அத்தியாயம் 1
“நான் தப்பு பண்ணிட்டேன்.... இப்படி இருக்கும்னு நான் யோசிக்காமலே விட்டுட்டேன்...”
காரில் அவளின் பக்கத்தில் அமர்ந்திருந்த பவித்ராவின் முனுமுனுப்பு ஆகான்ஷாவிற்கு தெளிவாக கேட்டது...
என்ன என்று கேட்கலாமா வேண்டாமா???
அவள் யோசிக்கும் போதே பவித்ரா தலையை இல்லை என சொல்வது போல ஆட்டிவிட்டு ஜன்னல் பக்கமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.
ஆகான்ஷாவும் தன் காதில் விழுந்ததை அத்துடன் மறந்தே போனாள்...
ஆனால், அன்று இரவு தூங்கும் முன் குட் நைட் சொல்ல வந்த ஆகான்ஷாவை தன் அருகே அமர வைத்த பவித்ரா,
“அகி, நீ எனக்கு ஒரு ஹெல்ப் செய்யனும்... சலோமி சொன்னதை அவக் கிட்ட சொல்லனும்... செய்வீயா” என்றுக் கேட்டார்.
அவர்கள் இருவரும் அன்று மாலையில் அந்த சலோமியை தான் சந்தித்து விட்டு வந்தார்கள்...
ஏதோ குழந்தைப் பற்றி பேசினார்கள்...
ஆனால், யார் இந்த ‘அவள்’? அவளிடம் என்ன சொல்ல வேண்டும்?
கேள்விகளை கேட்க நினைத்தவள் பெரியவரின் கண்களில் தூக்கம் தெரியவும், காலையில் கேட்டுக் கொள்ளலாம் என முடிவு செய்தாள்...
“நீங்க தூங்குங்க ஆன்ட்டி, நான் சொல்றேன்...” என்றாள்.
“தேங்க்ஸ் அகி....!”
பெரிய மிஸ்ட்ரியாக இருக்கிறதே என்ற யோசனையுடன் தூங்க சென்ற ஆகான்ஷா காலையில் பவித்ராவை உயிர் பிரிந்த நிலையில் தான் சந்தித்தாள்...
பவித்ரா சொன்ன ‘அவள்’ யார்? என்ன சொல்ல சொன்னார்கள் என்பது ஆகான்ஷாவிற்கு தெரியாமலே போனது!
அத்தியாயம் 2
“அமர் லேட் ஆகுது சீக்கிரம் சீக்கிரம்...” சத்தமாக சொல்லியபடி கட்டி இருந்த வீட்டு சேலையை கழற்றி விட்டு, ஆபிஸுக்கு செல்ல வேறு சேலை எடுத்தவளின் கண்ணில் அவன் பட்டான்...
கன்னம் குழிய புன்னகைத்த படி, அவளை பார்த்துக் கொண்டிருந்தான்...
அவனின் காந்தப் பார்வை அவளை ஈர்த்தது...
மனசுக்குள் ஏதேதோ எண்ணங்கள்... மார்கழி மாத பனியாக மனசுக்குள் ஒரு ஜில்லிப்பு...!!!
முன்தினம் வெளி வந்திருந்த மேகசினில் வந்திருந்த அவனின் பேட்டிக்காக போடப் பட்டிருந்த படம் அது...
அந்த படத்தை எடுத்த புகைப்படக்காரருக்கு தங்க மெடல் கொடுக்கலாம்... அத்தனை தத்ருபமாக இருந்தது...
அவள் நின்றிருந்த கோலத்திற்கு, போட்டோவில் அவளை பார்த்து புன்னகைப்பவனை பார்க்கும் போதே அவளுள் ஏகாந்த நினைவுகள் ஊற்றெடுத்தது...
இல்லை இதெல்லாம் தவறு... அப்படி நினைக்கக் கூடாது...
காட்டாறு வெள்ளமாய் கரைப் புரண்ட மனதை கட்டுப்படுத்த முயன்றபடி மேகசினை மூடினாள்...
மூடும் முன் மீண்டும் ஒருமுறை அவனின் படத்தைப் பார்த்தாள்...
அவனின் உதடுகள் புன்னகைத்துக் கொண்டிருந்தது... ஆனால் அந்த கண்களில் தெரிந்த வலி + சோகம், அவளுக்குப் புரிந்தது...
“ஐ டூ மிஸ் யூ teddy bear!” என மெல்லியக் குரலில் சொல்லியவள், உடனேயே தவறு செய்து விட்டவளை போல குற்ற உணர்வுடன் அந்த மேகசினை கப்-போர்டை திறந்து