Online Books / Novels Tagged : பிந்து வினோத் - Chillzee KiMo

கண்ணை நம்பாதே... - பிந்து வினோத்

இந்த சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு விதத்தில் என் மனதில் ஏற்பட்ட பாதிப்பின் பிரதிபலிப்பாக நான் எழுதியது...

என்னுடைய ரொமாண்டிக் கதைகளையே படித்திருப்பவர்களுக்கு இது ஒரு பெரிய மாற்றமாக இருக்கும் :-)

படித்து விட்டு சொல்லுங்கள்.

Published in Books

வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா? - பிந்து வினோத்

இந்த கதையும் ஒரு இனிய, எளியக் காதல் கதை தான்!

Published in Books

பனிப்பாறை - பிந்து வினோத்

திருமண வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதுமே மகிழ்ச்சியான ஒன்றாக இருப்பதில்லை! நம் பெண்களைப் பொறுத்தவரை திருமணத்திற்கு பின் என் குடும்பம் என்று வட்டத்திற்குள் தங்களை நுழைத்துக் கொள்பவர்கள் அதிகம்.

இந்த கதையின் கதாநாயகி கல்பனாவும் அப்படி தான்! கணவன் - குழந்தைகள் என்று ஒரு சிறிய வட்டத்திற்குள் வாழ்கிறாள். அவளின் நம்பிக்கையை உடைத்து அவளின் கணவன் அவளை கைவிடும் போது, இலகுவான தண்ணீர் எப்படி டைட்டானிக் போன்ற பெரிய கப்பலை கவிழ்க்கும் பனிப்பாறையாக மாறுகிறதோ அதேப் போல தன் நிலையில் இருந்து மீண்டு எழுந்து வருகிறாள்!

பொதுவாக சந்தோஷமான கதைகளையே எழுதி பழக்கப் பட்டு போயிருந்த எனக்கு கல்பனாவை இப்படி ஒரு நிலையில் விட மனம் வரவில்லை... அதனால் தான் இதே கதைக்கு சந்தோஷமான alternate version ஒன்றும் கொடுத்தேன்.

ஆனால் இந்த கல்பனா... அவளின் வலி... அதிலிருந்து மீண்டு எழுந்து வரும் அவளின் வலுவான ஆளுமை என்னையே ஆச்சர்யப் படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்!

Published in Books

அ... ஆ... இ... ஈ...

இது ஒரு சிம்பிள் லவ் story :-) 

நமக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ, தெரியுதோ தெரியலையோ வாழ்க்கையில நடக்குற ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்துக்கு பின்னாலேயும் ஒரு பெரிய கனக்ஷன் இருக்குன்னு அப்பப்ப தோணும்...

அப்படி சிலர் வாழ்க்கையில நடக்கும் நிகழ்வுகள் அவங்களுக்கே தெரியாமல் எப்படி மற்றவர்களை தாக்கம் செய்கிறது என்பது தான் இந்த சிம்பிள் கதையின் ஒன் லைன் கரு :-)

Things we lose have a way of coming back to us in the end...!

ஃபீல் குட் லவ் ஸ்டோரி! படித்து மகிழுங்கள்!

Published in Books

எங்கே எந்தன்  இதயம் அன்பே...! - பிந்து வினோத்

 

ரவிந்த்

கதையின் கதாநாயகன்!

தொலைத்து விட்ட காதலை தேடி லண்டனில் இருந்து இந்தியா வருகிறான்.

சென்னையில் அவனுக்கு பெரிய அதிர்ச்சி தரும் செய்தி காத்திருக்கிறது!

 

சாந்தி

கதையின் கதாநாயகி!

அரவிந்தின் மீது 1000% அன்பை வைத்து மனம் உடைந்துப் போனவள்!

 

ழந்த காதலை தேடி வந்தவனும், உடைந்த மனதை மறைத்து வாழ்பவளும் மீண்டும் சந்திப்பார்களா???

அப்படி சந்தித்தால்????

 

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!!

 

காதல் – குடும்ப வகையை சார்ந்த பொழுதுப்போக்கு கதை.

Published in Books