அத்தியாயம் 02: - He's the hero!
காரில் இருந்து இறங்கிய அறிவழகன் சோம்பலுடன் கைகளை நீட்டினான். அடர்ந்த இருட்டில் எதுவும் சரியாக தெரியவில்லை. காரின் ஹெட்லைட் தாண்டி வேறு வெளிச்சம் எதுவும் பக்கத்தில் இல்லை. சாலைகளில் விளக்கு இருந்தது. ஆனால் அதற்கும் இந்த டிரைவேயில் கார் தற்போது நிற்கும் இடத்திற்கும் சில மைல் தூரம் இருந்தது.
“என்னடா ஊரு இது? ஏர்போர்ட்ல இருந்து எவ்வளவு தூரம்? அதெல்லாம் போதாதுன்னு வழியெல்லாம் ஒரே ஹேர்பின் பென்ட் வேற. ஒரு நூறு ஹேர்பின் பென்ட்ஸ் இருக்காது? நல்ல இடத்துல வீடு செலக்ட் செய்திருக்க.”
அறிவழகனின் நண்பன் சுஜய் பதில் சொல்லாமல் அறிவழகனின் லக்கேஜை காரில் இருந்து எடுத்து வைத்தான்.
“இந்த ஊரு பேரு என்ன சொன்ன?” அறிவழகன் விடாமல் சுஜயைக் கேட்டான்.
“ஜெர்மன் வேல்லி!” என்று பதில் சொன்ன சுஜயின் விரல்கள் வேகமாக மொபைலில் டெக்ஸ்ட் செய்துக் கொண்டு இருந்தது.
சுஜய் மொபைலில் இருந்து கையை எடுத்த அடுத்த வினாடி, அந்த இடமே உயிர் பெற்று வந்ததுப் போல பிரகாசமான விளக்குகள் மின்னியது.
சட்டென்று ஜகஜோதியாக மாறி விட்ட இடத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தான் அறிவழகன்.
“என்னடா மிஸ்டர் பணக்காரன், இப்படி பார்க்குற? நான் டெக்ஸ்ட் செய்தேன்ல, என் மனைவி ஹர்ஷா லைட்ஸ் ஆன் செய்திருக்கா. அவ எல்லாத்தையும் மொபைல்ல இருந்தே கண்ட்ரோல் செய்வா... நான் இன்னும் அதெல்லாம் முழுசா கத்துக்கலை... வா நாம வீட்டுக்குள்ளே போகலாம்,” என்றான் சுஜய்!
அறிவழகன் இப்போது வெளிச்சத்தில் தெரிந்த வீடை இன்னும் சுவாரசியத்துடன் பார்த்தான். அவன் எதிர்பார்த்ததுக்கு மாறாக கம்பீரமாக நின்ற வீடு அவனின் மனதை கவர்ந்தது. இத்தனை பெரிய வீட்டை அவன் எதிர்பார்த்திருக்கவே இல்லை!
“நீ பேலஸ் வச்சிருக்கேன்னு சொல்லவே இல்லையேடா! உண்மையாவே உன் வீடு தானே???”
“அவர் வீடு இல்லாம போனா, நான் எப்படி இங்கே இருப்பேன்?” என்று அறிவழகனுக்கு பதில் சொல்லிக் கொண்டே அவர்கள் நின்ற இடத்திற்கு வந்தாள் ஹர்ஷா, சுஜயின் மனைவி.
- Bindu Vinod
- Bindu
- Vinod
- பிந்து வினோத்
- பிந்து
- வினோத்
- Family
- Romance
- Series
- Just Romance
- Tamil
- Drama
- Books