இதுவரை காதலை மையப்படுத்தி அதனுடன் இணைந்த குடும்பப் பிரச்சினைகளையும் பற்றி கூறினேன். இந்த கதையில் காதல் என்பது இருக்கும். ஆனால் அதை நான் மையப்படுத்தவில்லை.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘படிக்காதவன்’ (தமிழில் இரண்டு படங்கள் இருப்பதால் நடிகர்களை குறிப்பிட்டுள்ளேன்) படத்தில் வரும் ‘ஒரு கூட்டுக் கிளியாக’ என்ற பாடல் சகோதரர்களின் பாசத்தை பார்ப்பவர்களுக்கு உணர்த்தும். நான் சொன்ன அந்த வரி எனக்கு பிடித்திருந்தது.
அதனால் நான் சகோதரிகளைப் பற்றி சொல்லப்போகும் இந்தக் கதையின் தலைப்பை ‘ஒரு கூட்டுக் கிளிகள்’ என்று வைத்திருக்கிறேன்.
அந்த சகோதரிகள் உங்களை கதையில் சந்திக்க வருகிறார்கள்.
நன்றி!
இந்த கதை மதியூர் எனும் கற்பனை மாவட்டத்தில் க்ரைம் பிரான்ச் இன்ஸ்பெக்டராக பணிப் புரியும் தென்றல்வாணனை பின்தொடர்கிறது.
இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் எப்படி வழக்குகளை அணுகி, மர்ம முடிச்சுகளை விடுவித்து, குற்றவாளிகளை கண்டுப்பிடிக்கிறார் என்பதை கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
Check out the Kurukku vazhiyil vazhvu thedidum...! novel reviews from our readers.