மலருக்கும் பூங்காற்றுக்கும் நடுவே காதல் வரும்... ஊடல் வருமா???
அம்மாவிடம் அனுமதி வாங்காமல் திடீரென சுவாதியை திருமணம் செய்து வருகிறான் விஷாகன்.
திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில் சுவாதி கணவனை பிரிந்து சிதம்பரம் - பத்மாவதி தம்பதிகள் வீட்டில் தங்கி இருக்கிறாள். சிதம்பரத்தின் அம்மா ருக்மணி தவிர அந்த குடும்பத்தில் அனைவருமே அவளை அவர்களில் ஒருத்தியாகவே நடத்துகிறார்கள். விஷாகன் தன்னை தேடி வருவான் என ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள் அவள்...
விஷாகனிடம் சுவாதி தானாகவே வீட்டை விட்டு சென்று விட்டதாக சொல்லி விட்டு, உண்மையில் நடந்ததை சொல்லாமல் மறைக்கிறார்கள் அவனின் அம்மா விஜயாவும், தங்கை விஷ்ணுப்ரியாவும்.
மனைவி பிரிந்து சென்றதற்கு காரணம் புரியா விட்டாலும், மனதில் வலியுடன் அவளை தேடிக் கொண்டிருக்கிறான் விஷாகன்...!
பிரிந்தவர்கள் இணைவார்களா???
அவர்களின் பிரிவுக்கான காரணம் விஷாகனுக்கு தெரிய வருமா???
தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!
நந்தினி - தன் குடும்ப சூழ்நிலைகளால் தன்னை சுற்றி ஒரு தனிமை வட்டம் அமைத்துக் கொண்டு, வேலையில் தன்னை ஆழ்த்திக் கொண்டிருப்பவள்!
அவளின் வாழ்வில் இனிய சூறாவளியாய் நுழைந்து, அவளின் மனதைக் கொள்ளைக் கொள்கிறான் எஸ்.கே எனும் சதீஷ் குமார்!
நந்தினி தன் காதலை மனதினுள் வளர்த்துக் கொண்டே செல்ல, அந்த காதலின் பிரதிபலிப்பு சதீஷிடமும் இருக்குமா அல்லது அது வெறும் நட்பு மட்டும் தானா??
சதீஷின் வாழ்வில் எட்டிப் பார்க்கும் மீரா யார்? அவளுக்கும் சதீஷிற்கும் நடுவே இருக்கும் உறவு என்ன?
நந்தினியின் காதல் வெற்றி பெற்றதா???
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!
எளிமையான ஆனால் இனிமையான காதல் கதை.
குடும்பம் - காதல் சார்ந்த பொழுதுபோக்கு + ஜனரஞ்சக கதை.
Chillzeeயில் என்றென்றும் உன்னுடன் - 01 என்ற பெயரில் தொடராக வந்த கதை இது.
சிறிய தொழிற்சாலை ஒன்றின் முதலாளியான கோபி, தன் மனைவி சரண்யா மற்றும் ஒரு வயது குழந்தை நிஷாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான்.
எதிர்பாராத விதமாக ஒரு சாலை விபத்தில் கோபி இறந்து விட, சரண்யா அவனின் தொழிற்சாலையை எடுத்து நடத்துகிறாள். அனுபவமின்மையாலும், தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தாலும் வரும் லாபத்தை தொழிற்சாலைக்கு என்று எடுத்து வைக்காமல் செலவிடுகிறாள் சரண்யா.
மூன்று ஆண்டுகள் செல்ல, தொழிற்சாலைக்கு என்று முன்பு வாங்கி இருந்த கடன் பெரிதாக வளர்ந்து பயமுறுத்துகிறது. குடும்ப நண்பராக இருக்கும் சேகர் தவிர உறவினர் யாருடைய துணையும் இல்லாமல் இருக்கும் சரண்யா, தொழிற்சாலையை விற்க முடிவு செய்கிறாள்.
சிங்கப்பூரில் இருந்து யார் மீதோ பழி உணர்ச்சியுடன் பல வருடங்களுக்கு பின் வந்திருக்கும் மித்ரன், அந்த தொழிற்சாலையை வாங்குகிறான். அங்கே பணிபுரிபவர்கள் சரண்யா மீது காட்டும் அன்பும், பணிவும் கோபத்தை தர, சரண்யா மீது எரிந்து விழுகிறான். கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மற்றவர் முன்னிலையில் அவளை அவமானப் படுத்துகிறான்.
இது போன்ற காரணமற்ற கோபத்தை சந்தித்து பழகி இராத சரண்யா திகைத்து போகிறாள். என்ன செய்வது என்று குழம்பும் போது, முன்பு கோபி கொடுத்த விசிடிங் கார்ட் கண்ணில் பட, அதில் இருக்கும் முகவரிக்கு சென்று மைத்ரேயியை சந்தித்து உதவி கேட்கிறாள்.
சரண்யாவிடம் தோழி போல பேசும் மைத்ரேயி, மித்ரன் எனும் பெயரை கேட்டு அதிர்ச்சி ஆகிறாள்...!
சரண்யாவின் வாழ்க்கை என்ன ஆனது? மைரேயிக்கும் மித்ரனுக்கும் நடுவே இருக்கும் உறவு என்ன? மித்ரன் இப்படி இருக்க காரணம் என்ன?
தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள் :-)
நந்தினி - மிடில் கிளாஸ் பேமிலியை சேர்ந்தவள். அம்மா, தங்கை, தம்பி எனும் அன்பான குடும்ப வட்டத்தில் வாழ்பவள்.
எஸ்.கே (எனும்) சதீஷ் குமார் - பணக்காரன், வாழ்க்கையை அதன் பாட்டில் ஜாலியாக ரசிப்பவன்.
எஸ்.கேவும் நந்தினியும் சந்தித்தால் என்ன ஆகும்?
Opposite poles attract each other எனும் Laws of attraction உண்மை தானா???
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!
கல்லூரிக் காலம் முதலே நந்திதாவை விரும்புகிறான் உதய்! நந்திதா அவனை விட இரண்டு வருடம் பெரியவள் எனும் காரணத்திற்காக அந்த காதலை சொல்லாமலே மூடி வைக்கிறான்!
வருடங்கள் ஓடிப் போக, பல வருடங்களுக்குப் பின் நந்திதாவை மீண்டும் சந்திக்கும் உதயின் காதல் மீண்டும் அவனுள் மலர்ந்து மணம் வீசுகிறது...! அந்த மணம் நந்திதாவையும் தழுவிச் செல்கிறது...
அவளையும் அறியாமலேயே உதயின் மீது ஈர்க்கப் படுகிறாள் நந்திதா!
காதல் என்று வந்தால், பிரச்சனை இல்லாமல் போய் விடுமா? பிரச்சனைகளை எதிர் கொண்டு உதய் நந்திதாவை திருமணம் செய்துக் கொள்கிறானா? அந்த திருமணம் வெற்றி பெற்றதா???
கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!