ஆகாஷ் - அக்ஷ்ராவின் குடும்பங்கள் சொந்தம் போல நெருங்கிய நட்புடன் பழகும் குடும்பங்கள். இரண்டு குடும்பங்களின் பெரியவர்களும் ஆகாஷ், அக்ஷராவின் சம்மதத்துடன் அவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு சினேகாவை சந்திக்கிறான் ஆகாஷ். அவள் மீது ஈர்க்கவும் படுகிறான். ஒரு பக்கம் வீட்டில் மும்முரமாக திருமண ஏற்பாடுகள் நடக்க, ஆகாஷின் மனம் சினேகாவை மறக்க முடியாமல் தவிக்கிறது. பெரியவர்களின் மனதை வருத்தவும் முடியாமல், மனதிற்கு பிடித்தவளை மறக்கவும் முடியாமல் இருக் கொல்லி எறும்பாக தவிக்கிறான் ஆகாஷ்.
பெரியவர்களின் மனம் நோகாமல் ஆகாஷின் காதல் நிறைவேற முடியுமா? அக்ஷரா நிலைமை என்ன? சினேகா ஆகாஷின் காதலை ஏற்றுக் கொள்வாளா?
தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள்!
மலர்களே! மலர்களே!! என்ற இந்த நாவல் வித்தியாசமான கதைக்களம் கொண்டது.
சேதுலட்சுமி அம்மாள் ஆதரவற்ற சில குழந்தைகளை வளர்க்கிறார். அவர் அப்படிச் செய்ய என்ன காரணம்? அவரது வளர்ப்பு மகள் அமுதாவின் காதலால் அவருக்கு ஏற்பட்ட கடும் அவமானத்துக்குக் காரணம் என்ன? அவரது கடந்த காலம் அமுதா மற்றும் இதர குழந்தைகளை பாதிக்குமா?
நற்பண்புகளே உருவான சேதுலட்சுமி அம்மாளின் வாழ்வில் மறைந்திருக்கும் ரகசியம் என்ன? அடிக்கடி வந்து போகும் ராஜு அண்ணனுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? அமுதாவின் காதலால் தாய், குழந்தைகள் என்று அவர்கள் இது வரை வாழ்ந்து வந்த வாழ்வு குலைந்து விடுமா?
சேதுலட்சுமி அம்மாள் உண்மையிலேயே நல்லவர் தானா? அமுதாவின் காதல் என்ன ஆனது?
இவற்றைத் தெரிந்து கொள்ளப் படியுங்கள் மலர்களே! மலர்களே!! நாவலை.
எனதுயிரே! எனதுயிரே!! என்ற இந்த நாவல் ஒரு காதல் காவியம்.
வாழ்வில் வரும் காதல் சிலருக்கு வசந்தமாகவும் ஒரு சிலருக்கு சூறைக்காற்றாகவும் அமைந்து விடுகிறது.
நிகில் என்னும் இளைஞனின் வாழ்க்கையையே திருப்பிப் போடுகிறது அவன் காதல். அவன் தந்தையும் காதலை எதிர்க்கவில்லை.ஆனாலும் அவன் காதல் கை கூட என்னென்ன தடைகள்? தந்தையின் பாசம் ஒரு புறம், கடமை உணர்வு ஒரு புறம், கழிவிரக்கம் ஒரு புறம் என தடுமாறும் நிகில் என்ன முடிவு செய்கிறான்?
எப்படிப் பட்ட சூநிலையிலும் தீபா மேல் அவன் கொண்ட காதல் கொஞ்சமும் மாறாமல் பாதுகாக்கும் கதாநாயகன் நிகில் உங்கள் மனதைக் கவர்வான்.
இறுதியில் அவன் மனதைக் கவர்ந்த தீபா அவன் மனைவி ஆனாளா? அதைப் பற்றித்தான் பேசுகிறது எனதுயிரே! எனதுயிரே!! .
படிக்கும் போதே கண்களில் நீரை வரவழைக்கும் இந்த நாவல் படித்து முடித்தத்தும் இனம் தெரியாத மகிழ்ச்சியையும், மன நிறைவையும் கொடுக்கும்.
நாயகன் வசீகரன் ஒரு புகழ் பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணன்... ஒவ்வொருவர் இதயத்திலும் எந்த மாதிரியான குறை இருந்தாலும் அதை கண்டறிந்து குணபடுத்தி வெற்றி கண்டவன்....
அப்படிபட்ட நம் நாயகன் ஒரு பெண்ணின் இதயத்தில் என்ன இருந்தது என்று கண்டு பிடிக்க முடிந்ததா?? கண்டு பிடித்து குணபடுத்த முடிந்ததா?? என்பதை அறிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்.....
இதுவும் ஒரு ஜாலியான காதல் கலந்த கதை...இந்த கதையும் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.. Happy Reading!!!
முன்னுரை:
அனைவருக்கும் வணக்கம்..
இதுவரை என் கதைகளை படித்து ஆதரவும் உற்சாகமும் அளித்து வரும் சில்சீ நட்பூக்களுக்கு நன்றி..
தொடர் கதையோடு நாவல் எழுதும் வகையில் அடுத்ததாக கண்டேன் என் காதலை என்ற எனது இரண்டாவது நாவலுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்..
கதையை பற்றி??
காதலின் மகிமையை உணர்த்த, அந்த சிங்கார வேலன் ஆடும் திருவிளையாடலே இந்த கதை..
இரண்டு காதல் ஜோடிகளுக்கு இடையில் குழப்பத்தை கொண்டு வந்து அதை தனக்கு சாதகமாக்கி கொண்டு அந்த வேலன் ஆடும் ஆட்டம் தான் கதையின் போக்கு.. இந்த ஆட்டமும் சுவாரஸ்யமாக இருக்கும் என நம்புகிறேன்...
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading !!!