Online Books / Novels Tagged : Bindu Vinod - Chillzee KiMo

விளக்கேற்றி வைக்கிறேன்... - பிந்து வினோத்

Second edition.

கதையைப் பற்றி:

கிராமத்து இளைஞன் சசி, சென்னையில் சிந்துவைப் பார்த்த உடனே காதல் கொள்கிறான்.

சிந்துவிற்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதை தெரிந்து சசி வருத்தம் அடையும் போதே, எதிர்பாராத விதமாக அவளை திருமணம் செய்துக் கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கிறது. அதைத் தவறாமல் பயன்படுத்தியும் கொள்கிறான்.

ஆனால் அந்த திருமணம் சிந்துவிற்கு பிடிக்குமா? சசியின் பெற்றோர் அதை ஏற்றுக் கொள்வார்களா??

தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!

Chillzee Reviews

Check out the Vilaketri vaikkiren story reviews from our readers.

  

 

Published in Books

பொன் மாலை மயக்கம்...! - பிந்து வினோத்

Chillzee Princess Series - 02 - Princess Pirai Nila.

கதை சுருக்கம்:

வேலையே உலகம் என்று இருக்கும் அகிலா லே-ஆஃப் ஆன மன வருத்தத்தில் இருந்து தப்பிக்க ஹெவன் ஐலான்டிற்கு வருகிறாள். அங்கே அவள் தங்கும் ஹோட்டலில் ஆனந்த் அவளுக்கு அறிமுகம் ஆகிறான். அகிலாவின் மனம் ஆனந்தின் வசம் செல்கிறது! ஆனந்த் அந்த ஹோட்டலில் பணி புரிபவன் என்று அகிலா நினைக்க, அவனோ விஜயத் தீவின் இளவரசன் என்பது தெரிய வருகிறது. அகிலாவை புரிந்துக் கொள்ளும் ஆனந்த், தங்கள் தீவை சுற்றி இருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து பாதுகாக்க அகிலாவின் உதவியை நாடுகிறான்.

அகிலாவும் ஆனந்திற்காக உதவ சம்மதிக்கிறாள். விஜயத் தீவில் ஆனந்தின் அக்கா பிறைநிலா, அவளுக்காக நிச்சயம் செய்யப் பட்டிருக்கும் இளவரசன் விஜயன் ஆகியோரையும் அகிலா சந்திக்கிறாள். பிறைநிலா - அகிலா நடுவே முதல் சந்திப்பு முதலே 'கேட் - மவுஸ்' பனிப்போர் நடக்கிறது! ஆனால் விஜயத் தீவு மக்கள் அனைவரும் பிறைநிலாவின் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்கள். அதுவும் ஆனந்தை விட அவள் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்கள். அது எதனால் என்று அகிலாவிற்கு புரிய மறுக்கிறது! தனக்கே உரிய ஆர்வக் கோளாரினால் அதையும் தெரிந்துக் கொள்ள முயலுகிறாள்!

எதனால் பெரியவர்கள் நிச்சயம் செய்த பிறைநிலா - விஜயன் திருமணம் தடைப் பட்டு நிற்கிறது? ஆனந்த் - அகிலா காதலை பிறைநிலா ஏற்றுக் கொள்வாளா? விஜயத் தீவின் பிரச்சனைகள் எப்படி தீர்ந்தது? அகிலா - பிறைநிலா தங்கள் பனிப்போரை எப்படி முடிவுக்கு கொண்டு வந்தார்கள்???

கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

 

Published in Books

உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத்

Just Romance Series

 

அறிவழகன்,பார்க்க ரவுடி போன்ற தோற்றத்தில் இருந்தாலும், அவன் ஒரு கோடீஸ்வரன். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், உலகமெங்கும் கோலோச்சும் ஆக்ரோ-ஃபார்ம் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பவன். காதல், கல்யாணம் என்பதில் எல்லாம் அவனுக்கு விருப்பமும் இல்லை, நேரமும் இல்லை. ஆனால், தான்யா’வை சந்தித்ததும் அவன் மனம் நிலைத் தடுமாறுகிறது. பணக்கார குடும்பத்தை சேர்ந்த தான்யா அழகி என்றாலும் அறிவழகன் கண்ணுக்கு செல்லமாக வளர்ந்து ‘குட்டிச்சுவராகி’ப் போன பெண்ணாக தெரிகிறாள். ஆனாலும் அவனின் மனம் அவளுக்காக ஆசைப்படுகிறது. தான்யாவின் அழகும், நேரடியான பேச்சும், இனிய புன்னகையும் அவனை அவளிடம் மயங்க வைக்கிறது. மனம் என்ற ஒன்றை பற்றி யோசிக்காமல் இருக்கும் அறிவழகனால் தான்யாவின் மனதை வெல்ல முடியுமா? தான்யா அதற்கு இடம் கொடுப்பாளா??

  

தான்யா தன் சொந்த பிரச்சனைகளில் மூழ்கிப் போயிருப்பவள். கல்யாணம் என்ற உறவு வேண்டவே வேண்டாம் என்ற முடிவுடன் அமைதியான வாழ்வை வாழ முயற்சி செய்துக் கொண்டிருப்பவள். அறிவழகனை சந்தித்ததும் அவள் வேண்டாம் என்று மறந்திருந்த மெல்லிய உணர்வுகள் அவளின் எதிர்ப்பையும் மீறி மீண்டும் அவளுள் மலர்கின்றது. எப்போதும் எச்சரிக்கை உணர்வுடனே இருக்கும் தான்யா அறிவழகனின் வசீகரத்தில் ஈர்க்கப்படுவாளா? அவன் சொல்லாமல் சொல்லும் “ஹாப்பிலி எவர் ஆஃப்ட்டர்” வாழ்க்கை சாத்தியமானது தானா??

 

அத்தியாயம் 01:

Let’s meet Tanya. - Free Preview

   

அத்தியாயம் 02:

He's the hero! - Free Preview

   

அத்தியாயம் 03:

What's he up to? - Free Preview

   

அத்தியாயம் 04:

And they meet... - Free Preview

   

அத்தியாயம் 05:

It's not a fairy tale... - Free Preview

 

அத்தியாயம் 06:

So, Who is she? - Free Preview

 

அத்தியாயம் 07:

Is it fate? - Free Preview

   

அத்தியாயம் 08:

She is... - Free Preview

 

அத்தியாயம் 09:

What's wrong with him? - Free Preview

 

அத்தியாயம் 10:

TBA

 

Published in Books