Chillzee KiMo Series - சிரிக்கும் ரங்கோலி - யாஷ் : Sirikkum Rangoli - Yash : அத்தியாயம் 27

சிரிக்கும் ரங்கோலி - யாஷ் : Sirikkum Rangoli - Yash
 

27.

  

சொல்லிக் கொண்டே உள்ளே செல்ல திரும்பிய சான்வியின் கண்ணில் விவேக் தென்பட்டான்.

இப்போதும் அவளை தான் ரசிப்பது போல பார்த்துக் கொண்டிருந்தான்.

சான்வி கவனத்தை திருப்பி நடக்க முயலவும், “குட் ஜாப்,” என்றான் விவேக்.

எதிர்பாராத அந்த பாராட்டால் குழம்பிய விழிகளுடன் அவனை பார்த்தாள் சான்வி.

அவள் பக்கத்தில் வந்த விவேக், “அக்ஷரா கிட்ட நீங்க எடுத்து சொன்ன விதம் அருமை. ஆதி மேல தப்பில்லைன்னு சொல்லலை, அக்ஷரா மேல தப்புன்னும் சொல்லலை, அழகா எடுத்து சொன்னீங்க,” என்றான்.

சான்வியின் முகம் திரும்பவும் சாதாரணமானது. விவேக்கின் பாராட்டை புன்னகை கொடுத்து ஏற்றுக் கொண்டு இரண்டு அடிகள் எடுத்து வைத்தாள். பின் ஏதோ நினைத்தவளாக திரும்பி வந்து விவேக்கிடம் பேசினாள்.

 
 
 

Chillzee KiMo Series - Chillzee KiMo Series - சிரிக்கும் ரங்கோலி - யாஷ் : Sirikkum Rangoli - Yash