RaSu

RaSu

கண்ணுக்குள் நீயடி - ராசு 

அனைவருக்கும் வணக்கம்.

காதலே கூடாது என்ற கட்டுக்கோப்புடன் வளரும் நாயகன் ராஜ்பரத் விதிவசத்தால் காதல் வயப்படுகிறான். ஆனால் அவன் காதல் மறுக்கப்படுகிறது.

பெற்றோரின் நிம்மதிக்காக திருமணம் செய்து கொள்ள, அவன் விருப்பமின்மை தெரிந்து திருமணத்தன்றே மணப்பெண் அவனை விட்டு விலகுகிறாள்.

அதன் பிறகு என்ன நடந்தது? மனைவியுடன் சேர்ந்தானா? காதலியைக் கைப்பிடித்தானா? இல்லை வேறொரு வாழ்க்கை அமைந்ததா? தெரிந்து கொள்ள கதையைத் தொடர்ந்து வாசியுங்கள்.

என்றென்றும் அன்புடன்

ராசு


TEN CONTEST 2019 - 20 - Entry # 17

Story Name - Un nesam en suvasam

Author Name - RaSu

Debut writer - No


உன் நேசம் என் சுவாசம் - ராசு

திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கில நாவல் போட்டிக்காக ராசு பகிர்ந்திருக்கும் நாவல்.

தொலைந்து போனது என் இதயமடி - ராசு

கதையைப் பற்றி கொஞ்சம் உங்களுடன்

அமுதநிலா. தன் குடும்பத்தின் நலனைப் பெரிதாக எண்ணுபவள். உடன் பிறந்தோரின் சுயநலம் புரியாமல், தன்னைப் பற்றி யோசிக்காமல் அவர்களுக்காக ஓடாய் தேயும் அன்பு தேவதை.

இளங்கனியன்.  தொழில் வட்டாரத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் இளம் தொழிலதிபர்,  மகன் மேல் உயிரையே வைத்திருக்கும் அன்புத் தந்தை.

மகனிற்கு கனியமுதன் என்று பெயரிட்டு அமுதா அமுதா என்று அன்புடன் அழைக்கும் அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் கண்ணம்மா.

பிடிக்காத திருமணப் பந்தத்தில் தள்ளப்பட்ட கண்ணம்மாவை மனதார நேசிக்கும் பிரபு.

இவர்களைச் சுற்றி நடப்பதுதான் கதை.

இவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை  "தொலைந்து போனதுஎன் இதயமடி" படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

என்றென்றும் அன்புடன்

ராசு

ராணி... மகாராணி... - ராசு

அனைவருக்கும் வணக்கம்.

முத்தான எனது பத்தாவது கதையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கு இது கனவு போலத் தெரிகிறது. இத்தனை கதைகளை நானா எழுதினேன்? ஒரு சில அத்தியாயங்களோடு எழுதுவதற்கு சோம்பேறிப்பட்டுக் கொண்டிருந்த நான் இத்தனை கதைகளை நிறைவு செய்திருந்தால் அப்படி ஆச்சர்யமாகத்தான் இருக்கும்.

வழக்கம் போல் சொல்வதைத்தான் இப்போதும் சொல்கிறேன். இதற்கு எல்லாம் நீங்களும், சில்சீயும்தான் காரணம்.

எப்போதும் போல் இந்த மகாராணிக்கும் உங்கள் ஆதரவை கொடுத்து எனக்கு ஊக்கம் தாருங்கள்.

என்றும் அன்புடன்

ராசு

என்னை ஏதோ செய்துவிட்டாய் - ராசு

நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்!!!

இனிய காதல் கதை.

Page 1 of 3