மலருக்கும் பூங்காற்றுக்கும் நடுவே காதல் வரும்... ஊடல் வருமா???
அம்மாவிடம் அனுமதி வாங்காமல் திடீரென சுவாதியை திருமணம் செய்து வருகிறான் விஷாகன்.
திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில் சுவாதி கணவனை பிரிந்து சிதம்பரம் - பத்மாவதி தம்பதிகள் வீட்டில் தங்கி இருக்கிறாள். சிதம்பரத்தின் அம்மா ருக்மணி தவிர அந்த குடும்பத்தில் அனைவருமே அவளை அவர்களில் ஒருத்தியாகவே நடத்துகிறார்கள். விஷாகன் தன்னை தேடி வருவான் என ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள் அவள்...
விஷாகனிடம் சுவாதி தானாகவே வீட்டை விட்டு சென்று விட்டதாக சொல்லி விட்டு, உண்மையில் நடந்ததை சொல்லாமல் மறைக்கிறார்கள் அவனின் அம்மா விஜயாவும், தங்கை விஷ்ணுப்ரியாவும்.
மனைவி பிரிந்து சென்றதற்கு காரணம் புரியா விட்டாலும், மனதில் வலியுடன் அவளை தேடிக் கொண்டிருக்கிறான் விஷாகன்...!
பிரிந்தவர்கள் இணைவார்களா???
அவர்களின் பிரிவுக்கான காரணம் விஷாகனுக்கு தெரிய வருமா???
தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!
ஹரீஷ் அவனுடைய பெற்றோருக்கு ஒரே மகன். தன்னுடைய அறிவால் உருவாக்கி இருக்கும் ரோபோட்டை பிரபலப்படுத்தியப் பிறகு தான் கல்யாணம் என்ற முடிவுடன் இருப்பவன்.
ஹரீஷின் அமைதியான "பேச்சலர்" வாழ்க்கையில் புயலென வருகிறாள் நிலா. அவளின் இனிமை நிறைந்த அறிமுகம் ஹரீஷின் கொள்கைகளை ஆட்டம் காண செய்கிறது!
காதல் தோல்வியினால் வருத்தத்தில் இருக்கும் நிலாவிற்கும் ஹரீஷின் அறிமுகம் பிடித்திருக்கிறது.
எதிர்பாராமல் அவர்களுக்குள் திருமணம் நடந்து விட, ஹரீஷின் மனம் அவனின் ரோபோட்டிடம் இருந்து மனைவி பக்கம் தடம் மாறுகிறது.
ஆனால் நிலா ஹரீஷை விட்டு விலகியே இருக்கிறாள்.
ஹரீஷின் கனவு நிறைவேறியதா? ஹரீஷ் - நிலா வாழ்க்கை என்ன ஆனது? என்பதை "வெண்ணிலவு எனக்கே எனக்கா' நாவல் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.