Online Books / Novels Tagged : Tamil - Chillzee KiMo

பெண் ஒன்று கண்டேன்...! - பத்மினி செல்வராஜ்

அன்பான வாசக தோழமைகளே!!!

அனைவருக்கும் வணக்கம் !. எனது புதிய கதையுடன் மீண்டும் உங்களை சந்திக்க வந்து விட்டேன்.

முதன்முறையாக காதலை குறைத்து நட்பை பற்றி எழுதிட வந்திருக்கிறேன். அதற்காக காதல் இல்லை என்றில்லை..காதல் இல்லாமல் மானிடமே இல்லையே..!

நட்பு- உலகில் அன்னையின் அன்புக்குப்பின் உன்னதமாகப் போற்றப்படுவது நல்லதொரு நண்பன்/நண்பி  காட்டும் தூய்மையான அன்புதான்.  காதலுக்கு இணையானது... அதையும் விடவே மேலானது.

நட்பு என்றாலே பொதுவாக பெண்களின் நட்புதான் கண் முன்னே நிற்கும். ஆனால் காலங்காலமாய் ஆண்களின் நட்புதான் பெரிதாக போற்றபட்டு வந்திருக்கின்றன.

நட்பு என்றதும் கண் முன்னே வருவது தமிழ் புராணங்களில் காட்டப்பட்ட துரியோதனன்-கர்ணன் நட்பு, கண்ணன்-குசேலன் நட்பு. அதோடு நிஜ வாழ்க்கையிலும் பெரிதாக போற்றப்பட்ட கார்ல் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் நட்பு, கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் நட்பு... இப்படி இன்னும் எத்தனையோ பேர்களை வரிசைபடுத்தலாம்.

இன்றைய தலைமுறையிலும், அன்றாடம் பழகும் சமுதாயத்திலும்  இவர்களைப் போன்ற நெருங்கிய நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படிபட்ட நட்பில்,  ஈருடல் ஓருயிராக பழகிய இருவரின் நட்பில் விரிசல் வந்தால்? அது எப்படி அவர்களை பாதிக்கும்? அந்த விரிசலில் சிக்கி கொண்ட  இரு பெண்களின் வாழ்க்கை  என்ன ஆனது?. ஒருமுறை விழுந்த விரிசல் மீண்டும் சரியாகுமா? சொல்ல வந்திருக்கிறேன் பெண் ஒன்று கண்டேன் பயணத்தின் மூலமாக.

இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான நட்பு+ காதல் கலந்த ஜாலியான கதைதான். தொடர்ந்து படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!  

Published in Books

மாப்பு வெச்ச ஆப்பு - முகில் தினகரன்

நகைச்சுவை நாவல்.

கிராமத்தில் நாடகம் போட்டுக் கொண்டிருந்த இளைஞர்களை சிட்டிக்கு அழைத்துச் சென்று, நஷ்டக் கணக்கு காட்டுவதற்காக படம் எடுக்கச் சொல்கிறார் ஒரு தயாரிப்பாளர். 

ஆனால், அந்த இளைஞர்கள் எடுத்த படம் வெற்றி பெற்று விட, அந்த தயாரிப்பாளரின் வருமானம் இன்னும் அதிகமாகிறது.

அதைக் கண்டு வேறொரு பெரிய நிறுவனம் அவர்களுக்கு படம் எடுக்க வாய்ப்புக் கொடுக்க, பெருத்த நஷ்டத்தை சந்திக்கிறது அந்தப் பெரிய நிறுவனம்.

 

Published in Books

கனவுப் பூக்கள்... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

எத்தனை பேர் எப்படிச் சொன்னாலும் அலுக்காத விஷயம் காதல். கனவுப்பூக்கள் என்ற இந்த நாவல் கூட காதலைத்தான் பேசுகிறது.

ஆனால் இது கண்மூடித்தனமான, சுயநலமான காதல் இல்லை. கடமைக்காவும், தாயன்புக்காகவும் காதலை விட்டுக்கொடுக்க முன் வரும் நாயகி அகிலா.

அனாதையான தனக்கு தாயன்பு கிடைக்க வேண்டும் என மகன்களால் கைவிடப்பட்ட வயதான பெண்மணிகளுக்காக இல்லம் நடத்தும் நாயகன் ஆனந்த். தனக்கென ஒரு குடும்பம், மனைவி, அழகான குழந்தை என வாழ ஆசைப்படும் அவன் கனவு.

இந்த இரு வித்தியாசமான இளைஞர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறது கனவுப்பூக்கள் நாவல்.

அகிலாவின் தாய் ராதாவுக்கு என்ன பிரச்சனை? அவள் ஏன் காதல் என்றாலே வெறுக்கிறாள்? பயப்படுகிறாள்? அகிலாவின் தந்தை ஏன் அவர்களை விட்டுப் போனார்?

இது போன்ற பல கேள்விகளுக்கு பதிலாக இருக்கிறது கனவுப்பூக்கள் நாவல். படித்து விட்டு உங்கள் கருத்தை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே!

   

Published in Books

ரிங்கா ரிங்கா ரோசஸ் - சுபஸ்ரீ முரளி

இரண்டு சிறுமிகள் தங்கள் உயிரை குடித்த  மனித அரக்கனை ஆவியாக உருவெடுத்து பழிவாங்கும் கதை.

Published in Books

நவரசம் - சசிரேகா

சசிரேகாவின் புதிய சிறுகதை. 

 

Published in Books