கல்லறையில் ஒர் கருவறை - சுபஸ்ரீ முரளி
கருவறை முதல் கல்லறை வரை இன்று அறிவியல் தன் அசுர கைகளால் எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி ஆள்கிறது.
அழகான உணர்வுபூர்வமான காதல் இதில் அடங்குமா?
காதலர்களிடையே அறிவியல் குறுக்கிட்டால் எப்படி இருக்கும்?
இந்த கதையில் வரும் காதலர்களின் காதல் அறிவியல் வளர்ச்சியில் சிக்கி சீரழியுமா? இல்லை சிங்காரமாய் மீண்டெழுமா?
அறிவியல் வரமா? சாபமா?
இவர்களோடு பயணிக்க வாருங்கள் . .
கல்லறையில் ஓர் கருவறை
நன்றி
சுபஸ்ரீ முரளி
1
லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி
ஜகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி
லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி
என ரம்யா தன் ஐந்து மாத குழந்தை கீர்த்தனாவிற்காக பாடினாள். குழந்தைக்கு மட்டுமே கேட்கும் தொனியில் மிருதுவாக பாடினாள். பாடிக் கொண்டே தொட்டிலைப் பார்க்க குழந்தையோ தன் உருண்ட மருண்ட கண்களால் அவளைப் பார்த்துச் சிரித்தது.
“இன்னுமா தூங்கல குட்டிம்மா” எனச் செல்லமாக அதட்டினாள்.
குழந்தை மாட்டேன் என்பதைப் போல தன் சின்னஞ்சிறு கொலுசு கால்களால் தொட்டிலில் தொப் தொப் எனத் தட்டியது. மயக்கும் மோகன புன்னகையும் செய்து “ஞே . . ஞே” என வைரமுத்துவுக்கு இணையாக வார்த்தைகளைக் கொட்டவே அவள் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி முத்தமிட்டாள்.
“என் செல்லம் என்ன செய்றா?” என ரம்யாவின் மாமியார் கோமதி அறை உள்ளே வந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள்.
“ரம்யா கார்த்திக் வந்துட்டான் நீ அவனைக் கவனி நான் குழந்தையை பாத்துகிறேன்” என சொன்னார். ஒரு நொடி தயங்கியபின் ரம்யா அறையை விட்டு வெளியேறினாள். இவள் அறைக்கு வெளியே செல்லவும் கார்த்திக் அறைக்கு உள்ளே வரவும் சரியாக இருந்தது. இருவர் கண்களும் ஒரு நொடி சந்தித்து பின் இருவர் பார்வையும் எதிர் எதிர் துருவங்ளாயின.
கோமதிக்கு வீட்டில் எத்தனை வேலையாட்கள் இருந்தாலும் கணவன் குழந்தையை தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவள். மருமகள் ரம்யாவிற்கும் இதில் எந்த முரண்பாடும் இல்லை. ஆதலால் தன் கணவன் கார்த்திற்கு வேண்டியவற்றைத் தானே பார்த்துப் பார்த்து செய்வாள். இன்றைய நிலைமையிலும் அவள் இந்த கோட்பாட்டை கடைப்பிடிக்கிறாள்.
உள்ளே வந்த கார்த்திக்கைக் குழந்தை பார்த்துச் சிரித்தது. அவனும் கொஞ்சினான். “கை கால் அலம்பிட்டு வாப்பா . . அப்படியே குழந்தையைத் தொடாதே” என்ற அன்னை ஆணையிடச் சரியெனத் தலையசைத்துச் சென்றான். அவளும் குழந்தையோடு தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.
பத்து நிமிடத்தில் வேறு உடையுடன் வந்து கட்டிலில் சாய்ந்தான். இன்னமும் குழந்தையின் கொஞ்சும் குரலும் கொலுசு சத்தமும் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. அன்பான பெற்றோர், கைநிறைய பணம் காதலியே மனைவியாகினாள். காதலின் பரிசாக இன்று குழந்தை கீர்த்தனா என அனைத்தும் அவனிடம் இருந்தும் நிம்மதி மட்டும் அவன் வசம் இல்லை.
தான் செய்தது சரியா? தவறா? என நினைத்துக் குழம்பினான். இது எங்குப் போய் முடியுமோ? கடவுளே என மனதிற்குள் சத்தம் போட்டுப் புலம்பினான்.
“காபி” ரம்யாவின் இந்த வார்த்தை அவனை நிகழ்காலத்துக்கு அழைத்தது.
“கொஞ்சம் வேல இருக்கு . . ராத்திரி வர லேட்டகும் . . எனக்காக வெயிட் பண்ண வேண்டாம்” என்றவனை முறைத்தாள்.
அவன் காபியை உறிஞ்சியபடி அவளைப் பார்த்து என்ன எனப் புருவத்தை உயர்த்தினான்.
“இப்படி சளைக்காம வேலை செய்யனுமா? கொஞ்ச ரெஸ்ட் எடுங்க . . ” என்றவளின் வார்த்தைகளைக் காதில் வாங்காமல் . . காபி கப்பைத் திணித்தபடி “ஐ நோ” எனக் கோபத்தை உமிழ்ந்தான்.
அவள் மனபாரம் தாங்காமல் அறையைவிட்டு வெளியேறினாள். அவளுக்கு ஒவ்வொரு நொடியும் முள்ளாய் குத்தியது தன் கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.
இந்த அறை இன்ப ஸ்பரிசம் காதல் காமம் என எத்தனை அழகான தருணங்களை தன்னுள் அடக்கி வைத்துள்ளது. கார்த்திக் ரம்யாவின் இருவரின் அத்தனை உணர்வுகளையும் இந்த அறை அறியும். நான்கு சுவர்களை மட்டும் கொண்டது அல்ல இந்த அறை. பற்பல உணர்ச்சிகளையும் ரகசியங்களையும் கொண்டது. இன்று துக்கத்தையும் துயரத்தையும் காண்கிறது.
கார்த்திக்குச் சந்தோஷம் அதிகமானால் அவளைக் குழந்தையைப் போல தூக்கி தாலாட்டி பொத்தென்று மெத்தையில் போடுவான். அவளுக்கு அவன்