Chillzee KiMo Books : உன்னை ஒன்று கேட்பேன்... - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Unnai ondru ketpen... - Srija Venkatesh

உன்னை ஒன்று கேட்பேன்... - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Unnai ondru ketpen... - Srija Venkatesh
 

உன்னை ஒன்று கேட்பேன்... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

உன்னை ஒன்று கேட்பேன் என்ற இந்த நாவல், வாழ்க்கைப் பாதையில் நாம அபூர்வமாக சந்திக்கும் அற்புதமான சில மனிதர்களைப் பற்றியது.

ரஞ்சனி என்னும் அழகிய இளம் பெண்ணின் காதல், சாராதா என்னும் அன்னையின் தியாகம் இவைகள் இந்த நாவலை மெருகேற்றுகின்றன.

ஸ்ரீனிவாசன் யார்?

சாரதாவின் வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன?

மேலோட்டமாக மகிழ்ச்சியாக வாழும் சாரதா, இரவு நேரங்களில் எதை நினைத்து வருந்துகிறாள்?

ரஞ்சனிக்குத் தெரியக் கூடாது என எதை மறைக்கிறாள்?

கொலைக்குற்றத்துக்கு தண்டனை அனுபவிக்கும் ஸ்ரீனிவாசன் சாரதாவுக்கு ஏன் கடிதம் எழுத வேண்டும்?

இப்படிப் பல மர்மங்களும் ரகசியங்களும் நிறைந்த கதை தான் “உன்னை ஒன்று கேட்பேன்”.

 

அத்தியாயம் 1.

 

காலை நேரத்தில் அந்த வீடு பரபரப்பாக இருந்தது. அம்மா சாரதா சட்னி அரைக்கவும் , சாம்பார் செய்யவும் என பரபரத்துக் கொண்டிருந்தாள். மகள் ரஞ்சனி அம்மாவுக்கு உதவியாகக் காய் நறுக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்த வீட்டில் இரண்டே பேர் தான்.அம்மா  சாரதா ஒரு அரசுப்பள்ளியில்  ஆசிரியையாக இருக்கிறாள். ரஞ்சனி கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கிறாள்.

 

"ரஞ்சி! சட்னிக்கு உப்பு போதுமா பாருடா கண்ணு!"

 

"நீ எல்லாம் கரெக்டா தாம்மா போட்டுருப்ப! ஏன் எப்பப் பாத்தாலும் என்னையே பாக்கச் சொல்ற? நீ பாக்க வேண்டியது தானே?"

 

"அதுக்கில்லடா செல்லம்! நீ பாத்து சொல்லிட்டா சரியா இருக்கும் அதான்"

 

கொஞ்சம் எடுத்து சுவைத்துப் பார்த்தாள்

 

"சூப்பரா இருக்கும்மா! ஆனா நீ ஏன் காரமே போட மாட்டேங்கற? "

 

"போன வருஷம் உனக்கு மஞ்சக்காமலை வந்தது மறந்து போச்சா? அப்ப டாக்டர் என்ன சொன்னாரு? ஊறுகா ,காரம் , எண்ணெய் இதெல்லாம் ஆகாதுன்னு சொன்னாரு இல்ல? அதை எப்படி நீ மறந்த?"

 

"ஐயோ! அம்மா! அது போன வருஷம்! இப்ப எனக்கு ஒடம்பு நல்லா இருக்கு. கொஞ்சம் காரமா செய்ம்மா"

 

"அதெல்லாம் முடியாது!"

 

"என் கூட பவித்ரான்னு ஒரு போண்ணு படிக்கறான்னு சொல்லியிருக்கேன் இல்ல?"

 

"ஆமா! அவங்க அண்ணன் கூட அமெரிக்காப் போகப் போறான்னு சொன்னியே?"

 

"ஆங்க்! அவளே தான்! அவங்கம்மா லன்சுக்கு குடுத்து விடுவாங்க பாரு! அப்பா! காரம்னா காரம் அப்படி இருக்கும்! நான் சில சமயம் என் டிஃபன் பாக்சை அவ கிட்டக் குடுத்துட்டு , அவளோடதை வாங்கிச் சாப்பிடுவேன்"

 

"ஓஹோ! இது வேற செய்யறியா நீ? நான் ஒருத்தி இங்க காலையில குழந்தைக்கு எது ஒத்துக்கும் , எது ஒத்துக்காதுன்னு பாத்து பாத்து செஞ்சு குடுத்து விட்டா , இவ டிஃபன் பாக்சை மாத்தறாளாம். ஓ! அதான் முந்தா நேத்து ராத்திரி வயத்த வலின்னியோ?"

 

"போச்சுடா! பிடிச்சுக்கிட்டாங்க! விடவே மாட்டாங்க! நான் இனிமே டிஃபன் பாக்சை மாத்தல்லை போதுமா?"

 

"சரி சரி! வெண்டக்கா நறுக்கிட்டியா? அப்டீன்னா நீ குளிக்கப் போ! பொரியலும் சாம்பாரும் செஞ்சிடுறேன். சாம்பார் சாதமா கையில எடுத்துக்கிட்டுப் போயிடு! உனக்கு ரொம்பப் பிடிக்குமே?"

 

"ஏம்மா சிரமப் படற? வெறும் தயிர் சாதம் பொரியலோட போதும் எனக்கு. நீ பாவம் ! இங்கயும் நின்னுக்கிட்டே சமச்சு , ஸ்கூல்லயும் நின்னுக்கிட்டே வேற பாடம் நடத்தணும். வெறும் தயிர் போதும். சாயங்காலம் நான் வந்து ஏதாவது செஞ்சு வெக்கறேன்"

 

"இதப்பாரு ரஞ்சி! நீ காலேஜ் விட்டு வந்ததும் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு பாட்டு கிளாஸ் போற வழியப் பாரு! நான் வந்து ராத்திரி சாப்பாடுக்கு ஏதாவது பண்றேன். நீ சமயக்கட்டுல நுழைய வேண்டாம்! என்ன புரிஞ்சதா?"

 

"சரிம்மா! அம்மா! நீ ரொம்ப அழகா இருக்க! நீ இந்த வயசுலயே இத்தனை அழகா இருக்கியே ! அப்டீன்னா சின்ன வயசுல எப்படி இருந்துருப்ப? அப்ப