நாயகிக்கு நடந்த தீங்கிற்கு அவளின் குடும்பமே எதிரிகளின் கையில் மாட்டி சின்னாபின்னாவதை தடுக்க நாயகி நாயகனின் உதவியை எதிர்பார்க்கிறாள், நாயகனும் நட்பு காரணமாக நாயகிக்கு உதவி செய்கிறான், ஒவ்வொரு பிரச்சனையையும் நாயகன் தீர்க்க தீர்க்க அவன் மீது இருந்த நட்பானது காதலாக மாறுகிறது நாயகிக்கு, அந்த காதலை அவள் வெளிப்படுத்தினாளா அவளது காதலை நாயகன் ஏற்றுக் கொண்டானா இல்லை நட்பே போதும் என்றானா நாயகியின் காதல் என்னவானது என்பதே இக்கதையின் கருவாகும்.
பாகம் 1.
ஓசூர்.
காலை மணி 10.
”மதுமதி மதும்மா ஓடாத இங்க வா” என ரேவதி தனது 14வயது மகளை அழைத்துக் கொண்டே அவளின் பின் தொடர்ந்துச் சென்றார். மதுமதியோ தாயிடம் சிக்காமல் அவருக்கு போக்குக் காட்டிக் கொண்டு அந்த மாளிகை முழுவதும் ஓடிக் கொண்டிருந்தாள் ,
அவளின் சிரிப்புச் சத்தமும் கை வளையல்கள் குலுங்கும் சத்தமும் கால் கொலுசுகள் சத்தமும் அந்த மாளிகை முழுவதும் எதிரொலித்தது. அந்த இனிமையான சத்தத்தைக்கண்ட அவளின் தந்தை தியாகராஜன் கூட மனம் மகிழ்ந்து புன்னகைத்தார்,
”மதுமதி பார்த்தும்மா மெதுவா ஓடு” என தியாகராஜன் புன்னகையுடன் சொல்ல அதைக்கேட்ட மதுமதியும்,
”ஓகே டாட்” என சொல்லிக் கொண்டே ஓடினாள். அவளை தொடர்ந்து சென்ற ரேவதியோ தன் கணவரிடம் குறைப்பட்டார்,
”தியாகு என்ன இதெல்லாம், அவள் ஓடறா அவளை தடுத்து நிப்பாட்டுவீங்கன்னு பார்த்தா என்கரேஜ் பண்றீங்களே, காலையில இருந்து அவள் கூட ஓடி ஓடி அலுத்துப் போயிட்டேன்” என்றார் சலிப்பாக,
”எதுக்கு இந்த ஓட்டம் இப்ப என்னாச்சி உனக்கு”,
”என்னவா? நாம இங்க வந்தது எதுக்கு, குலதெய்வ கோயிலுக்குப் போய் சாமி கும்பிடனும்னுதானே, இன்னும் அவள் ரெடியாகலை, எப்படி ஓடறா பாருங்க, நாளுக்கு நாள் அவளோட சேட்டை அதிகமாகிக்கிட்டே இருக்கு தியாகு”,
”சின்ன குழந்தைதானே சேட்டை பண்ணா பண்ணட்டுமே”,
”ஓ இது ரொம்ப நல்லாயிருக்கு தியாகு, அவள் குழந்தையா வயசுக்கு வந்த பொண்ணு கொஞ்சமாவது அவள்கிட்ட அடக்கம் ஒடுக்கம் இருக்கான்னு பாருங்க”,
”அவளை திட்டாத அவளாலதான் நமக்கு இந்தளவுக்கு வளமான வாழ்க்கை கிடைச்சது”,
”இவளாலயா”,
”ஆமாம் இவள் பிறந்த நேரம் எங்கயோ இருந்த நான் இப்ப பெரிய தொழிலதிபரா ஆயிட்டேன்”,
”அப்படியெல்லாம் அவள் முன்னாடி சொல்லி வைக்காதீங்க, அப்புறம் அவளுக்கு தலைக்கனம் வந்துடும், எல்லாம் உங்க திறமையாலயும் நேர்மையாலயும்தான் பிசினஸ் நல்லபடியா ஓடுது, அப்படித்தான் நான் அவள்கிட்ட சொல்லி வைச்சேன், இல்லைன்னா உங்களோட உழைப்பை அவள் இளப்பமா நினைச்சிக்கிட்டு தன்னையே தான் பெரிசா நினைச்சிக்குவா அது தப்பு தியாகு நாம அவளுக்கு நல்லதே சொல்லி வளர்க்கனும்”,
”சரி சரி ஆமா என் நண்பர்கள் எங்க”,
”அவங்க அப்பவே ரெடியாயிட்டாங்க”,
”சரி நான் அவங்களைப் போய் பார்க்கிறேன்” என சொல்லியவரை தடுத்தார் ரேவதி,
“தியாகு” என நிதானமாக அழைக்க அவரோ,
”என்ன ரேவதி”,
”சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க, பிசினஸ்லாம் கம்பெனி வரைக்கும்தான், உங்க நண்பர்கள் வர்றது ஓகே ஆனா இப்படி வீட்டு விசயத்துக்கெல்லாம் அவங்களை உள்ள