Chillzee KiMo Books - நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே - சசிரேகா : Naan vazhum vazhve unakkagathaane - Sasirekha

நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே - சசிரேகா : Naan vazhum vazhve unakkagathaane - Sasirekha

நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே - சசிரேகா : Naan vazhum vazhve unakkagathaane - Sasirekha
 

TEN CONTEST 2019 - 20 - Entry # 26

Story Name - Naan vazhum vazhve unakkagathaane

Author Name - Sasirekha

Debut writer - No


நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே - சசிரேகா

முன்னுரை

வாழ்க்கையை தன் விருப்பம் போல வாழ நினைக்கும் நாயகனுக்கு வாழ்க்கை என்றால் இப்படித்தான் வாழவேண்டும் என புரிய வைத்த நாயகிக்கும் இடையே மலர்ந்த காதல் கதைதான் இக்கதை

 

இரவு மணி 12.30

”மாமா வேண்டாத வேலை இது, எனக்கு இதுல விருப்பம் இல்லை மாமா என்னை விட்டுடுங்க வண்டியை திருப்புங்க ஊருக்கு போலாம்” என்றான் தீரேந்திரன். அதற்கு

”நான் முடிவு செஞ்சது செஞ்சதுதான் என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை தீரா” என்றார் தீரேந்திரனின் மாமா அன்பு.

கடலூரிலிருந்து சென்னை நோக்கி செல்லும் ஹைவே ரோடில் வேகமாக சென்றுக் கொண்டிருந்தது அவனது சைலோ கார். வழியில் ஒரு ஓட்டல் வரவே வண்டியிலிருந்து இறங்கிய தீரனும் அன்பு மாமாவும்  ஓட்டலுக்குள் நுழைந்து காலியான ஒரு டேபிள் முன் இருந்த சேர்களில் அமர்ந்துக் கொண்டார்கள்.

”தீரா என்ன சாப்பிடற”

“என் விருப்பம் இல்லாம நீங்க இதையெல்லாம் செய்றீங்க இப்ப எதுக்காக சாப்பிடறதுக்கு மட்டும் என் விருப்பத்தை கேட்கறீங்க மாமா” என்றான் கடுப்பாக அவனது கோபத்தை ஏற்கனவே பார்த்தவர்தான் என்பதால் அலட்சியமாக அவனை பார்த்து இளக்காரமாக சிரித்துவிட்டு பேரரிடம் சப்பாத்தி ஆர்டர் தந்தார்.

அந்த ஓட்டலில் ஓரத்தில் ப்ளாஸ்மா டீவி ஓடிக்கொண்டிருந்தது. அதில் அழகான காதல் பாடல் காட்சி ஓடிக்கொண்டிருக்க அன்பு மாமா உடனே தீரனிடம்

”தீரா அங்கப்பாரு டீவியை பாரு” என சொல்ல அவனோ டீவியை பார்த்துவிட்டு அடுத்த நொடி முகத்தை திருப்பியவன் கோபமாக அன்பு மாமாவை பார்க்க அவரோ சிரித்தார்

”உனக்கும் இந்த மாதிரியான லவ் ப்லிமுக்கும் செட்டாகாதுல்ல”

“சரியா சொன்னீங்க மாமா எனக்கும் லவ்வுக்கும் என்னிக்கும் செட்டாகாது” என அவரைப் பார்த்து சொல்ல அவரோ

”என்னை தானே ஜாடையா சொல்ற எனக்கு புரிஞ்சிடுச்சி”

“ஜாடையா இல்லை மாமா நேரடியா உங்களைத்தான் சொல்றேன். எனக்கும் உங்களுக்கும் என்னிக்குமே செட்டாகாது. போற காரியம் உருப்படாது நான் கிளம்பறேன் நீங்க எப்படியாவது வந்து சேருங்க” என சொல்ல உடனே டீவியில் ப்ரோக்ராம் மாற்றப்பட்டு நியூஸ் ஓடியது அதில் தீரனை போலீசார் கைது செய்வது போல் காட்சிகள் ஓடியது. அதைப்பார்த்த தீரன் அமைதியாக அமர்ந்தான்

”பாருடா உன் நிலைமையை இது தேவையா” என அன்பு மாமா கேட்க

“திடீர்ன்னு போலீஸ் வந்துட்டாங்க மாமா இல்லைன்னா அவங்களால என்னை பிடிச்சிருக்கவே முடியாது” என சொல்லும் போதே நியூஸ் கேட்பதற்காக வால்யூம் அதிகப்படுத்தினார்கள் யாரோ.

”கடலூரைச் சேர்ந்த தீரேந்திரன் எனும் வெள்ளி நகைக்கடை  உரிமையாளர் தங்கம் கடத்தலில் சந்தேகப்படும்படியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடலூரிலிருந்து பல கோடி மதிப்பிலான தங்கம் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது போன்ற தங்கம் கடத்தலை யார் செய்கிறார்கள், எப்படி ஏற்றுமதி செய்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருந்த நேரத்தில் அந்த கடத்திலில் ஒருவர் என சந்தேகத்தின் அடிப்படையில் தீரேந்திரனை நேற்று இரவு சுமார் 7 மணியளவில் அவருடைய வீட்டில் இருந்து கைது செய்தனர்.

தீரேந்திரனை அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் அழைத்துச் சென்று விசாரித்த போது பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது. அந்த விசாரனையே 2 மணி நேரம் மேற்கொண்டும் தீரேந்திரன் மீது ஏற்பட்ட சந்தேகம் பொய்யானது என வெட்டவெளிச்சமானது. அவர் மீது எந்த ஆதாரமும் இல்லாத காரணத்தினால் போலீசார் தீரேந்திரனை நிரபராதி என முடிவு செய்து இரவு 11 மணிக்கு அவரை விடுவித்தது.

உண்மையில் கடத்தல்காரர்களுக்கும் தீரேந்திரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை பொய்யான தகவலால் போலீசாரின் திசையை திருப்பி இரவு 11.10க்கு தங்கம் கடத்தப்பட்டதாக நம்பகமான தகவல்கள் வந்துக் கொண்டிருந்தது. தகவலின் அடிப்படையில் போலீசாரும் கடுமையாக தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள். தங்கக் கடத்தலுக்கு காரணமானவர்களை ஒரு மாதத்திற்குள் பிடித்துவிடுவதாக கடலூர் டிஜிபி அன்பு அவர்கள் செய்தியாளரின் சந்திப்பில் உறுதிபடுத்தியுள்ளார்.”

என சொல்லியதும் அடுத்த செய்திகள் வரவே தீரேந்திரன் சிரித்தபடியே அன்பு மாமாவை பார்த்தான்.

”பார்த்தீங்களா மாமா என்னாச்சின்னு”

“அதான் எனக்கும் ஆச்சர்யமா இருக்கு கடத்தல் பண்ணவனே நீதான். நீ செஞ்சதை பார்த்தவனே நான்தான் உன் மேல புகார் கொடுக்க வைச்சி அரஸ்ட் பண்ண வைச்சதும் நான்தான் அப்புறம் எப்படி விசாரணையில தப்பிச்ச”

”விசாரணை நடந்தப்ப விசாரிச்சது நீங்களா இருந்திருந்தா நான் மாட்டியிருப்பேன் மாமா தங்கத்து மேல யாருக்குதான் ஆசையில்லை உங்களுக்கு தங்கமே பிடிக்காது