Bindu Vinod

Bindu Vinod

Social Profiles

Facebook Instagram Twitter Messenger (by Facebook) Pinterest

எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - பிந்து வினோத்

Second edition.

வணக்கம் நட்பூஸ்,

இன்னொரு கதையுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

இந்தக் கதையின் ஹீரோ ஹீரோயின் உங்களுக்கு பரிச்சயமானவர்கள் தான் - நான்ட்ஸ் & எஸ்.கே. ஹீரோ ஹீரோயின் பெயர் கேட்ட உடனேயே கதையில் என்ன எதிர்பார்க்கலாம் என்று உங்களுக்கே புரிந்திருக்கும் ;-)

என்னுடைய மற்ற கதைகள் போல இந்தக் கதைக்கும் உங்கள் ஆதரவு தொடரும் என்று நம்புகிறேன்! நன்றி :-)

   

கதை சுருக்கம்:

நந்தினி - தன் குடும்ப சூழ்நிலைகளால் தன்னை சுற்றி ஒரு தனிமை வட்டம் அமைத்துக் கொண்டு, வேலையில் தன்னை ஆழ்த்திக் கொண்டிருப்பவள்!

அவளின் வாழ்வில் இனிய சூறாவளியாய் நுழைந்து, அவளின் மனதைக் கொள்ளைக் கொள்கிறான் எஸ்.கே எனும் சதீஷ் குமார்!

நந்தினி தன் காதலை மனதினுள் வளர்த்துக் கொண்டே செல்ல, அந்த காதலின் பிரதிபலிப்பு சதீஷிடமும் இருக்குமா அல்லது அது வெறும் நட்பு மட்டும் தானா??

சதீஷின் வாழ்வில் எட்டிப் பார்க்கும் மீரா யார்? அவளுக்கும் சதீஷிற்கும் நடுவே இருக்கும் உறவு என்ன?

நந்தினியின் காதல் வெற்றி பெற்றதா???

- பிந்து வினோத்

   

கம்பன் ஏமாந்தான்... - பிந்து வினோத்

பாரதி - நம் கதையின் கதாநாயகி! மற்றப் பெண்களிடம் இருந்து கொஞ்சமே கொஞ்சம் மாறுப்பட்டு இருப்பவள்.

இயல்பாக சென்றுக் கொண்டிருக்கும் அவளின் வாழ்வில், ஒரு 'விபத்தின்' மூலம் உள்ளே நுழைகிறான் நம் கதாநாயகன் விவேக்.

விவேக் பாரதியின் மீது காதல் வசப்பட, அதை ஏற்க மறுக்கிறாள் பாரதி! 

விவேக்கின் உண்மை அன்பை புரிந்துக் கொண்டு பாரதி அவனின் காதலை ஏற்றுக் கொள்வாளா? 

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

பூ ஒன்றுக்  கண்டேன்! - பிந்து வினோத்

Another edition available.

அமெரிக்காவில் இருந்து விடுப்பில் இந்தியா வரும் சதீஷ் குமார்  (எ) எஸ்.கே நந்தினி எனும் ஆசிரியையை சந்திக்கிறான். அவர்களின் முதல் சந்திப்பு நினைவு வைத்துக் கொள்ள முடியாத விதத்தில் டிஷூம் - டிஷூம் உடன் தொடங்குகிறது.

இது தெரியாமல் பெரியவர்கள் எஸ்.கே - நந்தினிக்கு திருமணப் பேச்சு தொடங்க, நந்தினி எஸ்.கே இருவருமே திருமணத்தை நிறுத்த முடிவு செய்கிறார்கள்.

அதில் வெற்றிப் பெற்றார்களா? அல்லது மோதல் காதலில் வந்து முடிந்ததா??