Online Books / Novels Tagged : Srija Venkatesh - Chillzee KiMo

கண்கள் சொல்கின்ற கவிதை... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

கண்கள் சொல்கின்ற கவிதை என்பது முற்றிலும் புதிய தளத்தில் சொல்லப்பட்ட காதல் கதை.

அனைவர் வாழ்விலும் ஏதாவது ஒரு கால கட்டத்தில் காதல் மனதில் பூத்திருக்கும். அதனை நினைவு படுத்தும் இந்தக் கதை.

காதல் ஒருவனை அழிக்க முடியும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் பல கதைகளிலிருந்து சொல்லலாம். ஆனால் இந்தக் கதையில் காதல் ஒருவனை எந்த அளவு உயர்த்தியது என்பதே சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் அப்படி உயர்த்திய காதலியின் நிலை என்ன?

அவன் நிலை உயர்ந்ததும் காதல் என்ன ஆனது? வீட்டாரின் எண்ணங்கள் மாறினவா? காதல் தோற்று விட்டதா? நாயகி என்ன செய்தாள்?  இருவரும் இணைந்தார்களா?

தெரிந்து கொள்ள வேண்டுமானால் கட்டாயம் படியுங்கள் "கண்கள் சொல்கின்ற கவிதை..."

 

Srija Venkatesh
Srija Venkatesh

Published in Books

கனாக் கண்டேன் தோழி நான்... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

காதல் என்பது ஒரு சுகமான அனுபவம். இரு உயிர்கள் மனங்கள் இணைந்து கவி பாடும் காலம் காதல் காலம். ஆனால் இரு உள்ளமும் திருமண வானில் இணைப்பறவைகளாய் சிறகடித்துப்பறந்தால் ஆனந்தம் தான்.

ஆசை ஆசையாக் காதலித்த இரு இளம் உள்ளங்கள் பெற்றோர்களின் கௌரவத்துக்கு மரியாதை கொடுத்துப் பிரிய முடிவெடுத்தால்...?

இருவரின் வாழ்க்கையும் என்ன ஆகும்?

காலம் அவர்களை ஒன்றாகச் சேர்க்குமா?

அப்படியே சேர்த்தாலும் இருவரின் மன நிலை எப்படி இருக்கும்?

தெரிந்து கொள்ளப் படியுங்கள் கனாக் கண்டேன் தோழி நான்.....

Srija Venkatesh
Srija Venkatesh

Published in Books

பொன் அந்திச் சாரல் நீ... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

பொன் அந்திச் சாரல் நீ.....என்ற இந்தக் கதை, காதலுக்கும்,செஞ்சோற்றுக்கடனுக்கும் இடையே நடக்கும் போரட்டம்.

நிஷா அழகான இளம் பெண். செல்வாக்கான பெற்றோர், செல்லமான தம்பி என நிறை வாழ்வு வாழும் அவளது வாழ்க்கை பரத் என்னும் டாக்டர் நிஷாவின் தாய்க்கு ஆப்பரேஷன் செய்யும் போது செய்த தவறால் திசை மாறுகிறது. பெற்றோரை இழந்து, செல்வத்தை இழந்து தவிக்கிறாள்.  தூரத்து உறவு முறையில் சித்தி ஆதரவு காட்ட ஒண்டிக்கொள்கிறாள். பரத் மீது மாறாத கோபமும், வெறுப்பும் மண்டுகிறது அவள் மனதில்.

ஆனால் பரத் நிஷாவை மனமாரக் காதலிக்கிறான். அவனும் பெற்றோரை இழந்து மாமனின் ஆதரவில் படித்து டாக்டர் ஆனவன். அவன் நிலை என்ன? நிஷாவின் மனதில் பரத்தின் மேல் இருந்த வெறுப்பு மாறுமா? அவர்கள் இணைவார்களா? நிஷாவின் தம்பி சச்சினின் வெளி நாட்டில் படிப்பு என்ற கனவு நிறைவேறியதா?

இவற்றைத் தெரிந்து கொள்ள படியுங்களேன் "பொன் அந்திச் சாரல் நீ....".

படித்து விட்டுக் கருத்தைப் பகிருங்கள்.

Srija Venkatesh
Srija Venkatesh

Published in Books

காதல் என்னும் அழகியே... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

கதைக்குள்ளே செல்லுமுன் உங்களோடு ஒரு வார்த்தை...

"காதல் என்னும் அழகியே" என்ற இந்தக் கதை காதல் கதை ஆனால் சற்றே வித்தியாசமானது.

 

கல்லூரி நாட்களில் காதலிக்கும் இரு இளைஞர்கள்  காலத்தால் பிரிகின்றனர். அவனுக்கு வாழ்க்கை வெற்றிகளை அள்ளித்தர, பாவம் அவள் என்ன ஆனாள்? மிகப்பெரிய நிறுவனத்தின் பொது மேலாளராக இருக்கும் அவன் தன் முன்னாள் காதலியை துப்புரவுத் தொழிலாளியாக ஏன் பார்க்க நேர்ந்தது?

அவன் என்ன செய்யப் போகிறான்?

அவனுக்கும் அவன் மனைவிக்கும் உள்ள உறவு என்ன ஆகும்?

 

இவற்றைப் பற்றித்தான் பேசுகிறது கதை. ஆனால் நிச்சயமாக ஒரு நல்ல வழியைத்தான் சொல்கிறதே அன்றி ஒழுக்கக் கேட்டை ஒரு நாளும் பேசாது.

 

இக்கதையின் கதாநாயகன் மீது நீங்களும் காதல் கொள்ளலாம். அதை விட அவன் மனைவியை நேசிக்கலாம்.

 

படித்து விட்டு என்னோடு உங்கள் கருத்தைக் கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

Srija Venkatesh
Srija Venkatesh
Published in Books
Page 5 of 5