ஒரு சிறு கதை :-)
பசும்பொன்னை பித்தளையா...!
வைபவ் கொடுத்த பையில் இருந்த காய்கறிகளை வெளியே கொட்டிய விதுலாவிற்கு கோபமாக வந்தது.
அவன் வாங்கி வந்திருந்த வெண்டக்காய் அனைத்தும் முற்றி போய் இருந்தது.
பார்த்தாலே அந்த காயை பயன்படுத்த முடியாது என்று தெரிந்தது. அதை காசு கொடுத்து வாங்கி வந்தவனை என்ன என்று சொல்வது.
பி.பி ஏற வைபவிடம் கோபமாக வெண்டைக்காயை பற்றிக் கேட்டாள்.
அவன் எப்போதும் போல வாயை திறக்கவே இல்லை. மௌன ராகம் பாடினான்...!
இது கிட்டத்தட்ட தினம் தினம் அவர்களின் வீட்டில் நடப்பது தான்.
விதுலாவிற்கு கோபம் பொங்கியது! வெண்டக்காய் விஷயம் கூட பரவாயில்லை ஆனால் அவள் இப்படி கோபப் படும் போது வைபவ் ‘கல்’ போல அமைதியாக இருப்பது தான் அவளுக்கு அதிக கோபத்தை கொடுத்தது.
Tagged under
- பிந்து வினோத்
- பிந்து
- வினோத்
- Bindu Vinod
- Bindu
- Vinod
- shortRead
- shortStory
- Family
- Romance
- Tamil
- Drama
- Books