TEN CONTEST 2019 - 20 - Entry # 23
Story Name - Vannam konda vennilave vaanam vittu vaaraayo
Author Name - Sasirekha
Debut writer - No
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ - சசிரேகா
முன்னுரை
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது போல் காதலும் பாசமும் அளவுக்கு மீறி அதிகமானால் விளைவுகள் என்னாகும் என்பதே இக்கதையின் கருவாகும்.
அக்கா மேல் கொண்ட பாசத்தால் தங்கைக்கும் காதலி மேல் கொண்ட காதலால் காதலனுக்கும் இடையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் நிகழும் நிகழ்வுகளின் தொகுப்பே இக்கதையாகும்.
சென்னை
”வெண்ணிலாவுக்கு கல்யாணமா ஒரு வார்த்தை கூட எனக்கு சொல்லனும்னு தோணலையா சித்தப்பா” என கவிதா மனம் கலங்கி தன் சித்தப்பா வெங்கடேசனிடம் டெலிபோனில் வருத்தமுடன் கேட்க அவரோ மறுமுனையில் இருந்தபடியே அமைதியாக பரிதாபமாகப் பேசினார்.
”நான் சொல்லக்கூடாதுன்னு இல்லை கவிதா, வெண்ணிலாதான் அக்காவை தொந்தரவு செய்ய வேணாம் அவளுக்கே போன மாசம்தான் கல்யாணம் ஆயிருக்கு அவள் சந்தோஷமா இருக்கட்டும்னு சொன்னா”
“ஏன் சித்தப்பா அவளுக்குத்தான் என்னை பிடிக்கலை வெறுப்பில அப்படி சொன்னாள்னா நீங்க பெரியவரு உங்களுக்குமா என்னை பிடிக்கலை அப்படி நான் என்ன தப்பு பண்ணேன்?”
“தப்புன்னு இல்லைம்மா என்ன இருந்தாலும் நீ அப்படி செஞ்சிருக்க கூடாது, ஏதோ நீ ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காகதான் லவ் மேரேஜ் செஞ்சிக்க நாங்க சம்மதிச்சோம் உன் கல்யாணத்தை பார்த்தபின்னாடி எனக்கு பயமே வந்துடுச்சி. உன் கல்யாணத்தால ஊருக்குள்ள சிலர் உன் அப்பாவோட முதுகுக்கு பின்னாடி கேலி பேசறது இன்னும் ஓயலை
எங்க உன்னை போலவே வெண்ணிலாவும் காதல் அது இதுன்னு போயிடுவாளோன்னு பயந்துதான் அவசரமா மதுரையை விட்டு கடலூருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கி வந்துட்டேன், வந்த இடத்தில நல்ல சம்பந்தம் கிடைச்சது, பெரிய குடும்பம், பேங்க் மேனேஜர் பையனுக்குத்தான் வெண்ணிலாவை பேசியாச்சி. சிம்ப்ளா கோயில்ல கல்யாணம் பண்ணி வைச்சிடலாம்னு சம்பந்தி கேட்டதால நானும் சரின்னுட்டேன் வர்ற வெள்ளிக்கிழமை கல்யாணம். கல்யாணத்துக்கு கூட நான் சொந்தக்காரங்களை கூப்பிடலைம்மா பேருக்கு நானும் உன் சித்தி வைதேகியும்தான், உன் அப்பாவை கூப்பிட்டோம் அவர் வரமாட்டேன்னு உறுதியா சொல்லிட்டாரு”
“ஏன் சித்தப்பா என்னாலதான் அப்பா வரமாட்டேன்னு சொன்னாரா” என அவள் குரல் தழுக்க தழுக்க பேச
“இதப்பாரு கவிதா முடிஞ்சி போனதை வைச்சி பேசறது தப்பு, இதுல யார் காரணம்னு சொல்ல எனக்கு விருப்பமில்லை. நீ உன் எதிர்காலத்தை நினைச்சி ஒரு முடிவு எடுத்த, அதே போல நான் என் பொண்ணோட எதிர்காலத்தை நினைச்சி ஒரு முடிவு எடுத்துட்டேன்.”
“கோயில்லதானே கல்யாணம் நான் ஒரு ஓரமா நின்னு பார்த்துட்டு போயிடறேனே”
”கவிதா சொன்னா கேளும்மா, வெண்ணிலாவுக்கு இன்னும் உன்மேல இருக்கற கோபம் போகலை. கவிதாக்கா, சொன்ன பேச்சை கேட்காம கல்யாணம் பண்ணிக்கிட்டா. அது அவளோட விருப்பமா இருந்தாலும் எனக்குப் பிடிக்கலைன்னு சொல்லிட்டா, நீ வர்றதால இன்னும் வெறுப்புதான் அதிகமாகும். முதல்ல அவளுக்கு கல்யாணம் ஆகட்டும், கொஞ்சம் நாள் போகட்டும் அப்புறம் அவளே உன்னைத் தேடிவருவா”
“அது எப்ப நடக்கும் சித்தப்பா, எனக்கு நம்பிக்கையில்லை அவள் மனசு வருத்தத்தில இருக்கு அவள் எவ்ளவோ சொல்லியும் கேட்காம நான் இந்த லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டேன். ஆனா சித்தப்பா என் புருஷன் மேல தப்பில்லை, அவர் நல்லவரு, ப்ரவீன் மேல எனக்கு முழு நம்பிக்கையிருக்கு, இந்த ஒரு மாசமும் என்னை உள்ளங்கையில வச்சி தாங்கறாரு சித்தப்பா”
“பெரியவங்க பார்த்து கல்யாணம் பண்ணா அது ஒரு திருப்தியான வாழ்க்கையா அமையும், என்னதான் உன்னை உள்ளங்கையில வச்சித் தாங்கினாலும் என்னிக்காவது ஒரு நாள் நீ கீழே விழுந்தாலோ இல்லை உனக்கு ஏதாவது தேவைன்னாலோ தாங்கி பிடிக்கவோ உன் கஷ்டத்தைத் துடைக்கவோ சொந்தங்கள் வேணும்மா, அதை நீ புரிஞ்சிக்கல இப்ப புரிஞ்சாலும் அதனால எந்த லாபமும் இல்லை.
அண்ணன் ஏதோ உன் மேல இருக்கற பாசத்திலேயும் வெண்ணிலா சொன்னதாலயும்தான் உன் கல்யாணத்தை சிறப்பா செஞ்சாரு. ஆனாலும் அந்த கல்யாணத்தில வெண்ணிலாவுக்கு விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சதும் அண்ணா மனசு உடைஞ்சி போயிட்டாரு வெண்ணிலாவும் உண்மையை சொல்லலை நீயும் சொல்லலை நீயும் அவளும் பிரிஞ்சிருக்கறதுக்கு காரணம் தான்தான்னு அண்ணன் நினைக்கிறாரு. உண்மையை சொல்லும்மா வெண்ணிலாவுக்கு என்னாச்சி அவள் ஏன் உன்னை பத்திப் பேசினாலே அமைதியாயிடறா ஒதுங்கிப் போறா சென்னையில அப்படி என்ன நடந்துச்சி?” என கேட்க கவிதா
”வேணாம் சித்தப்பா முடிஞ்சி போன கதையை கிளறி பார்க்கறதால நல்லது நடக்காது. சித்தப்பா, ப்ளீஸ் ஒரு முறை ஒரே ஒரு முறை கல்யாணத்தில நான் கலந்துக்கறேனே, சும்மா ஓரமா நின்னு பார்த்துட்டுப் போயிடறேன் யாருக்கும் சந்தேகம் வராம வெண்ணிலாவுக்கும் தெரியாம பார்த்துட்டு போயிடறேன் எந்த கோயில் எப்ப முகூர்த்தம்ன்னு மட்டும் சொல்லுங்க சித்தப்பா“
”சொன்னா கேட்க மாட்ட, உன் பிடிவாதம் இருக்கே இதனாலதான் உன் குடும்பத்தையும்