Padmini Selvaraj

Padmini Selvaraj

வராமல் வந்த தேவதை..!  - பத்மினி செல்வராஜ்

முன்னுரை

அன்பான வாசகர் தோழமைகளே!!!

மீண்டும் ஒரு புதிய கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான, கலகலப்பான, ஜாலியான காதல் கதைதான். தொடர்ந்து படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!

கனவே கை சேர வா..!  - பத்மினி செல்வராஜ்

அன்பான வாசகர் தோழமைகளே!!!

அனைவருக்கும் வணக்கம்..!

மீண்டும் ஒரு புதிய கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

இந்த கதை அன்றும், இன்றுமாக பயணித்து பின் ஒன்றாக இணையும். இந்த கதையின் நாயகன் நாயகியோடு என்னுயிர் கருவாச்சி யின் நாயகன், நாயகி ராசய்யா , பூங்கொடி மற்றும் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த கதையிலும் உலா வருவார்கள்.

இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான, ஜாலியான காதல் கதைதான். படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!

- அன்புடன் பத்மினி செல்வராஜ்!

என்னுயிர் கருவாச்சி..! - பத்மினி செல்வராஜ்

அன்பான வாசகர் தோழமைகளே!!!

அனைவருக்கும் வணக்கம்..!  ஒரு புதிய கதையை  உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.

வழக்கமான கதைகளில் வரும் ஹேன்ட்ஸமான மல்ட்டி மில்லினர் நாயகனும் , அதீத அழகுடைய மத்தியதரத்து நாயகியும் இல்லாமல், நம் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராசய்யாவும், பூங்கொடியும் தான் இந்த கதையின் நாயகன்,  நாயகி.

நன்றாக ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தை எப்படி கலைப்பது?...தன் எதிரிக்கு எப்படி குழி பறிப்பது? கணவன் மனைவி இடையே எப்படி வில்லங்கத்தை கொண்டு வருவது?  

என்று ரூம் போட்டு யோசிக்கும் வில்லனோ, வில்லியோ இல்லாமல், எதார்த்தமான  ஒரு கிராமத்து ஜோடியின் காதல் கதை…!

இந்த கதை 1999 ஆம் ஆண்டு கால கட்டத்தில் நடந்த கதையாக பாவித்து படியுங்கள்.    

இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான, கலகலப்பான, ஜாலியான காதல் கதைதான். படித்துவிட்டு  மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!  

நான் அவன் இல்லை! - பத்மினி செல்வராஜ்

அன்பான வாசகர் தோழமைகளே!!!

எனது புதிய கதையுடன் மீண்டும் உங்களை சந்திக்க வந்து விட்டேன்.

மத்தியதர குடும்பத்தை சேர்ந்தவள் நம் கதையின் நாயகி...எப்பொழுதும் தேனி போன்ற சுறுசுறுப்பும், துறுதுறுப்பும், கூடவே கொஞ்சமாய் அசட்டுதுணிச்சலும் மிக்கவள். காலத்தின் கணக்கால் பட்டாம்பூச்சியாய் சுற்றி திரியும் தருணத்தில் குடும்பத்தின் பொறுப்பை சுமக்க வேண்டிய சூழ்நிலை.

அதையும் இன்முகத்துடனே சுமக்க தயாராகிறாள் அந்த பட்டாம்பூச்சி. . கூடவே அவளுடைய அசட்டு தைர்யத்தில் யோசிக்காமல் அவள் செய்யும் ஒரு செயல் அவள் வாழ்க்கையையே புரட்டி போட இருக்கிறது.

அவளுக்கு பல இன்னல்களை கொண்டு வந்து சேர்க்க போகிறது. அந்த இன்னல்களை எல்லாம் சமாளித்து வெளிவருவாளா? அவள் வாழ்க்கையில் மீண்டும் பட்டாம்பூச்சியாய் வலம் வருவாளா?

தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்...

இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான, கலகலப்பான, ஜாலியான காதல் கதைதான். தொடர்ந்து படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!  

பெண் ஒன்று கண்டேன்...! - பத்மினி செல்வராஜ்

அன்பான வாசக தோழமைகளே!!!

அனைவருக்கும் வணக்கம் !. எனது புதிய கதையுடன் மீண்டும் உங்களை சந்திக்க வந்து விட்டேன்.

முதன்முறையாக காதலை குறைத்து நட்பை பற்றி எழுதிட வந்திருக்கிறேன். அதற்காக காதல் இல்லை என்றில்லை..காதல் இல்லாமல் மானிடமே இல்லையே..!

நட்பு- உலகில் அன்னையின் அன்புக்குப்பின் உன்னதமாகப் போற்றப்படுவது நல்லதொரு நண்பன்/நண்பி  காட்டும் தூய்மையான அன்புதான்.  காதலுக்கு இணையானது... அதையும் விடவே மேலானது.

நட்பு என்றாலே பொதுவாக பெண்களின் நட்புதான் கண் முன்னே நிற்கும். ஆனால் காலங்காலமாய் ஆண்களின் நட்புதான் பெரிதாக போற்றபட்டு வந்திருக்கின்றன.

நட்பு என்றதும் கண் முன்னே வருவது தமிழ் புராணங்களில் காட்டப்பட்ட துரியோதனன்-கர்ணன் நட்பு, கண்ணன்-குசேலன் நட்பு. அதோடு நிஜ வாழ்க்கையிலும் பெரிதாக போற்றப்பட்ட கார்ல் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் நட்பு, கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் நட்பு... இப்படி இன்னும் எத்தனையோ பேர்களை வரிசைபடுத்தலாம்.

இன்றைய தலைமுறையிலும், அன்றாடம் பழகும் சமுதாயத்திலும்  இவர்களைப் போன்ற நெருங்கிய நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படிபட்ட நட்பில்,  ஈருடல் ஓருயிராக பழகிய இருவரின் நட்பில் விரிசல் வந்தால்? அது எப்படி அவர்களை பாதிக்கும்? அந்த விரிசலில் சிக்கி கொண்ட  இரு பெண்களின் வாழ்க்கை  என்ன ஆனது?. ஒருமுறை விழுந்த விரிசல் மீண்டும் சரியாகுமா? சொல்ல வந்திருக்கிறேன் பெண் ஒன்று கண்டேன் பயணத்தின் மூலமாக.

இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான நட்பு+ காதல் கலந்த ஜாலியான கதைதான். தொடர்ந்து படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!  

Page 1 of 5