Chillzee KiMo Books - தாழம்பூவே வாசம் வீசு!!! - பத்மினி செல்வராஜ் : ThazhamPoove Vaasam Veesu - Padmini Selvaraj

தாழம்பூவே வாசம் வீசு!!! - பத்மினி செல்வராஜ் : ThazhamPoove Vaasam Veesu - Padmini Selvaraj
 

தாழம்பூவே வாசம் வீசு!!! - பத்மினி செல்வராஜ்

நாயகன் பார்த்திபன்.  கிராமத்தை சேர்ந்தவன்..வாழ்வில் எந்த பிடிப்பும் பொறுப்பும்  இல்லாமல் கடனே என்று வாழ்ந்து வருபவன்..அவன் வாழ்வில் நுழைகிறாள் ஒரு தேவதை..

அந்த தேவதை,  பாலைவனமாக இருக்கும் அவன் வாழ்வை வசந்தமாக்க போகிறாளா? இல்லை இன்னும் மோசமான நிலைக்கு இழுத்து செல்ல போகிறாளா என்று  பார்க்கலாம்...   

இதுவும் ஒரு மனதுக்கு இனிமையான காதல் கதைதான்.. இந்த கதையையும் படித்து தவறாமல்  உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading!!!

 

அத்தியாயம்-1

விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து நின்றிருந்தது அந்த மருத்துவமனை.. எங்கு பார்த்தாலும் பளிச் சென்று துடைத்து வைத்ததை போல மின்னியது.. அதன் தரையும் சுவர்களும் முகம் பார்க்கும் கண்ணாடியை போல பளபளவென்று மின்னியது..

மருத்துவமனைக்கு உள்ளேயும் பல விதமான அலங்காரங்கள் கண்ணை குளிர வைப்பதாகவும் மனதுக்கு மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருந்தது..

மருத்துவமனைக்கே உரித்தான மருந்தின் நெடியும் டெட்டால் வாசமும் இல்லாமல் சுத்தமாக இருந்தது..

முதலில் பார்ப்பவர்களுக்கு அது ஒரு ஸ்டார் ஹோட்டலை போன்று தோன்றியிருக்கும்.. அந்த அளவுக்கு அதனை பராமரித்து வந்தனர் அந்த நிர்வாகத்தினர்..

அதன் தோற்றத்தில் இருந்து அது ஒரு விஐபி களுக்கான மருத்துவமனை என பார்ப்பவர்கள் அடித்து சொல்வர்..

ஆனால் அங்கு நடமாடும் மக்களை உற்று கவனித்தால் யாரும் மேல்தட்டு மக்களை போல இல்லை.. எல்லாருமே நடுத்தர வர்க்கத்துக்கும் கீழ் நிலையில் உள்ளவர்கள் போன்று தோன்றினர்..

அப்படி என்றால் இது நடுத்தர வர்க்கத்துக்கும் கீழ் நிலையில் உள்ள ஏழை மக்களுக்கான மருத்துவமனையோ ? ஏழை மக்களுக்கென இப்படி கூட ஒரு மருத்துவமனை இருக்குமா ? ..

அப்படி  என்ன,  யாருடைய  மருத்துவமனை இது என கழுத்தை நிமிர்த்தி அதன் பெயர் பலகையை  பார்க்கும் பொழுது  “RJS Multi Specialty Hospital” என்ற பொன்னிற  எழுத்துக்கள் மின்னின..

(ஆம் பிரண்ட்ஸ்.. இது நம்ம RJS  மருத்துவமனைதான்.. )

ஆதித்யா குரூப் ஆப் கம்பெனிஸ் ன் உரிமையாளர் ஆதித்யா  மற்றும் அவனுடைய நண்பன் ஃபேமஸ் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் வசீகரன் இருவரும் இணைந்து ஆரம்பித்த மருத்துவமைனை இன்று கிடுகிடுவென்று வளர்ந்து நின்றது..

முதலில் இதயத்துக்கான இலவச சிகிச்சைக்காக ஆரம்பித்த அந்த மருத்துவமனை மக்களின் வேண்டுகோள்க்கிணங்க மற்ற துறையையும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மருத்துவமனையில்  சேர்த்து வருகின்றனர்...

மக்களுக்கு எது ஆபத்தை விளைவிக்குமோ எது  மக்களின் உயிரை , வாழ்க்கையை பெரும் அளவில் பறித்து கொள்கிறதோ  அந்த நோய்களுக்கு முதலில் இலவசமாக மருத்துவம் செய்யலாம்  என ஆரம்பித்தது..

தற்போதைக்கு இதயம் மற்றும் பெண்களின் பிரசவம் மட்டும் அந்த மருத்துவமனையில் இலவசமாக பார்த்து வருகின்றனர்.. அடுத்ததாக ந்யூரோ மற்றும்  கேன்சர் க்கான துறைகளையும் ஆரம்பிக்க முயன்று வருகின்றனர்.

அந்த மருத்துவமனையின் தரமான சிகிச்சையாலும் எந்த ஒரு செலவுக்கும் பணம் வாங்காமல் சிகிச்சை அளித்து மக்களுக்கு உதவி வருவதால் மக்கள் இடையில் மிகவும் பிரபலமாகி வந்தது அந்த மருத்துவமனை..

ப்படி பட்ட புகழ்பெற்ற அந்த மருத்துவமனையின் லேபர் வார்டின் முன்னே கைகளை மார்புக்கு குறுக்காக கட்டி கொண்டு முன்னும் பின்னும் நடை பயின்று கொண்டிருந்தான் அந்த நெடியவன்...

பார்க்க கருகருவென்று இருந்தான்..எண்ணெய் என்றால் என்னவென்று அறியாத கேசமும், சிரிப்பு என்றால் எப்படி இருக்கும் என மறந்திருந்த உதடுகளும் இடுங்கிய கண்களுமாக தோற்றமளித்தான்..

முதலில் அவனை பார்ப்பவர்களுக்கு முகத்தை சுளிக்க கூடிய முகமாக இறுகி போய் இருந்தது..

ஆனால் பரந்து விரிந்த மார்பும்  உருண்டு திரண்டிருந்த அவன் புஜங்களும், நடக்கும் பொழுது கொஞ்சமும் அலுக்காத அவன் நீண்ட கால்களும் பார்ப்பவர்களுக்கு அவன் ஒரு அடியாள் மாதிரி தோன்றும்...

நடக்கும் பொழுது அவன் தோரணை அவன் கிராமத்தை சேர்ந்தவன் என்று வெளிச்சம் போட்டு காட்டியது....

சமீபத்தில் தான் பட்டணத்திற்கு வந்திருக்கவேண்டும்.. இன்னும் பட்டணத்து  ஸ்டைலுக்கு முற்றிலும் மாறியிருக்க வில்லை..அவன் நடை, உடை, பாவணையில் இன்னும் கிராமத்து வாடை வீசியது..

அந்த லேபர் வார்ட் முன்னால் நீண்ட நேரமாக நடந்து கொண்டிருக்கிறான் போல. வெளிறிய முகமும் கலங்கிய கண்களும்  உள்ளே இருப்பவளுக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்ற பயமும் அக்கறையும் கலந்து தெரிந்தது அவன் முகத்தில்.

ஒரு வித அச்சத்துடனே,  மூடி இருந்த அந்த லேபர் வார்ட் கதவையே பார்த்து கொண்டிருந்தான்..

உள்ளிருந்து ஒரு பெண்ணின் கதறல் கேட்டது.. அது பிரசவ வலியால் ஒரு பெண்,