சுஷ்ருதா - சித்ரா கைலாஷ்
ஹீரோ ஒரு டாக்டர். ஹீரோயின் அவரை தேடி வரும் நோயாளி.
இந்த ஒரு ஸ்பெஷல் நோயாளியை சமாளிக்கவே நம் டாக்டர் ஹீரோவிற்கு பொறுமை அதிகமாக தேவைப் படும்
அத்தியாயம் 1
குனிந்து தன் ஷூ லேஸ் கட்டும் அந்த நேரத்தில் ,இனி தன்னை வெளியே அழைத்து போவான் என்ற குஷியில் நின்ற இடத்திலேயே ஒரு சின்ன ஸ்டெப் டான்ஸ் ஆடியது ' மின்டி' என்ற பெயர் கொண்ட டாபர்மன் வகையை சேர்ந்த நாய் .
நிமிர்ந்து வாஞ்சையுடன் அதன் தலையை தடவிவிட்டு அதன் கழுத்தில் ,கயிறை மாட்டினான் சசிகுமார் ,வெறும் சசிகுமார் இல்லை ..'.டாக்டர் சசிகுமார் ஜெனரல் பிசிசியன் ',
அவனது பிஸியான நாளின் தொடக்கத்தில் ,அவன் செல்லும் இந்த நாயுடனான நடைப்பயிற்சி ,அவன் மிக விரும்பி செய்யும் ஒரு செயல் .
முழு நாளுக்குமான எனெர்ஜியை அங்கேதான் பெறுவான் .
பிரிஸ்க்காக அவன் வீதியில் நாயுடன் நடக்கும் அந்த இடைவெளியில் அவனை பற்றிய ஒரு சின்ன இன்ட்ரோ ...
அவனது குடும்பத்தில் ,அவன் மூன்றாவது தலைமுறை மருத்துவன் ஆவான் .
தாத்தா சுந்தரம் ,இப்போது உயிருடன் இல்லை என்றபோதும் அவர் தொடங்கிய ' சுஷ்ருதா ' இன்றும் இருக்கிறது .
சிறிய அளவில் தாத்தா ஆரம்பித்த மருத்துவமனை ,அப்போதிருந்த நான்கு படுக்கை ,ஒரு சின்ன கன்சல்டிங் ரூம் என்ற நிலையில் இருந்து மிக பெரிதாய் வளர்ந்துவிட்டது .
தாத்தா காலத்தில் ,வீட்டிலும் சென்று மருத்துவர் நோயாளியை கவனிக்கும் வழக்கம் இருந்தது ,இருந்தும் தன் நேரடி கண்காணிப்பில் ,மருத்துவ வசதியுடன் வைத்து பார்க்கவேண்டிய சூழ்நிலையில் உள்ள நோயாளிகளை கவனிக்க என்று தொடங்கியது தான் இந்த மருத்துவமனை .
வீட்டுக்கே சென்று பார்ப்பது ஒருபக்கம் தொடர ,இதையும் ஒரு பக்கம் ஆரம்பித்து தாத்தா நடத்த ,
தொடர்ந்து அவர் பாதையில் ,மருத்துவம் பயின்று வந்த ,அப்பா மாணிக்கம் அதை மேலும் தேவைக்கேற்ப விரிவு படுத்த
இன்று ஒரு ஐந்து மாடி கட்டிடத்தில் ,இருபத்திநாலுமணி நேரமும் இயங்கும் ,ஒரு மல்டி ஸ்பெசியாலிட்டி மருத்துவமனையாக உருவாகி ,கம்பீரமாக மக்கள் பணி ஆற்றி நிற்கிறது .
ஐந்து மாடி கட்டிடத்தில் ,தரை தளத்தில் வரிசையாக கன்சல்டிங் அறைகள் இருந்தன ,அவற்றில் மணிக்கொரு முறை ,ஒருவர் என்ற கணக்கில் விசிட்டிங் மருத்துவர்கள் வந்து அங்கே சேவை செய்வதை தவிர ,சசி குடும்பமும் அங்கேயே இருந்து மருத்துவம் பார்த்தது .
இரண்டாவது மாடியில் ,மகப்பேறு பிரிவு ,அதற்கான படுக்கை வசதி ,மற்றும் டெலிவரி ரூம் ,ஸ்கேன் ரூம் ,என்று தேவையானது இருக்க
மூன்றாவது தளத்தில் ஆபரேஷன் தியேட்டர் இருந்தது ,
மற்றும் பிசியோ ரூம் ,ஐ சி யு வார்டு என்று ஒரு மருத்துவமனைக்கு தேவையான அனைத்தும் இருந்தது .
அங்கே வேலை செய்யும் வார்டு பாய் ,நர்ஸ் ,ஆயா போன்றவர்களுக்கு வழக்கமான நீல ,மற்றும் வெந்நிற உடை ,அவர்கள் லோகோவுடன் வழங்கப்பட்டருந்தது .
எல்லா மருத்துவமனை போன்றே ,மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது .
காயத்துடனும் ,கட்டுகளுடனும் ,வலியுடனும் ,கவலையுடன் என்று வகை வகையான மனிதர்கள் ,ஏதோ கண்ணுக்கு தெரியாத சக்தியின் பேரில் உள்ள நம்பிக்கையுடன் ,அதை செயலில் காட்டி தங்களை காப்பாற்றும் மருத்துவரின் நேரடி கண்காணிப்பிற்கு என்று தேடி வந்த மக்கள் கூட்டம்
அவர்களை முழு அக்கறையுடன் ,படித்த படிப்பின் துணையுடன் கவனிக்கும் மருத்துவர்கள் ,அவர்களுக்கு உதவியாக செவிலியர்கள் ,மற்றும் உதவி மருத்துவர்கள் .
அதில் ஒருவராக தாத்தா ,தந்தை வழியில் ,இவனும் ஜெனரல் மெடிசின் எடுத்து படித்து ,அதில் எம் டி முடித்து இந்த இருபத்து எட்டு வயதில் ,மிக திறமையான ,மற்றும் கனிவான மருத்துவன் என்ற பெயருடன் பணியாற்ற ,அவனது நாள் இப்படித்தான் செல்ல நாயுடன் தொடங்குகிறது .
அவனுடன் கூட பிறந்த அக்கா பிருந்தா ,ஒரு மகப்பேறு மருத்துவராக இதே மருத்துவமனையில் பணியாற்ற ,அவள் கணவர் ப்ரித்திவி ஒரு நியூரோ சர்ஜென் ஆவார் .
அவர்களுக்கு கல்யாணம் ஆகி நான்கு வயதில் சூர்யா என்று {வருங்கால மருத்துவன் } மகன் இருக்க ,
இவர்கள் அனைவரும் இருப்பது ஒரே இடத்தில் .