அறிமுகம்
இவ்வுலகில் படைக்கப்பட்ட அற்புதமான படைப்பு என்பது ஒரு உயிரினமோ அல்லது ஒரு தாவரமோ அல்லது ஒரு இயற்கை காட்சியோ அல்ல.இவ்வுலகில் படைக்கப்பட்ட அற்புதமான மற்றும் விசித்திரமான படைப்பு மனிதனின் வாழ்வுதான்.வாழ்வு இது தான் உங்கள் வாழ்வில் விசித்திரம் எது ..?இயல்பு எது..? தத்துவம் எது ..?அழகு எது ..? அவலம் எது..? உண்மை எது..? பொய் எது..? என பல்வேறு உணர்வுகளுக்கும் விடையளிக்கிறது.நாம் வாழும் வாழ்க்கை பிரபஞ்சம் போன்று கணிக்க முடியாத ஒன்றே.எல்லோர் வாழ்வும் தட்டையாக இருப்பதில்லை.ஏதோவொரு சுவாரஸ்யத்தை வாழ்க்கை நமக்கு இன்பத்தின் மூலமாகவோ துன்பத்தின் மூலமாகவோ தந்து படம் கற்பித்து புதிய பாதை உருவாக்க உதவுகிறது.
சில நேரம் நீங்கள் இதுதான் நடக்க வேண்டும் என்று நினைத்தால் அது நடப்பது அரிதினும் அரிது.இது நடக்காது என நினைக்கிற பொழுது அது நடப்பது மட்டுமல்லாமல் நாட்டியம் ஆடவும் செய்யும்.அனைவரும் காதல் குறித்தும் வாழ்க்கை துணை குறித்தும் பலவாறு கனவு காண்போம் ஆனால் நாம் நினைத்து பார்த்திட முடியாத ஒருவர் நமக்கு அமைவார்.பொட்டல் காடுகளை கொண்ட தமிழகத்தின் சிற்றூரில் நீங்கள் வசித்திருப்பீர்கள் .ஆனால்,ஒரு நாள் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் நீங்கள் நடந்து கொண்டிருப்பீர்.அரண்மனை ராஜாவாகவும் ராணியாகவும் வலம் வந்த நீங்கள் திடீரென பாதாளத்தில் விழுந்து கிடப்பீர்.ஏன் 2020ல் அமைதியாக எல்லோரும் வேலைக்கு சென்று கொண்டிருக்கும்போது சட்டென ஒரு சிறிய கொரோனா என்ற வைரஸால் மாத கணக்காக நாடே வீட்டில் முடங்கியது.
அதுவரை பொருளாதாரத்தில் முதலிடம் பெற போட்டியிட்ட நாடுகள் இன்று அத்தியாவசிய தேவைகளுக்காக போராடிக்கொண்டிருக்கின்றன.வாழ்க்கை எவ்வாறு நம்மை மாற்றுகிறது என்று பாருங்கள்.நாம் அனைவரும் பாதைகளை திட்டமிடுகிறோம்ஆனால் வாழ்வானது நம் வாழ்க்கையை திட்டமிடுவதில்லை சதுரங்க ஆட்டத்தில் ஒரு சிப்பாய் போல் நம்மை தேவையான தருணத்தில் எல்லா பாதையிலும் செல்லும் ராணியாகவோ நேர் பாதையில் செல்லும் யானையாகவோ குறுக்கு பாதையில் செல்லும் மந்திரியாகவோ மாற்றுகிறது.
சூழ்நிலைதான் ஒருவனின் குணத்தை தீர்மானிக்கிறது.அவன் குணம்தான் அவனது அடுத்த நகர்வுகளை தேர்வு செய்கிறது.அந்த நகர்வுதான் அவளை/அவனை முடிவு நோக்கி கொண்டு செல்ல உதவுகிறது.
வாழ்வானது அற்புதமானது அது கிடைப்பது எப்படி அது என்ன என யாருக்கும் தெரியாது.தெரிந்து கொள்ளவும் யாரும் முயல்வதில்லை.சிலர் அது குறித்த தேடலில் இறங்கியவர்களும் தோற்றுத்தான் போயுள்ளார்கள்.
நாம் நினைத்திருப்போம் எல்லாரும் ஒரே மாதிரிதான் தோன்றுகிறோம் மறைகிறோம்எல்லாரையும் மனிதன் என்றுதான் அழைக்கிறோம் ஆனால் இடையில் வாழும் வாழ்க்கை மட்டும் ஏன் இவ்வளவு வேறுபாடுகளை கொண்டுள்ளது.
வாழ்வு எதிர்பாரா தருணங்களை கொண்டது.