எனதுயிரே! எனதுயிரே! - ஸ்ரீஜா வெங்கடேஷ்
எனதுயிரே! எனதுயிரே!! என்ற இந்த நாவல் ஒரு காதல் காவியம்.
வாழ்வில் வரும் காதல் சிலருக்கு வசந்தமாகவும் ஒரு சிலருக்கு சூறைக்காற்றாகவும் அமைந்து விடுகிறது.
நிகில் என்னும் இளைஞனின் வாழ்க்கையையே திருப்பிப் போடுகிறது அவன் காதல். அவன் தந்தையும் காதலை எதிர்க்கவில்லை.ஆனாலும் அவன் காதல் கை கூட என்னென்ன தடைகள்? தந்தையின் பாசம் ஒரு புறம், கடமை உணர்வு ஒரு புறம், கழிவிரக்கம் ஒரு புறம் என தடுமாறும் நிகில் என்ன முடிவு செய்கிறான்?
எப்படிப் பட்ட சூநிலையிலும் தீபா மேல் அவன் கொண்ட காதல் கொஞ்சமும் மாறாமல் பாதுகாக்கும் கதாநாயகன் நிகில் உங்கள் மனதைக் கவர்வான்.
இறுதியில் அவன் மனதைக் கவர்ந்த தீபா அவன் மனைவி ஆனாளா? அதைப் பற்றித்தான் பேசுகிறது எனதுயிரே! எனதுயிரே!! .
படிக்கும் போதே கண்களில் நீரை வரவழைக்கும் இந்த நாவல் படித்து முடித்தத்தும் இனம் தெரியாத மகிழ்ச்சியையும், மன நிறைவையும் கொடுக்கும்.
அத்தியாயம் 1.
நிகில் இண்டஸ்டிரிஸ் என்ற அந்த நிறுவனம் திங்கட் கிழமைக் காலைக்கான பரபரப்பில் இருந்தது. அதோடு அன்று செகரட்டரி பதவிக்கான இண்டர்வியூ வேறு. நிகில் தான் எல்லாரையும் இண்டர்வியூ செய்து கொண்டிருந்தான்.
நிகில் 27 வயது இளைஞன். ஜிம் போய் நன்றாக உடலையும் தியானம் யோகா முதலியவை செய்து உள்ளத்தையும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவன். மிகப் பெரிய பணக்காரன் என்றாலும் எப்போதாவது அடிக்கும் பீரைத் தவிர வேறு கெட்ட பழக்கங்கள் எதுவும் கிடையாது. ஐந்து வயதில் தாயை இழந்ததால் தந்தையால் எல்லாமாக நின்று வளர்க்கப்பட்டவன். அவன் தந்தை அருணாசலத்துக்கு நிகில் என்றால் உயிர். அவனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.
அவனுக்கு ஆபீசில் கூட மாட ஒத்தாசையாக இருக்க ஒரு செகரட்டரி தேவை. அதற்குத்தான் இந்த இண்டர்வியூ.
நிகில் இண்டஸ்டிரீஸ் மிகவும் பெருமையும் புகழும் கொண்ட நிறுவனம் ஆதலால் இண்டெர்வியூவிற்கு நல்ல கூட்டம். எப்படியும் 20 பேராவது இருப்பார்கள். ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டிருந்தான் . ஆணாக இருந்தால் மிகவும் நல்லது . அப்போது தான் வெளியூர்களுக்குச் செல்லும் போது தயக்கமில்லாமல் கூட்டிச் செல்ல முடியும். என்பது அவன் எண்ணம்.
இது வரை 10 பேரை இண்டர்வியூ செய்தாயிற்று ஒன்றும் தேறவில்லை. ஒன்பது பேரில் ஐந்து ஆண்கள். அவர்கள் ஒன்று வேலை தெரியாதவர்களாக இருந்தார்கள் , இல்லை சம்பளம் மிக அதிகமாக எதிர்பார்த்தார்கள். பெண்களில் யாருமே தேறவேயில்லை.
சொர்ந்து போனான் நிகில்.
"அடுத்த ஆளை வரச் சொல்லுங்க சுந்தரம்"
உள்ளே நுழைந்த மாதவனுக்கு வயது 25 தான் இருக்கும். சுறுசுறுப்பாகக் காணப்பட்டான். நிகில் உட்காரச் சொல்லும் வரை உட்காரவில்லை.
"உக்காருங்க"
"உங்க பயோ டேட்டா பாத்தேன். ரொம்ப நல்லாயிருக்கு. நீங்க இப்ப எங்க ஒர்க் ப்ண்றீங்க?"
"டயமண்ட் இண்டஸ்டிரீஸ்ல வேலை செய்யறேன் சார்"
"ஏன் அந்த வேலையை விடறீங்க?"
"வளர்ச்சி வேணும் இல்லியா சார்? நிகில் இண்டஸ்டிரீஸ் ரொம்பப் பெருசாச்சே! எனக்கு கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்குமே அது தான் சார்"
"சரி! அப்ப இதை விட பெரிய இண்டஸ்டிரியில வாய்ப்புக் கிடைச்சா இதையும் விட்டுட்டுப் போயிடுவீங்களா?"
"அப்படி இல்ல சார். எனக்குக் குடும்பம் பெருசு. ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க! நான் தான் அவங்களுக்குக் கல்யாணம் செஞ்சு வெக்கணும். அதுக்கெல்லாம் நிறையப் பணம் வேணும். அதுக்குத்தான் சார் பெரிய வேலையா தேடறேன்."
"நீங்களே சொல்றீங்க உங்களுக்கு பணத்தேவை அதிகம்னு. இது ரொம்ப முக்கியமான போஸ்ட் .அப்படி இருக்கும் போது நீங்க லஞ்சம் வாங்க மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?"
"கண்டிப்பா மாட்டேன் சார். உழைச்சு பணம் சேக்க நினைக்கிறேனே தவிர குறுக்கு வழியில போக மாட்டேன் சார். நீங்க வேணா நான் இப்ப வேலை பாக்கற கம்பெனியோட எம்.டி கிட்ட என்னைப் பத்திக் கேட்டுப் பாருங்க சார். என்னைப் பத்தி சொல்வாரு"
"ஓகே ஓகே"
மேலும் சில கேள்விகள் வேலை சம்பந்தமாகக் கேட்டான். எல்லாவற்றிற்கும் திருப்தியான பதில் நிகிலுக்கு மாதவனைப் பிடித்துப் போனது. சரி இவனுக்கே அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து விடலாம் என்று முடிவு செய்து கோண்டான்.
"மிஸ்டர். மாதவன். நீங்க இந்த போஸ்டுக்கு செலக்ட் ஆனா அடிக்கடி வெளியூரெல்லாம் என் கூட வர வேண்டியிருக்கும். அப்போ சாக்குப் போக்கு சொல்லக் கூடாது. அதுக்குத் தனியா டி ஏ உண்டு."
"ஓகே சார்"
"சரி இப்ப நீங்க போகலாம். இன்னும் ரெண்டு நாள்ல உங்களுக்குப் பதில் வரும்" என்று அவனை அனுப்பி விட்டு யோசனையில் ஆழ்ந்தான். மாதவனை செலக்ட் செய்தாயிற்று. இந்நிலையில் மற்றவர்களைப் பார்ப்பானேன்? அப்படிப் பார்க்காவிட்டால் அவர்களுக்கு ஏமாற்றமாக இருக்காதா? அப்புறம் ஆட்களை ஏற்கனவே முடிவு செய்து வைத்துக் கொண்டு கண் துடைப்புக்காக இண்டர்வியூ வைக்கிறார்கள் என்ற பேச்சு வரும். அது எதற்கு? மீதி இருக்கும் பேரையும்