Chillzee KiMo Books - நீ காற்று... நான் மரம்... - பிந்து வினோத் : Ni Karru... Nan maram... - Bindu Vinod

நீ காற்று... நான் மரம்... - பிந்து வினோத் : Ni Karru... Nan maram... - Bindu Vinod
 

#திருமண வாழ்க்கை :-)

 


நீ காற்று... நான் மரம்...

  

மாலை நேரத்து மெல்லிய ஒளியில் ‘அரவிந்த் கார்ப்பரேட் ட்ரெய்னிங் சொல்யுஷன்ஸ்’ என்ற பெயர் அந்த சிறிய கட்டிடத்தின் வாசலில் இருந்த பெரிய ஃப்ளெக்ஸ் போர்டில் பளிச்சிட்டு கொண்டிருந்தது.

  

கட்டிடத்தின் உள்ளே, சீராக இயங்கும் அலுவலகம் என்பதை பறை சாற்றும் விதமாக வரவேற்பறை எளிமையாக ஆனால் நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.

  

ஆங்காங்கே இருந்த அறைகளில் இருந்து வெளி வந்த மெல்லிய ஓசைகள் வகுப்புகள் நடந்துக் கொண்டிருப்பதை சொல்லாமல் சொன்னது.

  

‘சாந்தி’ என்று தங்க நிறத்தில் பெயர் பொறிக்கப் பட்டிருந்த கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள் சஞ்சனா.

  

கையிலிருந்த ஃபைலை தன் டேபிளின் மீது கோபமாக போட்டவள், பக்கத்து டேபிளில் மும்முரமாக வேலையில் ஈடுப்பட்டிருந்த அகல்யாவிடம்,

  

“கடுப்பா வருது அகல்....” என்றாள்.

  

“ஏன்ப்பா?” அக்கறையாக விசாரித்தாள் அகல்யா.

  

“திரும்ப நம்ம ஹீரோ ஹீரோயின் நடுவே சண்டை போலிருக்கு...”

  

“யாரு சாந்தி மேடமும், அரவிந்த் சாருமா?”

  

“ம்ம்ம்... வேற யாரு இங்கே ஹீரோ, ஹீரோயின்?”

  

“அவங்க ரெண்டு பேரு நடுவே சண்டைன்னு உனக்கு எப்படி தெரியும்?”

  

“நான் அங்கே இருந்த டைம்லேயே ஒரு பத்து தடவை அவர் போன் செய்தார்... மேடம் போனை எடுக்காம கட் செய்துட்டே இருந்தாங்க...”

  

☆☆☆☆☆