கதையைப் பற்றி:
இது ஒரு ‘டெலிபதி’ காதல் கதை!!!!
கதையைப் பற்றி ஒன் லைனரில் சொல்ல வேண்டும் என்றால்,
கார்த்திக் – அத்விதா திருமணம், கடைசி நிமிடத்தில் அத்விதா வேண்டாம் என்று சொல்வதால் நின்றுப் போகிறது. எதனால் அத்விதா கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாள் என்று தெரிந்துக் கொள்ள முயலுகிறான் கார்த்திக்.
அதில் வெற்றிப் பெற்றானா, அவர்கள் திருமணம் நடந்ததா என்பதை தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள்!
Chillzee Reviews
Check out the Enge en kadhali? Enge...? Enge...? novel reviews from our readers.
01. எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...?
வேர்வைத் துளிகள் மண்ணில் விழுந்து சிதற புஷ்-அப் எடுத்துக் கொண்டிருந்தான் நம் நாயகன் கார்த்திக் என்கிற கார்த்திகேயன்!
அந்த ஜிம்மில் இருந்த அனைத்து வயது பெண்களுமே அவனை கவனிக்கத் தான் செய்தார்கள்! ஆண்களோ பொறாமை பெருமூச்சு விட்டார்கள்!
கார்த்திக்கின் கூர்மையான விழிகள் அதை எல்லாம் கவனித்தாலும், அவனின் மனம் அது எதையும் கண்டுக் கொள்ளவில்லை.
கார்த்திக் ஆறடி உயரம்!
சிக்ஸ்-பேக் இருக்கும் உடல் வாகு!
தினம் தினம் செய்யும் உடற்பயிற்சியால் ‘கட்’ இருக்கும் கைகள்!
அவன் ஆரோக்கியமானவன் என்பதை பறைசாற்றும் அடர்த்தியான ஆனால் சீராக வெட்டப்பட்ட தலை முடி!
உதட்டின் மேலே இருந்த அடர் மீசை அவனுக்கு தனி வசீகரத்தை கொடுத்திருந்தது.
பிரவுன் நிற கருவிழிகளை கொண்ட கண்களில் ஒளிர்விட்ட கவர்ச்சியையும் தாண்டி கவனம் மின்னியது!
மொத்தத்தில் கார்த்திக் ஒரு ஷார்ப், ஸ்மார்ட் & ஹான்ட்சம் ஹீரோ!
ஒன்றரை மணி நேர வொர்க்-அவுட் முடித்து விட்டு டவலால் முகத்தை துடைத்த படி ஜிம்மில் இருந்து வெளியே வந்தான் கார்த்திக்.
பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், கார்திக்கின் கண்கள் நாலாப்புறமும் கூர்மையுடன் சுழன்றன!
எப்போதும் எந்த நொடியிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பது அவன் செய்யும் வேலை அவனுக்கு சொல்லிக் கொடுத்திருந்த பாடம்.
இந்திய நாட்டின் உளவுத்துறை RAWவின் [Research and Analysis Wing] ரகசிய உளவாளி கார்த்திக்.
தன்னுடையை வேலையில் பலவிதமான அபாய மிஷன்களை கச்சிதமாக முடித்திருப்பவன்! அதனாலேயே RAWவின் தலைவர் மனீஷின் நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பவன்.
அவன் செய்யும் வேலை பற்றிய முழு விபரம் அவனுடைய பெற்றோர், அக்கா உட்பட யாருக்குமே தெரியாது.
இந்திய அரசாங்கத்திற்காக வேலை செய்கிறான்! அவனுடைய வேலை சம்மந்தப்பட்ட விபரங்கள் மிகவும் ரகசியமானது என்பது மட்டும் அவர்களுக்குத் தெரியும்!
எப்போதாவது நேரம் கிடைக்கும் போது அவர்களுடன் போனில் பேசுவான் கார்த்திக்.
இன்று அவனுடைய அக்கா கயல்விழியின் பிறந்தநாள். அவளுக்கு வாழ்த்து சொல்வதற்காக மொபைல் போனை காரின் ப்ளூடூத்தில் கனக்ட் செய்து கயலின் நம்பரை அழைத்தான்.
‘மிஷனி’’ல் இல்லாமல் இருக்கும் போதும் கூட கார்த்திக்கின் பேச்சை யாரும் ஒட்டுக் கேட்டு விடக் கூடாது என்பதற்காக அவனுடைய போனில் ரகசிய
- Bindu Vinod
- Bindu
- Vinod
- பிந்து வினோத்
- பிந்து
- வினோத்
- Books
- Family
- Romance
- Novel
- Tamil
- Drama
- from_Chillzee
- Chillzee_Originals