என்ன கல்யாணமடி கல்யாணம்...! - பிந்து வினோத் : Enna kalyanamati kalyanam...! - Bindu Vinod
 

ஒரு சிறு கதை :-)

 


என்ன கல்யாணமடி கல்யாணம்...!

   

சுமதியும், சுதாவும், மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் அன்று முடிக்க வேண்டிய முக்கியமான வேலை ஒன்று இருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த தனியார் கணினி மென்பொருள் நிறுவனத்தில் ஒன்றாக வேலை செய்த அவர்கள் இருவரும் மிக நெருங்கிய தோழிகள். இருவரும் தங்கள் சொந்த ஊரை விட்டு சிங்கார சென்னைக்கு வந்து விடுதியில் தங்கி பணி புரிந்து வந்தனர். திடீரென,

  

"எனக்குப் பிடிக்கவே இல்லை சுதா..." என்றாள் சுமதி.

  

தலையும் வாலும் இல்லாமல் சுமதி சொன்னப் போதும், அவள் எதைப் பற்றி சொல்கிறாள் என்பது தெரிந்திருந்ததால், சுதா தோழியைப் பார்த்து புன்னகைத்து விட்டு, தன் வேலையைத் தொடர்ந்தாள்.

  

"எனக்கு தான் பிடிக்கலைன்னு சொல்றேன்ல அப்புறம் ஏன் இதை எல்லாம் செய்றாங்க?" என்றாள் சுமதி சற்றே கோபத்துடன்.

  

"சுமதி... நீ வொர்க் செய்துட்டு இருக்க ப்ரோக்ராமை முடிச்சிட்டு வா... நாம வெளியே போய் பேசலாம்..." என்றாள் சுதா அவளை சமாதானப்படுதுவதுப் போல!

  

"மண்ணாங்கட்டி... ப்ரோக்ராம்மா இது... எவன் எழுதினது? ஒரு கமெண்ட்டும் இல்லை ஒன்னும் இல்லை...."