ஹாய் பிரண்ட்ஸ்,
அனைவருக்கும் வணக்கம்..இதுவரை என் கதைகளை படித்து எனக்கு ஆதரவு அளித்து என் எழுத்தில் இருந்த நிறை குறைகளை சுட்டிக்காட்டி என்னை வழி நடத்திய அனைத்து தோழமைகளுக்கும் நன்றி..
நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும் எனது அடுத்த கதையை தொடங்க இருக்கிறேன்..கதையைப் பற்றி??
என்ன கதை என்று சொல்லாமல் கொஞ்சம் சஸ்பென்ஸில் இருக்கட்டும்.. ஆனாலும் கதையின் தலைப்பிலிருந்து நீங்களே ஓரளவுக்கு யூகித்திருப்பீர்கள்...உங்கள் யூகம் சரிதானா என்று தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்..
இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான காதல் கதைதான்..எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. Happy Reading!!!
********
முன்னுரை:
பிறக்கும் போது ஏழையாக இருக்கலாம் ஆனால் இறக்கும் போதும் ஏழையாக இருந்தால் நீ ஒரு முட்டாள் என்ற வாசகத்தை மனதில் வைத்துக் கொண்டு வாழ்வில் முன்னேற துடிக்கும் கதாநாயகன் எதிர்பாராத விதமாக கதாநாயகியுடன் திருமணம் நடைபெறுகிறது.
நாயகனின் லட்சியத்திற்கும் உதவி புரிந்தும் அவனது மனதிலும் இடம் பிடிக்கவும் அவனது குடும்பத்திடம் நற்பெயர் எடுக்க கதாநாயகி எதிர்நோக்கும் பிரச்சனைகளும் இறுதியில் அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைத்ததா கதாநாயகனின் லட்சியமும் நிறைவேறியதா இல்லையா என்பதே இக்கதையாகும்.
முன்னுரை:
வாழ்க்கையில் நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என்பது எல்லாருக்கும் மிகவும் சாதாரணம். படிப்பைத் தவிர வேறொன்றும் என் நினைவில் இல்லை, நான் காதல் வசப்படமாட்டேன் என்னும் மனவுறுதி கொண்ட ரம்யா என்ற இளம்பெண்ணும், தனக்கே அவள் உரிமையானவள் என்னும் கண்மூடித்தனமான காதல் கொண்ட தினேஷ் என்ற இளைஞனும் அவர்களின் கல்லூரி நாட்களில் நடத்தும் கண்ணாமூச்சி ஆட்டம் தான் “இது ஒரு காதல் கதை”. கதையில் வரும் பெயர்களும், சம்பவங்களும் யாரையும் குறிப்பிடுவன அல்ல.
ஒ௫ Underworld கூட்டம் நகரத்தில் கால் பதிக்க திட்டம் இடுகிறது, அதன் அறிகுறி யாக ஒ௫ பிரபல தொழிலதிபரை பகிரங்கமாக கொலை செய்து, தங்கள் பலத்தை அந்த நகரில் ௨ள்ள எல்லாம் பெ௫ம் பள்ளிகளுக்கும் தெரியப்படுத்து கின்றனர், இந்த கும்பலை தடுக்கவும், அவர்களை வேரோடு ஒழிக்கவும் காவல் துறை ஒ௫ சிறப்பு அதிகாரியை நியமிக்கிறது.
அந்த சிறப்பு அதிகாரி மேற்கொண்ட விசாரணை யின் போது வெளிபட்ட மர்மங்களும், தி௫ப்பங்களும், தவ௫ செய்தவர்கள் பிடிபட்ட சுவாரசியமான சம்பவங்களம், இ௫தியில் கொலையாளி பிடிபட்டபோது ஏற்படும் தி௫ப்பங்களும் அதன் பின்னனியும், இந்த கதையின் மூலம் சமூகத்திற்கு தெரிய படுத்த வி௫ம்பும் க௫த்தம் என முற்றிலும் கர்பனையான கதை தான் இது.