Chillzee KiMo Books - எனக்கு பிடித்த பாடல்! - பிந்து வினோத் : Enakku piditha paadal! - Bindu Vinod

எனக்கு பிடித்த பாடல்! - பிந்து வினோத் : Enakku piditha paadal! - Bindu Vinod
 

எனக்கு பிடித்த பாடல்! - பிந்து வினோத்

இது ஒரு ஸ்வீட் குட்டிக் கதை :-)

 

 

எனக்கு பிடித்த பாடல்! – பிந்து வினோத்

  

னக்கு இந்த கல்யாணம் வேண்டாம், எனக்கு பிடிக்கலை...” எத்தனையாவது முறையாக சொல்கிறேன் என்று எனக்கு எண்ணிக்கையே மறந்து போயிருந்தது.

  

“இங்கே பார் பவி, நீ சரின்னு சொன்ன பிறகு தானே இந்த கல்யாணத்திற்கு அப்பா ஒத்துக்கிட்டார். இப்போ என்ன புதுசா?”

  

அம்மாவின் பேச்சில் இப்போது கோபம் எட்டி பார்த்திருந்தது.

  

“அப்போ சரின்னு தோணிச்சு, இப்போ சரியா வரும்னு தோணலை.”

  

அம்மா எதுவும் சொல்லாமல் முறைத்து பார்த்து விட்டு, என்ன நினைத்தாரோ, என் அருகில் வந்து அமர்ந்து கொண்டு, கோபம் இல்லாமல் அமைதியாக பேசினார்கள்.

  

“என்ன விஷயம்? என்ன ஆச்சு? இன்னும் ஒரு வாரத்தில கல்யாணம், இப்போ இப்படி சொன்னால் எப்படி?”

  

“ப்ச்...”

  

“இதோ பாரு பவி, நீ சொன்னால் தானே எனக்கு புரியும், நான் அப்பாவிடம் சும்மா உனக்கு கல்யாணம் பிடிக்கலைன்னு சொல்ல முடியுமா? இரண்டு பேரும் நல்லா தானே பேசிட்டு இருந்தீங்க? ஏதாவது சண்டையா?”

  

இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. சொன்னால் அம்மாவிற்கு புரியுமா என்றும் தெரியவில்லை.

  

னக்கும் விஜய்க்கும் பெரியவர்கள் பார்த்து எங்கள் விருப்பத்தை தெரிந்துக் கொண்டு நிச்சயித்த திருமணம் இன்னும் ஒரு வாரத்தில் நடக்க இருந்தது. எங்கள் நிச்சயதார்த்தம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று மாதம் ஆகி இருந்தது. படிப்பு, குடும்பம் என அனைத்து விதத்திலும் எங்களுக்குள் நல்ல பொருத்தம் இருந்தது. ஆனால் மற்றபடி எங்களுக்குள் பல வேறுபாடுகளும் இருந்தது. எனக்கு புத்தகங்கள் ரொம்ப பிடிக்கும். கதைகள் என்று மட்டும் இல்லை பொதுவான எல்லா துறைகளிலும் படிக்கும் ஆர்வம் இருந்தது. அரசியல் தொடங்கி ரமணிச்சந்திரன் கதைகள் வரை ஒன்று விடாமல் படிப்பேன். விஜய் எனக்கு நேரெதிர். அவருக்கு அவருடைய வேலை சம்மந்தமான புத்தகங்கள் தவிர வேறு எதிலும் ஆர்வம் இல்லை.

  

அதே போல் எனக்கு கவிதைகள் படிக்கவும், பாடல்கள் கேட்கவும் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு பாடலிலும் வரிகளை தெரிந்துக் கொண்ட பின்பு தான் அதை எனக்கு பிடித்த பட்டியலில் சேர்ப்பதா இல்லையா என்று நான் முடிவு எடுப்பதே. என் வருங்கால கணவருக்கும் இது போன்ற ரசனைகள் இருக்க வேண்டும் என்று மனதில் ஆசை இருந்தது. ஆனால் விஜய்க்கு இதில் எல்லாம் ஆர்வமில்லை. நான் எனக்கு பிடித்த பாடல்கள், கவிதைகள் என சொல்வதை பல மணி நேரம் பொறுமையாக கேட்பார். ஆனால் அவரிடம் இருந்து அதே போன்று எதையும் எதிர்பார்க்க முடியாது. அவருக்கு தெரிந்தது எல்லாம் அவர் பணி புரியும் வங்கி துறை சம்மந்தப் பட்ட, நிதி தொடர்புடைய விஷயங்கள் தான்.

  

சரி இது எல்லாம் பரவாயில்லை, போகட்டும் என்று நினைக்கலாம்... அவர் எனக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. திருமணத்திற்க்காக சேலை எடுக்க சென்ற வாரம் இரண்டு குடும்பங்களும் சேர்ந்து அந்த பிரசித்தி பெற்ற கடைக்கு சென்றிருந்தோம். எனக்கு பிடித்த சிவப்பு நிற சாயலில் சேலை தேர்வு செய்ய வேண்டும் என்று முன்பே அவரிடம் சொல்லி வைத்திருந்தேன். முதலில் என் விருப்பம் போல் ஒரு மெல்லிய சிவப்பு சேலையை தான் அவர் எடுத்தார், ஆனால் அதற்குள் அவருடைய அக்கா ஒரு அழகிய வாடாமல்லி நிற சேலை எடுக்கவும், அனைவருக்கும் அது பிடித்துப் போனது. எனக்கே கூட அதுவும் பிடித்து தான் இருந்தது ஆனால் அது என்ன எனக்கு தேர்வு செய்வதில் எனக்கு பிடித்த நிறத்தை எடுக்காமல் இருப்பது என்று எனக்குள் ஒரு கேள்வியும் எழுந்தது.

  

அந்த சேலை எனக்கு பிடிக்கவில்லை என்பதை அவரிடம் தெளிவாக கண்