Chillzee KiMo Books - நான் அவளில் பரிபூரணம் - ஸ்ரீ : Naan avalil paripooranam - Sri

நான் அவளில் பரிபூரணம் - ஸ்ரீ : Naan avalil paripooranam - Sri
 

TEN CONTEST 2019 - 20 - Entry # 22

Story Name - Naan avalil paripooranam

Author Name - Sri

Debut writer - No


நான் அவளில் பரிபூரணம் - ஸ்ரீ

வாசகர்களுக்கு வணக்கம்,

சில்சீக்கு நான் புதுமுகம் அல்ல.எனினும் சக வாசகர்களுக்கான என்னுடைய அறிமுகத்திற்காகவே இந்த முன்னோட்டம்.

2016 இல் சில்சியில் தொடங்கிய என்னுடைய எழுத்துப் பயணம் கடவுளின் அருளால் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. போட்டிக்கான எனது படைப்பான "நான் அவளில் பரிபூரணம்",என்னுடைய பதினெட்டாவது கதை. கொரானா,ஊரடங்கு என நிலைமையே தலைகீழாய் மாறிவிட்டிருக்கும் நிலையில் என்னால் இதை முடிக்க முடியுமா என்ற தயக்கம் அதிகமாகவே இருந்தது.

எனினும் இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ போட்டிகளில் பங்கு கொண்டு,இப்போது தாய் வீட்டின் நிகழ்ச்சியில் என்னுடைய பங்கு இல்லாமல் இருப்பதை மனம் ஏற்க மறுத்த ஒரே காரணத்தினால் கடைசி நிமிடத்தில் முடித்து அனுப்பியிருக்கிறேன்.

கதையைப் பற்றிக் கூற வேண்டும் எனில்,பொதுவாய் போட்டி என்றவுடன் சமூக நெறிக் கதைகளோ அல்லது எதாவது வித்தியாசனமான கதைக் களத்தையோ எடுத்து எழுதுவது தான் வழக்கம்.இருந்தும் இந்த முறை காதலை மையமாகக் கொண்டே எழுதியிருக்கிறேன்.

எப்போதுமே சமூகத்தின் மாற்றம் என்பது குடும்பத்தில் இருந்தும்,உறவுகளில் இருந்தும் மட்டுமே ஏற்பட முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அப்படியான ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதே இக்கதை.

இந்த வாய்ப்பினை அளித்த சில்சி குழுமத்திற்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரியங்களுடன்,
ஸ்ரீ.

 

 

நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.

அத்தியாயம்-1

எள்ளற்க, என்றும் எளியர் என்று! என் பெறினும்
கொள்ளற்க, கொள்ளார் கை மேற்பட! உள் சுடினும்
சீறற்க, சிற்றில் பிறந்தாரை! கூறற்க,
கூறல்லவற்றை விரைந்து!


எவரையும் எளியவர் என்று எண்ணி இகழ்ந்து விடாதே. மிகச் சிறந்த பொருளாக இருந்தாலும் தகுதியற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளாதே. செய்யக் கூடாதவற்றைச் செய்தாலும் ஏழை மக்களிடம் கோபம் கொள்ளாதே. சொல்லத் தகாத சொற்களைக் கோபத்திலும் கூறிவிடாதே.

“God’s own country”,என்றழைக்கப்படும் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தின் ஆலுவாவிலுள்ள அந்த அழகிய வீட்டின் முன் தோற்றத்தைப் பார்க்கும் யாரும் ஒரு நொடியேனும் அவரறியாமல் ரசிக்காமல் இருக்க மாட்டார்கள் எனுமளவிற்கான அழகு அதன் புறத்தோற்றத்தில்.

அந்தப் பகுதியின் மிகப் பெரும் வணிகக் குடும்பம்,A&M க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் பற்றித் தெரியாதவர்கள் எர்ணாகுளத்தில் இல்லை எனும் வகையில் மிகப்பெரும் குடும்பம்.

அந்தக் குடும்பத்தின் மூத்தத் தலைமுறையான அஜீஷ் அவர்கள் சிறிய அளவில் தொடங்கியதொரு வியாபரமே இன்று இத்தனை விழுதுகள் தாங்கிய மரமாய் உயர்ந்து நிற்கிறது.

ஏற்றுமதி இறக்குமதி,துணிகள் தயாரிக்கும் நிறுவனம்,தங்க வியாபாரம் என அத்தனையிலும் தன் தனித்தன்மையைப் பதித்திருந்தனர்.அஜீஷிற்கு நான்கு மகன்கள் அதில் மூவர் வெளிநாடுகளில் நிரந்தரமாய் தங்கிவிட அவரின் முதல் வாரிசான மோகன் தான் தந்தைக்கு உதவியாய் தொழிலைப் பார்த்துக் கொண்டார்.

அதனாலேயே யாருடைய ஆலோசனையும் இன்றி தன் நிறுவனத்தின் பெயரை A&M என்று மாற்றியிருந்தார் பெரியவர்.மற்றப் பிள்ளைகளும் நல்ல நிலைமையில் இருந்ததால் யாரும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

இவர்கள் இருவரையும் தொடர்ந்து தற்போது அந்தக் குடும்பப் பொறுப்பைச் சுமப்பவன் ப்ரஜீஷ்.மோகன் சௌமியா தம்பதியரின் புதல்வன்.35வயது என்று யாரும் கூறினால் ஒழியத் தெரியாத அளவிற்கான உடல்கட்டுடன் இருப்பவன்.தாத்தாவும் அப்பாவும் வளர்த்தத் தொழிலைத் தன் திறமைக் கொண்டு மேலும் பன்மடங்காய் வளர்த்தவன்.

வெளிநாட்டில் தன் மேற்படிப்பை முடித்தவன் குடும்பத் தொழிலைப் பார்த்துக் கொள்வதாய் கூறியபோது தாத்தாவிற்கும் தகப்பனிற்கும் அப்படியாய் ஒரு பெருமை.

அதை இன்னும் அதிகமாக்குவதாய் இருந்தது அவனின் அபார வளர்ச்சி.வியாபார வட்டத்தில் தன்னை மதிக்காதவர் கூட தன் பேரனைக் கண்டு சலாம் போடுவதைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போவார் அஜீஷ்.

மோகன் தம்பதியருக்கு ப்ரஜீஷைத் தொடர்ந்து இரட்டையர்களான பெண் பிள்ளைகள் சாருலேகா- சாருலதா.பிரஜீஷை விட மூன்று வயது சிறியவர்கள்.

அஜீஷ் முதுமையின் காரணமாய் தன் 77 வயதில் இறந்துவிட மோகனும் ப்ரஜீஷுமே இப்போது அத்தனையையும் கவனித்துக் கொள்கின்றனர்.தங்களுக்கு ஏற்ற இடமாய் எங்கெங்கோத் தேடி அவர்களைப் போன்றே இரட்டையர்களான சகோதரர்களுக்குத் திருமணம் செய்து வைத்தான் ப்ரஜீஷ்.

இப்படியானப் பட்டியல்கள் பெரிதாகிக் கொண்டேயிருக்க அவனது தனிப்பட்ட வாழ்வு என்பது ஒன்றுமில்லையென ஆகியிருந்தது.அவனது இளங்கலை கல்லூரி காலத்தில் சிறு பையனாய் மாநிறத்தில் இருந்தவன் நிச்சயமாய் பார்த்தவுடன் யாருடைய கவனத்தையும் ஈர்ப்பவனாய் இல்லை.

ஆனால் அப்போது அவனுக்குப் பிடித்த ஒருத்தி இருந்தாள்.அவனது வகுப்புத் தோழி.அவள் மீது தான் கொண்ட காதலைக் கூறியபோது அவனது தோற்றத்தை மட்டுமே காரணமாய் கொண்டு அவனை மறுத்திருந்தாள்.

சாதாரணமாய் எடுத்துக் கொண்டதாய் காட்டிக் கொண்டாலும் அது ப்ரஜீஷின் மனதில் விழுந்த மிகப் பெரும் அடியாகவே இருந்தது.சிறு வயதிலிருந்தே