முன்னுரை:
Hi Friends,
அனைவருக்கும் வணக்கம்....
எழுத்துலகில் எனது முதல் தொடர்கதையான “என் மடியில் பூத்த மலரே” க்கு ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!
நீங்கள் அளித்த ஆதரவு+ஊக்கத்தால் எனது அடுத்த கதையான “காதோடுதான் நான் பாடுவேன்...” உடன் உங்களை மீண்டும் சந்திக்க நானும் மை பெஸ்ட் பிரெண்ட் வேல்ஸ் ம் வந்திருக்கிறோம்...
கதையை பற்றி ?
தன் பக்தையின் குறையை தீர்க்க நம்ம வேல்ஸ் ஒரு திட்டம் போட்டு கட்டம் போட்டு விளையாடப் போகிறான். அவனை எதிர்த்து ஒரு போட்டியாளரும் களம் இறங்க, அந்த போட்டியாளரை வென்று அந்த சிங்காரவேலன் தன் ஆட்டத்தில் வெற்றி பெறுவானா? அந்த வேலனையே எதிர்த்து நிற்கும் அந்த போட்டியாளர் யார்? என தெரிந்து கொள்ள இந்த கதையை படியுங்கள்..
இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான காதல் கதை.. Happy Reading!!
அனைவருக்கும் வணக்கம்.
முத்தான எனது பத்தாவது கதையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கு இது கனவு போலத் தெரிகிறது. இத்தனை கதைகளை நானா எழுதினேன்? ஒரு சில அத்தியாயங்களோடு எழுதுவதற்கு சோம்பேறிப்பட்டுக் கொண்டிருந்த நான் இத்தனை கதைகளை நிறைவு செய்திருந்தால் அப்படி ஆச்சர்யமாகத்தான் இருக்கும்.
வழக்கம் போல் சொல்வதைத்தான் இப்போதும் சொல்கிறேன். இதற்கு எல்லாம் நீங்களும், சில்சீயும்தான் காரணம்.
எப்போதும் போல் இந்த மகாராணிக்கும் உங்கள் ஆதரவை கொடுத்து எனக்கு ஊக்கம் தாருங்கள்.
என்றும் அன்புடன்
ராசு