Online Books / Novels Tagged : Family - Chillzee KiMo

விளக்கேற்றி வைக்கிறேன்... - பிந்து வினோத்


 

Other editions available!!! Click here to view other editions of this book.

ஹாய் ஃபிரென்ட்ஸ், 'உன்னைத் தானே' கதையுடைய ஒரிஜினல் எடிஷன் இது. இந்த வெர்ஷனுக்கும், "உன்னைத் தானே" வெர்ஷனுக்கும் சின்னதாக சில வித்தியாசங்கள் இருக்கிறது.  என் பிரென்ட்ஸ் சிலருக்கு இந்த வெர்ஷன் பிடிக்கும். அதற்காக இதையும் பப்ளிஷ் செய்கிறேன். ஒருவேளை நீங்கள் "உன்னைத் தானே" கதையை படித்திருந்தால், என்ன வித்தியாசம் என்று தெரிந்துக் கொள்ள படியுங்கள், அல்லது ஸ்கிப் செய்து விடுங்கள் :-) நன்றி!

 

கதையைப் பற்றி:

கிராமத்து இளைஞன் சசி, சென்னையில் சிந்துவை பார்த்த உடனே காதல் கொள்கிறான்.

சிந்துவிற்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதை தெரிந்து சசி வருத்தம் அடையும் போதே, எதிர்பாராத விதமாக அவளை திருமணம் செய்துக் கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கிறது. அதைத் தவறாமல் பயன்படுத்தியும் கொள்கிறான்.

ஆனால் அந்த திருமணம் சிந்துவிற்கு பிடிக்குமா? அவனின் பெற்றோர் அதை ஏற்றுக் கொள்வார்களா??

தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!

Chillzee Reviews

Check out the Vilaketri vaikkiren story reviews from our readers.

  

 

Published in Books

முதன் முதலில் பார்த்தேன் - அமுதினி

குடும்பம், உறவுகள் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் ஒருவன். குடும்பமும் உறவுகளும் மட்டுமே ஜீவநாதமாக இருக்கும் குடும்பத்தில் இருந்து வந்த ஒருத்தி. இவர்கள் இருவரையும் இணைக்கும் காலம், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது உண்டாகும் மோதலும் காதலும் தான் இந்த 'முதன் முதலில் பார்த்தேன்".

Published in Books

மோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி

மூங்கில் வனத்திற்கு மட்டும் என்ன சிறப்பு….? ஓசைக்கும் இசைக்கும் உள்ள வேற்றுமைதான். இங்கு உள்ள பச்சை மூங்கில்களில் வண்டுகள் குடைந்து இயற்கையாகவே பல புல்லாங்குழல்கள் உருவாகியிருக்கும். அங்கு காற்று அந்த துளைகளில் புகுந்து வெளிவரும்போது இனிய இசை வெளிப்படும்… வேணுகானம்!.  சங்கின் ஓம்காரமும் வண்டுகளின் ரீங்காரமும் மூங்கிலின் குழலொலியும் ஆதியின் இயற்கை இசை என்று சொல்வதுண்டு. அதிலிருந்துதான் சப்தஸ்வரங்களும் ராகங்களும் உருவாகின.

 ஒவ்வொரு மனமும் ஒரு வனம்தான். அதற்கென்று இசையை உருவாக்கி துடிக்கும்…. அது மௌனமாகி விட்டால்… உயிர்தான் இருக்கும் உயிர்ப்பு இருக்காது…  இசையை மறந்து மௌனித்த இதயம் மீண்டும் இசைக்குமா?

துரோகத்தாலும் சதியாலும் உயிர் துறந்து  மௌனமாக மாறிய ஒரு தேவதையின் கதை இது. நித்திலவல்லி மீண்டும் மானஸாவாக பிறப்பெடுத்தது பழி தீர்க்கவா… வேணுமாறன் மீது விழுந்த பழியை துடைக்கவா?.  கதையை படிக்கலாமா?

அன்புடன்

சாகம்பரி

Published in Books

தீராத காதல்…! - நந்தினி நடராஜ்

சிறிய முன்னுரை, 

 "காதல்".சிலருக்குவார்த்தை.

பலருக்கு உணர்வு.அதை உணர முடியும்.யார் மீது எல்லாம் ஓர் உண்மையான அன்பு இருக்கிறதோ அவர்கள் மீது எல்லாம்.

 

உண்மைக்கும் காதலும் ஒர் பிரிக்க முடியாத உறவு.உண்மை இல்லாத காதல் வாழ முடியாது. ஆனால் உண்மை காதலை யாராலும் பிரிக்க இயலாது.காதலர்கள் பிரிந்தாலும் அவர்கள் காதல் வாழுந்து கொண்டு இருக்கும்,பல கதைகளை பார்த்து இருப்போம்;கேட்டும் இருப்போம்;

இதுவும் அப்படிப்பட்ட கதையே..

 

நிறம்,மொழி, சாதி, மதம்,வசதி அனைத்தையும் கடந்ததே காதல்.

உண்மையான அன்பு கொண்ட இரு மனது இணையும் ஓர் உன்னதமான தருணம்.

 

அனைத்து காதலும் வெற்றி காணாது. சில காதலில் வலி,தோல்வி,பிரிவு,இழப்பு அனைத்தும் இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு காதல் கதை இது.

ஒரு பெண்ணின் வலி,தோல்வி,வெற்றி,மகிழ்ச்சி..,  நாமும் அவள் உடன் பயணிப்போம்..

Published in Books

தாழம்பூவே வாசம் வீசு!!! - பத்மினி செல்வராஜ்

நாயகன் பார்த்திபன்.  கிராமத்தை சேர்ந்தவன்..வாழ்வில் எந்த பிடிப்பும் பொறுப்பும்  இல்லாமல் கடனே என்று வாழ்ந்து வருபவன்..அவன் வாழ்வில் நுழைகிறாள் ஒரு தேவதை..

அந்த தேவதை,  பாலைவனமாக இருக்கும் அவன் வாழ்வை வசந்தமாக்க போகிறாளா? இல்லை இன்னும் மோசமான நிலைக்கு இழுத்து செல்ல போகிறாளா என்று  பார்க்கலாம்...   

இதுவும் ஒரு மனதுக்கு இனிமையான காதல் கதைதான்.. இந்த கதையையும் படித்து தவறாமல்  உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading!!! 

Published in Books