மலருக்கும் பூங்காற்றுக்கும் நடுவே காதல் வரும்... ஊடல் வருமா???
அம்மாவிடம் அனுமதி வாங்காமல் திடீரென சுவாதியை திருமணம் செய்து வருகிறான் விஷாகன்.
திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில் சுவாதி கணவனை பிரிந்து சிதம்பரம் - பத்மாவதி தம்பதிகள் வீட்டில் தங்கி இருக்கிறாள். சிதம்பரத்தின் அம்மா ருக்மணி தவிர அந்த குடும்பத்தில் அனைவருமே அவளை அவர்களில் ஒருத்தியாகவே நடத்துகிறார்கள். விஷாகன் தன்னை தேடி வருவான் என ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள் அவள்...
விஷாகனிடம் சுவாதி தானாகவே வீட்டை விட்டு சென்று விட்டதாக சொல்லி விட்டு, உண்மையில் நடந்ததை சொல்லாமல் மறைக்கிறார்கள் அவனின் அம்மா விஜயாவும், தங்கை விஷ்ணுப்ரியாவும்.
மனைவி பிரிந்து சென்றதற்கு காரணம் புரியா விட்டாலும், மனதில் வலியுடன் அவளை தேடிக் கொண்டிருக்கிறான் விஷாகன்...!
பிரிந்தவர்கள் இணைவார்களா???
அவர்களின் பிரிவுக்கான காரணம் விஷாகனுக்கு தெரிய வருமா???
தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!
Prologue.
“வீடு வந்திருச்சு சுவாதி,” சொல்லி விட்டு ரியர் வியூ மிரரில் பின் சீட்டில் அமர்ந்திருந்தவளை பார்த்தான் விஷாகன்.
ஏதோ யோசனையில் இருந்தவள், அவன் சொன்னதை கேட்டு மெல்லியதாக அதிர்ந்து அதே கண்ணாடியில் பார்த்தாள்...
அவன் அவளை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருப்பான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை போலும்... அவனின் கண்களை கண்ணாடியில் நேரடியாக சந்தித்ததில் கூட அவளின் முகத்தில் மாற்றம்...
மெது மெதுவாய் வெட்கம் அவளின் முகத்தில் தோன்றுவதை விஷாகன் பார்த்து ரசித்துக் கொண்டிருக்க, கண்களை தழைத்துக் கொண்டாள் சுவாதி.
ஆனாலும் விஷாகன் அவளின் பிம்பத்தை விட்டு உடனே கண்களை அகற்றவில்லை....
அவனால் பார்வையை திருப்பவும் முடியவில்லை. அவள் கழுத்தில் மின்னிய புத்தம் புது தாலி அவனுக்கு அவளிடம் இருக்கும் புது உரிமையை பறை சாற்றியது.
நேற்று காலை அவனிடம் உனக்கு இன்று கல்யாணம் நடக்க போகிறது என்று சொல்லி இருந்தால் கூட சிரித்திருப்பான்...
ஆனால் ஏதேதோ நடந்து விட்டது... இப்போது அவள் அவனின் மனைவி....
வீட்டினுள் அடிக்க காத்திருக்கும் புயலை பற்றிய சிந்தனை கூட இல்லாமல் அவளையே பார்த்திருந்தான் விஷாகன்....
அவனின் மனம் முழுக்க அவளின் மீதான காதல் மட்டுமே நிறைந்திருந்தது...!
????????❀✿????
சுவாதிக்கு கண்களை நிமிர்த்தாமலே விஷாகனின் பார்வை புரிந்தது...!
கிட்டத்தட்ட ஒரு வருடமாகவே அவளுக்கு பரிச்சயமானவன் என்றாலும் இந்த திடீர் கல்யாணம் அவளை ஒரு குழப்பு குழப்பி இருந்தது...!
அவளுக்கு அவனை எப்போதுமே மனதிற்குள் பிடிக்கும் என்றாலும் இப்படி திடீர் திருமணம் எல்லாம் அவள் கற்பனை கூட செய்துப் பார்த்ததில்லை.
அந்த வில்லன் ரகுவை மிரட்ட தான் பேசுகிறான் என்று பார்த்தால் விஷாகன் திடீரென இப்படி மஞ்சள் கயிறுடன் அவள் முன் வந்து நிற்பான் என்றெல்லாம் அவள் எதிர்ப்பார்க்கவே இல்லை....
அவளும் அவனை விரும்பி தான் மணந்துக் கொண்டாள்....
ஆனால்.... இப்போது அவனின் வீட்டில் வரவேற்பு எப்படி இருக்கும் என்று தான் புரியவில்லை!
சுவாதி இறங்குவதற்கான அறிகுறி தெரியாததால் காரில் இருந்து இறங்கிய விஷாகன், அவள் பக்கம் இருந்த கதவையும் திறந்து,
- பிந்து வினோத்
- வினோத்
- Bindu Vinod
- Vinod
- Romance
- Family
- SoftRomance
- Tamil
- Novel
- Drama
- Books
- from_Chillzee
- KiMo_Only_Specials
- Chillzee_Originals