Online Books / Novels Tagged : mymp - Chillzee KiMo

மாலையில்  யாரோ மனதோடு  பேச...! - பிந்து வினோத்

Chillzeeயில் என்றென்றும் உன்னுடன் - 01 என்ற பெயரில் தொடராக வந்த கதை இது.

சிறிய தொழிற்சாலை ஒன்றின் முதலாளியான கோபி, தன் மனைவி சரண்யா மற்றும் ஒரு வயது குழந்தை நிஷாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான்.

எதிர்பாராத விதமாக ஒரு சாலை விபத்தில் கோபி இறந்து விட, சரண்யா அவனின் தொழிற்சாலையை எடுத்து நடத்துகிறாள். அனுபவமின்மையாலும், தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தாலும் வரும் லாபத்தை தொழிற்சாலைக்கு என்று எடுத்து வைக்காமல் செலவிடுகிறாள் சரண்யா.

மூன்று ஆண்டுகள் செல்ல, தொழிற்சாலைக்கு என்று முன்பு வாங்கி இருந்த கடன் பெரிதாக வளர்ந்து பயமுறுத்துகிறது. குடும்ப நண்பராக இருக்கும் சேகர் தவிர உறவினர் யாருடைய துணையும் இல்லாமல் இருக்கும் சரண்யா, தொழிற்சாலையை விற்க முடிவு செய்கிறாள்.

சிங்கப்பூரில் இருந்து யார் மீதோ பழி உணர்ச்சியுடன் பல வருடங்களுக்கு பின் வந்திருக்கும் மித்ரன், அந்த தொழிற்சாலையை வாங்குகிறான். அங்கே பணிபுரிபவர்கள் சரண்யா மீது காட்டும் அன்பும், பணிவும் கோபத்தை தர, சரண்யா மீது எரிந்து விழுகிறான். கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மற்றவர் முன்னிலையில் அவளை அவமானப் படுத்துகிறான்.

இது போன்ற காரணமற்ற கோபத்தை சந்தித்து பழகி இராத சரண்யா திகைத்து போகிறாள். என்ன செய்வது என்று குழம்பும் போது, முன்பு கோபி கொடுத்த விசிடிங் கார்ட் கண்ணில் பட, அதில் இருக்கும் முகவரிக்கு சென்று மைத்ரேயியை சந்தித்து உதவி கேட்கிறாள்.

சரண்யாவிடம் தோழி போல பேசும் மைத்ரேயி, மித்ரன் எனும் பெயரை கேட்டு அதிர்ச்சி ஆகிறாள்...!

ரண்யாவின் வாழ்க்கை என்ன ஆனது? மைரேயிக்கும் மித்ரனுக்கும் நடுவே இருக்கும் உறவு என்ன? மித்ரன் இப்படி இருக்க காரணம் என்ன?

தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள் :-)

 

Published in Books