ஒரே தொடக்கத்தில் இருந்து இரண்டு வித கதைகள் என்று சில வருடங்களுக்கு முன் நான் செய்த முயற்சியில் ஒரு பகுதி தான் இந்தக் கதை.
[ அந்த முயற்சியின் இன்னொரு பகுதி ‘பனிப்பாறை’ என்றப் பெயரில் ஏற்கனவே பதிவாகி இருக்கிறது. ]இந்தக் கதை, ஒரு நடுத்தர வயதுப் பெண் திடீரென குடும்பத்தில் ஏற்படும் கணவன் மனைவி சலசலப்பை, பண பற்றாக்குறையை எப்படி எதிர் கொள்கிறாள் என்பதை சொல்கிறது. அச்சுறுத்ததலாக வருபவற்றையும் வாய்ப்புகளாக மாற்றிக் கொள்ளும் ஹீரோயின் இவள்! அவளுக்கு அவளுடைய கணவனும் துணையாக இருக்கிறான்!
கதை உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
முன்னுரை:
நாயகிக்கு நடந்த தீங்கிற்கு அவளின் குடும்பமே எதிரிகளின் கையில் மாட்டி சின்னாபின்னாவதை தடுக்க நாயகி நாயகனின் உதவியை எதிர்பார்க்கிறாள், நாயகனும் நட்பு காரணமாக நாயகிக்கு உதவி செய்கிறான், ஒவ்வொரு பிரச்சனையையும் நாயகன் தீர்க்க தீர்க்க அவன் மீது இருந்த நட்பானது காதலாக மாறுகிறது நாயகிக்கு, அந்த காதலை அவள் வெளிப்படுத்தினாளா அவளது காதலை நாயகன் ஏற்றுக் கொண்டானா இல்லை நட்பே போதும் என்றானா நாயகியின் காதல் என்னவானது என்பதே இக்கதையின் கருவாகும்.
கதையைப் பற்றி:
கிராமத்து இளைஞன் சசி, சென்னையில் சிந்துவைப் பார்த்த உடனே காதல் கொள்கிறான்.
சிந்துவிற்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதை தெரிந்து சசி வருத்தம் அடையும் போதே, எதிர்பாராத விதமாக அவளை திருமணம் செய்துக் கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கிறது. அதைத் தவறாமல் பயன்படுத்தியும் கொள்கிறான்.
ஆனால் அந்த திருமணம் சிந்துவிற்கு பிடிக்குமா? சசியின் பெற்றோர் அதை ஏற்றுக் கொள்வார்களா??
தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!
Check out the Vilaketri vaikkiren story reviews from our readers.