காதலை கற்றுத் தந்து படிக்க முடியுமா??
இந்த நாவலின் கதாநாயகியுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்!
இது ஒரு எளிய, இனிய காதல் கதை!
கற்றுக் கொடு கண்ணாலே!
1.
ஜஸ்டீன் பீபர் குரல் இனிமையாக பாடிக் கொண்டிருந்தது.
Don't you give up, nah, nah, nah,
I won't give up, nah, nah, nah,
Let me love you,
Let me love you,
smuleல் பாடி கொடுமைப் படுத்துபவர்களுடன் போட்டிக்குப் போபவனை போல இனியவனும் ஜஸ்டீன் பீபருடன் சேர்ந்து பாடிக் (கத்திக்) கொண்டிருந்தான்.
“இனியா, சவுண்டை கம்மி செய். பக்கத்து வீட்டுல இருக்கவங்க எல்லாம் கம்ப்ளெயின்ட் செய்யப் போறாங்க.” இனியவனின் அம்மா ஜெயஸ்ரீ எங்கேயோ இருந்து குரல் கொடுத்தாள்.
“என்னம்மா நீங்க!. எப்போ பாரு பக்கத்து வீட்டுக்காரங்களையும் எதிர் வீட்டுகாரங்களையும் பத்தியே கவலைப் படுறீங்க!”
இனியவன் பதில் சொல்லிக் கொண்டிருக்க, ஜெயஸ்ரீ அங்கேயே வந்தாள்.
“சரி, சரி புலம்பாதே. நீ ரெடியா இனியா? கிளம்பலாமா? டிரைவர் வந்து ஒரு மணி நேரம் ஆச்சு.”
“நான் ரெடிம்மா. இந்த டீ ஷர்ட் எப்படிம்மா இருக்கு? லாஸ்ட் வீக் வாங்கினேன்.”
ஜெயஸ்ரீ மகனை பெருமையுடன் பார்த்தாள். சிறுக்குழந்தையாக இருந்தவன் எப்போது இப்படி ஆறடி உயர இளைஞனாக வளர்ந்தான்!
அவன் அணிந்திருந்த புது சட்டையை கவனித்தாள்.
“போன மாசமும் இதே மாதிரி ப்ளூ கலர்ல ஒன்னு வாங்கினீயேடா? அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்?”
“அது நேவி ப்ளூம்மா. இது சஃபையர் ப்ளூ.”
“என் கண்ணுக்கு இரண்டும் ஒரே ப்ளூவா தான் தெரியுது. உனக்கு தான் வித்தியாசம் தெரியுது.”
“ஊருக்குப் போயிட்டு வந்த உடனே ஒரு நல்ல கண் டாக்டர் கிட்ட உங்களை கூட்டிட்டுப் போய் கண்ணாடி வாங்கி மாட்டி தரேன்.”
“உனக்கு ப்ளூ கலர் பிடிக்கும்னு உண்மையை சொல்லு. அதை விட்டுட்டு எனக்கு எதுக்கு கண்ணாடி வாங்கி தரேன்னு சொல்லி ஏமாத்துற?”
“ஜெயா, அவன் ரெடியா? போலாமா?” தூரத்தில் இருந்து ஆண் குரல் கேட்டது.
“அப்பா கூப்பிடுறார் இனியா. லேட்டா போனா திட்டுவார். வா போகலாம்.”
ஜெயஸ்ரீ முன்னே போக, இனியவன் ப்ளூடூத் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு ஐபோனில் அதை pair செய்துக் கொண்டு பின்னே நடந்தான்.