பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - பாகம் - 2 - பிந்து வினோத்
பிறந்து வளர்ந்த குடும்பத்தை பிரிந்து, புதிதாய் ஒரு பந்தத்தை கொடுக்கும் திருமணம், எல்லோருடைய வாழ்விலும் ஒரு பெரிய மாற்றம் தான்!
அப்படி சாதாரண சந்திப்பில் தொடங்கி, காதலாக மாற்றம் கொண்டு, கல்யாணத்தில் இணைந்து, குடும்பமாய் தொடரும் மஞ்சு - மனோஜின் கதையின் இரண்டாம் பாகம் இது.
இந்த இரண்டாம் பாகம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
Pottu Vaitha Vatta Nila - Part 1
அத்தியாயம் 1 - 48.
“சின்ன அபார்ட்மென்ட் தான் மஞ்சு! அட்ஜஸ்ட் செய்துக்கோ...” என்ற மனோஜை கேலி பொதிந்த ஒரு பார்வை பார்த்து விட்டு, கிச்சனை நோட்டமிட்டாள் மஞ்சு.
“கிச்சன் சின்னது தான்... நமக்கு போதும்னு நினைச்சேன்...” என்று மனோஜ் வீட்டிற்கான ஆடியோ டூரை தொடரவும், மஞ்சு இப்போது சிரிப்புடன் அவனைப் பார்த்தாள்.
மனோஜ் அவளை இம்ப்ரஸ் செய்ய விரும்புவதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது!
மனோஜ் வேலை செய்ய வந்திருக்கும் க்ளையன்டிற்கு கீழே பணி புரிய என ஏற்கனவே அவர்களின் நிறுவனத்தில் இருந்து பலரும் அங்கே சிகாகோ’வில் தங்கி இருந்தார்கள். அப்படி இந்தியர்கள் நிறைய பேர் தங்கி இருந்த இடத்திற்கு பக்கத்தில் தான் மனோஜூம் அவர்கள் தங்க அந்த அப்பார்ட்மெண்ட்டை வாடகைக்கு எடுத்திருந்தான்.
பொதுவாக, இந்தியாவில் இருந்து இப்படி புதிதாக வரும் போது, முதல் சில நாட்கள் ஹோட்டலில் தங்கி இருந்து விட்டு, பிறகு வாடகைக்கு வீடு தேடி கண்டுப்பிடிப்பார்கள். ஆனால் மனோஜிற்கு மஞ்சுவை அப்படி தனியாக ஹோட்டலில் தங்க வைக்க விருப்பமில்லை. அதற்காகவே அவர்கள் இருவரும் சிகாகோ வரும் முன்பே தன்னுடன் வேலை செய்பவர்களின் உதவியுடன் இந்த அபார்ட்மென்ட்டை கண்டுப்பிடித்திருந்தான் மனோஜ்.
அதனால் தான் ஏர்போர்ட்டில் இருந்து மனோஜ், மஞ்சு இருவரும், நேராக அந்த அப்பார்ட்மென்ட்டிற்கே வந்திருந்தார்கள்!
இந்த விபரங்கள் அனைத்தும் மஞ்சுவிற்கும் ஏற்கனவே தெரியும்... இருந்தாலும், மனோஜ் அவளுக்கு தெரியாததைப் போல மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான்...
“என்ன சிரிக்குற PBS? நான் என்ன ஜோக் சொன்னேன்?” என்று புரியாமல் கேட்டான் மனோஜ்.
“மனோஜ், எனக்கு வீடு ரொம்ப பிடிச்சிருக்கு! சின்னதா இருக்கு, பெருசா இருக்கு, அமெரிக்கால இருக்குன்னு எதுக்கும் கிடையாது! எனக்காக நீங்க வேலை மெனக்கெட்டு நாம இங்கே வரதுக்கு கூட முன்னாடியே லீஸ் அரேன்ஜ் செய்திருக்கீங்களே... அதுக்காக பிடிச்சிருக்கு!”
“உண்மையாவே பிடிச்சிருக்கா??”
“ஹ்ம்ம்...!!!! பொதுவா ட்ரேடிஷன் படி ஹீரோயின் சொல்ல வேண்டிய டையலாக்கை தான் நான் ஏற்கனவே சொல்லிட்டேனே, அப்புறம் என்ன திரும்ப கேள்வி???”
“முதல் தடவையா நாம தனியா ஒரு வீட்டுல தங்குறோம் pbs... உனக்கு பிடிக்காம போயிடக் கூடாதேன்னு எனக்கு தாட்ஸ் இருந்துட்டே இருக்கு...”
“என்னோட இந்த சிடுமூஞ்சி மேனேஜர் மனோஜோட எங்கே இருந்தாலும் எனக்கு பிடிக்கும்...!!!! நீங்க நாளைக்கு காலைலேயே வேலைக்கு போகனும்னு சொன்னீங்களே, உங்களுக்கு வேண்டியதை இப்போவே ரெடியா எடுத்து வைங்க... நான் மத்ததை பார்த்துக்குறேன்...”
“நாளைக்கு தான் ஆபீஸ் போகனும் pbs... ஆனா ஆஃப்ஷோர் டீமோட இன்னைக்கு நைட்டே மீட்டிங் இருக்கு,” என்றான் மனோஜ் பெருமூச்சுடன்!
- Bindu Vinod
- Vinod
- பிந்து வினோத்
- வினோத்
- Family
- Romance
- Tamil
- Novel
- Drama
- Books
- Bindu
- பிந்து
- Chillzee_Originals
- Series