Online Books / Novels Tagged : Family - Chillzee KiMo


TEN CONTEST 2019 - 20 - Entry # 03

Story Name - Ragasiya snegithane

Author Name - Padmini Selvaraj

Debut writer - No


ரகசிய சிநேகிதனே!!! - பத்மினி செல்வராஜ்

முன்னுரை

கிராமத்தைச் சேர்ந்த வெகுளியான பேதைப் பெண் நம் கதையின் நாயகி.. தன் கல்லூரி படிப்பை முடித்து வாழ்வின் அடுத்த நிலையான திருமணத்திற்கு காத்து நிற்கும் பருவ மங்கையவள்..

எல்லா பெண்களையும் போல தன்  திருமண வாழ்க்கையை பற்றி பலவிதமான கனவுகளும் கற்பனைகளும் சுமந்து நிற்பவள்..அவள் ஊர் எல்லையை கூட  தாண்டியிராதவள் சந்தர்ப்ப சூழ்நிலையால், திருமணம் முடித்து நகரத்துக்கு தன் கணவனுடன் குடியேறுகிறாள்..

கூடவே இன்றைய நவீன பொழுதுபோக்கு ஊடகங்களுக்கும் பழக்கமாகிறாள்.. அதனால் அவள் வாழ்க்கை படகு பெரும் சுழலில் சிக்கி  தடம் மாறுகிறது..

அவள் கனவு கண்டு கொண்டிருந்த அவளுடைய கற்பனை,  கனவு வாழ்க்கை நிறைவேறியதா??  தடுமாறிய அந்த பேதைப் பெண்ணின் வாழ்வு மீண்டும் நேரானதா?  இல்லை அந்த சுழலில் சிக்கி அழிந்து போனாளா? என்று  தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்..

என்னுடைய இந்த கதையும் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்..நன்றி !!! Happy Reading!!!

Published in Books

அழகான ராட்சசியே!!! - பத்மினி செல்வராஜ்

Summary:
நாயகன் மகிழன் IT துறையில் இருப்பவன்... நாயகியும் அதே துறையில் இருப்பவள்.. ஆனால் எதிர் எதிரான பிரிவு..நாயகன் மகிழன் டெவலப்மென்ட்(Development) லும் நம் நாயகி டெஸ்டிங் (Testing) லும் வேலை செய்பவர்கள்....

பொதுவாக எல்லா IT நிறுவனங்களிலும் டெவலப்மென்ட் டீமும் டெஸ்டிங் டீமும் இந்தியா பாகிஸ்தான் மாதிரி எப்பவும் முறைத்து கொண்டே இருப்பார்கள்...

அது மாதிரி நம் நாயகனும் நாயகியும் இப்படி பட்ட எதிர் எதிர் பிரிவில் வேலை செய்ய, அவர்களுக்குள் நடக்கும் மோதல்கள், மAzற்றும் IT அலுவலகத்தில் நடக்கும் ஜாலியான கலாட்டாக்கள் நிறைந்ததே இந்த கதையின் போக்கு...

இது ஒரு மோதல் + காதல் + கலாட்டாக்கள் கலந்த ஜாலியான கதை... முழுக்க முழுக்க என்டர்டெய்ன்மென்ட்க்காக எழுதிய கதை..இந்த கதையை தொடர்ந்து படித்து தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading!!!

Published in Books

எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - பிந்து வினோத்

 

Dedication

இந்தக் கதை,

தொடர்ந்து எழுத எனக்கு ஆதரவும், ஊக்கமும் தந்து வரும் chillzee வாசகர்களுக்கும்,

எப்படிப்பா இப்படி’ என யோசிக்க வைக்கும் விதமாக வித்தியாசமாக எதையும் செய்யும் என் இனிய சக chillzee டீம் மக்களுக்கும்

சமர்ப்பணம்!!!!

 

கதையைப் பற்றி:

இது ஒரு ‘டெலிபதி’ காதல் கதை!!!!

 

கதையைப் பற்றி ஒன் லைனரில் சொல்ல வேண்டும் என்றால்,

கார்த்திக் – அத்விதா திருமணம், கடைசி நிமிடத்தில் அத்விதா வேண்டாம் என்று சொல்வதால் நின்றுப் போகிறது. எதனால் அத்விதா கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாள் என்று தெரிந்துக் கொள்ள முயலுகிறான் கார்த்திக்.

அதில் வெற்றிப் பெற்றானா, அவர்கள் திருமணம் நடந்ததா என்பதை தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள்!

Chillzee Reviews

Check out the Enge en kadhali? Enge...? Enge...? novel reviews from our readers.

  

 

Published in Books

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்... - பிந்து வினோத்

தன்னைப் பற்றி எந்த நினைவும் இல்லாமல் இருக்கும் நிலா, வெற்றி - மிருதுளா தம்பதிகளின் அரவணைப்பில் வாழ்கிறாள்.

திடீரென ஒரு நாள் அவளுடைய பழைய வாழ்க்கையின் உறவுகள் அவளை அங்கே கண்டுபிடித்து வருகிறார்கள். அவளுக்கு திருமணமாகி இருப்பது தெரிந்து நிலாவிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

அவளுடைய 'பழைய' கணவன் தியாகராஜன் அவளிடம் பாராமுகமாக இருக்கவும், நிலா குழம்பிப் போகிறாள். அதுவும் அவனே விரும்பி காதலித்து அவளை மணம் புரிந்தான் என்பது தெரிய வரவும் அவளுடைய குழப்பம் அதிகமாகிறது. என்ன நடந்தது என்று தெரிந்துக் கொள்ள முயற்சி செய்கிறாள்.

காதலித்து திருமணம் செய்துக் கொண்ட தியாகு ஏன் அப்படி நடந்துக் கொள்கிறான்? நிலாவிற்கு பழைய நினைவுகள் திரும்பியதா? பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா?

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

Published in Books

உயிர் கேட்கும் அமுதம் நீ...!

Other editions available!!! Click here to view other editions of this book.

Chillzeeயில் தொடர்கதையாக வெளி வந்த போது பெரும் வரவேற்பை பெற்ற கதை இது.

மூன்று தோழிகள் - அவர்களின் நட்பு - தனிப்பட்ட வாழ்வில் மலரும் காதல் - குடும்பம் - என மூன்று தோழிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சுற்றி நகரும் காதல் கதை!

Published in Books