Online Books / Novels Tagged : Family - Chillzee KiMo

தேடி உனைச் சரணடைந்தேன்..... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

தேடி உன்னைச் சரணடைந்தேன் என்னும் இந்த நாவல் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள், பெண்களின் நிலை, இன்றும் பெண்களை சில குடும்பத்துப் பெரியவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? போன்றவற்றை மையமாகக் கொண்டது.

பெரிய குடும்பத்தில் பிறக்கும் கடைசி மகன்கள் ஒன்று சிறு குழந்தை என்று ஒதுக்கப்படுவார்கள் அல்லது மிக அதிக செல்லம் கொடுத்துக் கெடுக்கப்படுவார்கள். இங்கே நமது நாயகன் செந்தில் குமரன் பாவம் ஒதுக்கப்படுகிறான். அவனை தகப்பனே மதிக்கவில்லை எனில் உடன் பிறந்த அண்ணன்கள் எங்கே மதிப்பார்கள்? அவர்களது மனைவிமார்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஆனால் பாவம் செந்திலுக்கு தான் ஒதுக்கப்படுகிறோம் என்பதோ, தனக்குப் பெரிய மரியாதை இல்லை குடும்பத்தில் என்பதோ தெரியவில்லை அவன் வாழ்க்கையில் பெண் என ஒருத்தி வரும் வரையில். அவளும் தகப்பனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண். அதுவும் எதற்கு? பழி வாங்க. இது எதுவும் செந்திலுக்குத் தெரியாது. சந்தோஷமாக ஆரம்பிக்கும் அவன் மண வாழ்க்கையில் பல சூறாவளிகள், சதிகள். தம்பதிகள் பிரிந்து வாழும் நிலை. இறுதியில் என்ன ஆனது?

சிவகுர் எனப்படும் பண முதலை தன் கடைசி மகனின் திறமைகளை, அவன் ஆசைகளைப் புரிந்து கொண்டாரா? பெண்களும் மனிதப்பிறவிகள் தான். அவர்களுக்கும் ஆசா பாசங்கள், சாதிக்கும் ஆசை எல்லாம் இருக்கும் என உணர்ந்தாரா? அப்படியே உணர்ந்தாலும் காலம் கடந்து விட்டதோ?

படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் "தேடி உன்னைச் சரணடைந்தேன்"

Published in Books

இதற்கு  பெயர்தான் காதலா!!!??? - சசிரேகா

அன்பான வாசகர்களே….
முதலில் உங்களிடம் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தொடர்ந்து எனது கதைகளை படித்து ஆதரவு தந்து என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நன்றிகள்.
பெரும்பாலும் எனது கதைகளில் நிறைய கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருக்கும் கூட்டுக்குடும்பம் சொந்தம் பந்தம் என ஏகப்பட்டவர்கள் அவர்களுக்கு ஏற்ப கதையில் கூடுதல் வசனங்கள் கூடுதல் கிளை கதைகள் என கதம்பமாக கதையை எழுதியிருப்பேன் ஆனால் இப்போது நான் எழுதியுள்ள இதற்கு பெயர்தான் காதலா!!!??? கதை உண்மையில் மாறுபட்டது.
இக்கதையில் பெரும்பாலும் வரும் கதாபாத்திரங்கள் வெறும் 5 நபர்கள்தான். இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் கதாநாயகன் சூர்யா அவனது தந்தை ரத்தினம் தாய் சரஸ்வதி மற்றும் கதாநாயகி ஹர்ஷவர்தினி அவளது தந்தை மகேஸ்வரன் ஆகும். இவர்கள் ஐவரை சுற்றியே கதை நகரும் முக்கியமாக நாயகன் நாயகிக்கு பெருமளவு கதையில் இடம் கொடுத்துள்ளேன் இதற்கு முன் எழுதிய கதைகளை விட இது சற்று வித்தியாசமான காதல் கதையாகும். கண்டிப்பாக இக்கதை தங்கள் அனைவரையும் கவரும் என எதிர்பார்க்கிறேன்
நன்றி
சசிரேகா
கதை முன்னுரை
அன்பிற்காக ஏங்கும் கதாநாயகி ஹர்ஷவர்தினிக்கு நாயகன் சூர்யாவிடமும் அவனது குடும்பத்தாரிடமும் கொட்டிக் கிடக்கும் அன்பை பெற அவள் போராடும் போராட்டத்தில் அவள் வெற்றி பெற்றாளா? உண்மையான காதலும் தாய்அன்பும் அவளுக்கு கிடைத்ததா? அல்லது கிடைக்காமல் போன தருணங்களில் அவளது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? அதிலிருந்து அவள் மீண்டாளா அவளது நிலைமை என்னவானது? என்பதை பற்றி சொல்வதே இக்கதையாகும்.

Published in Books

சிறு கதை தொகுப்பு - விஜயகுமாரன்

விஜயக்குமாரன் பகிர்ந்திருக்கும் நான்கு சிறு கதைகள்.

Published in Books

மாசில்லா உண்மைக் காதலே - சசிரேகா

முன்னுரை:

உறவுகளுக்குள் உள்ள பலம் பலவீனம் பற்றியும் என்னதான் சொந்தபந்தம் மேல் கோபம் வெறுப்பு இருந்தாலும் ரத்தபந்தம் என்றுமே உறவுகளை பிரியவிடாது என்பதை சொல்லும் கதையாகும்.

Published in Books

நிலவே என்னிடம் நெருங்காதே!! - பத்மினி செல்வராஜ்

ஹாய் பிரண்ட்ஸ்,
அனைவருக்கும் வணக்கம்..இதுவரை என் கதைகளை படித்து எனக்கு ஆதரவு அளித்து என் எழுத்தில் இருந்த நிறை குறைகளை சுட்டிக்காட்டி என்னை வழி நடத்திய அனைத்து தோழமைகளுக்கும் நன்றி..
நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும் எனது அடுத்த கதையை தொடங்க இருக்கிறேன்..

கதையைப் பற்றி??

என்ன கதை என்று சொல்லாமல் கொஞ்சம் சஸ்பென்ஸில் இருக்கட்டும்.. ஆனாலும் கதையின் தலைப்பிலிருந்து நீங்களே  ஓரளவுக்கு யூகித்திருப்பீர்கள்...உங்கள் யூகம் சரிதானா  என்று தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்..
இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான காதல் கதைதான்..எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து  என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. Happy Reading!!!

********

Published in Books