராமத்தை சேர்ந்தவன்..வாழ்வில் எந்த பிடிப்பும் பொறுப்பும் இல்லாமல் கடனே என்று வாழ்ந்து வருபவன்..அவன் வாழ்வில் நுழைகிறாள் ஒரு தேவதை..
அந்த தேவதை, பாலைவனமாக இருக்கும் அவன் வாழ்வை வசந்தமாக்க போகிறாளா? இல்லை இன்னும் மோசமான நிலைக்கு இழுத்து செல்ல போகிறாளா என்று பார்க்கலாம்...
இதுவும் ஒரு மனதுக்கு இனிமையான காதல் கதைதான்.. இந்த கதையையும் படித்து தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading!!!
கருவறை முதல் கல்லறை வரை இன்று அறிவியல் தன் அசுர கைகளால் எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி ஆள்கிறது.
அழகான உணர்வுபூர்வமான காதல் இதில் அடங்குமா?
காதலர்களிடையே அறிவியல் குறுக்கிட்டால் எப்படி இருக்கும்?
இந்த கதையில் வரும் காதலர்களின் காதல் அறிவியல் வளர்ச்சியில் சிக்கி சீரழியுமா? இல்லை சிங்காரமாய் மீண்டெழுமா?
அறிவியல் வரமா? சாபமா?
இவர்களோடு பயணிக்க வாருங்கள் . .
கல்லறையில் ஓர் கருவறை
நன்றி
சுபஸ்ரீ முரளி
உன்னை ஒன்று கேட்பேன் என்ற இந்த நாவல், வாழ்க்கைப் பாதையில் நாம அபூர்வமாக சந்திக்கும் அற்புதமான சில மனிதர்களைப் பற்றியது.
ரஞ்சனி என்னும் அழகிய இளம் பெண்ணின் காதல், சாராதா என்னும் அன்னையின் தியாகம் இவைகள் இந்த நாவலை மெருகேற்றுகின்றன.
ஸ்ரீனிவாசன் யார்?
சாரதாவின் வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன?
மேலோட்டமாக மகிழ்ச்சியாக வாழும் சாரதா, இரவு நேரங்களில் எதை நினைத்து வருந்துகிறாள்?
ரஞ்சனிக்குத் தெரியக் கூடாது என எதை மறைக்கிறாள்?
கொலைக்குற்றத்துக்கு தண்டனை அனுபவிக்கும் ஸ்ரீனிவாசன் சாரதாவுக்கு ஏன் கடிதம் எழுத வேண்டும்?
இப்படிப் பல மர்மங்களும் ரகசியங்களும் நிறைந்த கதை தான் “உன்னை ஒன்று கேட்பேன்”.
இளவரசி ரோஹினி பிடிக்காத திருமணத்தில் இருந்து தப்பிக்க சென்னைக்கு வருகிறாள். அங்கே தான் யார் என்று சொல்லாமல் சாரதாவின் வீட்டில் தங்குகிறாள். அப்போது சாரதாவின் மகன் அஜய் மீது காதல் வசப் படுகிறாள். அவள் யார் என்ற உண்மை தெரிந்தால் அஜய் என்ன நினைப்பானோ என்ற கலக்கத்தில் உண்மையை சொல்லாமல் மறைக்கிறாள். அவள் பயத்தை நிஜமாக்குவதுப் போல அவள் மறைத்து வைத்த அரச வாழ்வு அவளை தேடி வந்து சேருகிறது.
அஜய்க்கு உண்மை தெரிந்ததா? ரோஹினி அரசக் குடும்பத்திற்கான கடமையை ஏற்றுக் கொள்வாளா அல்லது அஜய் மீதான காதலை தொடர்வாளா?