முன்னுரை
வாழ்க்கையை தன் விருப்பம் போல வாழ நினைக்கும் நாயகனுக்கு வாழ்க்கை என்றால் இப்படித்தான் வாழவேண்டும் என புரிய வைத்த நாயகிக்கும் இடையே மலர்ந்த காதல் கதைதான் இக்கதை
முன்னுரை
உறவின் பிரிவு என்பது எந்த வயதிலும் நிகழலாம். ஆனால் அந்த உறவை கடைசி வரையில் காப்பாற்ற போராடுவது அந்த போராட்டத்தில் பல இன்னலங்கள் வந்தாலும் முன்னேறிச் செல்வதுதான் இக்கதையின் கருவாகும்.
நாயகியின் காதலுக்காக நாயகன் நடத்தும் போராட்டத்தில் வெற்றி கிடைத்ததா இல்லையே என்பதையும் வருடம் தவறாமல் நாயகன் செய்யும் முயற்சியை விளக்கமாக எழுதியுள்ளேன் நன்றி
முன்னுரை
தனக்கென அன்பு செலுத்த யாரும் இல்லாத நிலையில் அன்பு காட்ட ஒருவர் இருக்கிறார் என தெரிந்தும் அவரை சென்றடையும் பாதை கரடுமுரடாக இருந்தாலும் துணிந்து சென்று பல சவால்களைக்கடந்து தனது அன்புக்குரியவரை கைபிடித்தால் உருவாகும் அன்பே காதலாகும் இதுவே இந்த கதையின் கருவாகும்.
முன்னுரை
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது போல் காதலும் பாசமும் அளவுக்கு மீறி அதிகமானால் விளைவுகள் என்னாகும் என்பதே இக்கதையின் கருவாகும்.
அக்கா மேல் கொண்ட பாசத்தால் தங்கைக்கும் காதலி மேல் கொண்ட காதலால் காதலனுக்கும் இடையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் நிகழும் நிகழ்வுகளின் தொகுப்பே இக்கதையாகும்.
வாசகர்களுக்கு வணக்கம்,
சில்சீக்கு நான் புதுமுகம் அல்ல.எனினும் சக வாசகர்களுக்கான என்னுடைய அறிமுகத்திற்காகவே இந்த முன்னோட்டம்.
2016 இல் சில்சியில் தொடங்கிய என்னுடைய எழுத்துப் பயணம் கடவுளின் அருளால் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. போட்டிக்கான எனது படைப்பான "நான் அவளில் பரிபூரணம்",என்னுடைய பதினெட்டாவது கதை. கொரானா,ஊரடங்கு என நிலைமையே தலைகீழாய் மாறிவிட்டிருக்கும் நிலையில் என்னால் இதை முடிக்க முடியுமா என்ற தயக்கம் அதிகமாகவே இருந்தது.
எனினும் இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ போட்டிகளில் பங்கு கொண்டு,இப்போது தாய் வீட்டின் நிகழ்ச்சியில் என்னுடைய பங்கு இல்லாமல் இருப்பதை மனம் ஏற்க மறுத்த ஒரே காரணத்தினால் கடைசி நிமிடத்தில் முடித்து அனுப்பியிருக்கிறேன்.
கதையைப் பற்றிக் கூற வேண்டும் எனில்,பொதுவாய் போட்டி என்றவுடன் சமூக நெறிக் கதைகளோ அல்லது எதாவது வித்தியாசனமான கதைக் களத்தையோ எடுத்து எழுதுவது தான் வழக்கம்.இருந்தும் இந்த முறை காதலை மையமாகக் கொண்டே எழுதியிருக்கிறேன்.
எப்போதுமே சமூகத்தின் மாற்றம் என்பது குடும்பத்தில் இருந்தும்,உறவுகளில் இருந்தும் மட்டுமே ஏற்பட முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அப்படியான ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதே இக்கதை.
இந்த வாய்ப்பினை அளித்த சில்சி குழுமத்திற்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரியங்களுடன்,
ஸ்ரீ.