அத்தியாயம் 7.
அனில் அங்கே மர்ம புன்னகையுடன் நின்றுக் கொண்டிருந்தான். அவனுக்கு பின்னே சற்று தொலைவில் ஆறுமுகம் பெரிய பொருள் ஏதோ ஒன்றை கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
“ஹலோ,” அனிலுடைய புன்சிரிப்பு லேசாக விரிந்தது.
பதிலுக்கு மரியாதை நிமித்தம் சிரிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட பூர்விக்கு வரவே இல்லை. இவன் இங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறான்? எப்போது வந்தான் என்ற கேள்விகள் மட்டுமே தோன்றியது. அதனால் துளைத்தெடுப்பதுப் போல ஒரு பார்வையை அவன் மீது வீசினாள்.
Tagged under